»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சங்கவியும் நந்திதாவும் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட வந்துவிட்டனர். தனுஷ் நடிக்கும் படத்தில் சங்கவி ஆட்டம்போட, ஜனனம் படத்தில் ஏடா கூடா பாடலுக்கு நந்திதா ஆட்டம் போட்டுள்ளார்.

கர்ச்சீப் அளவு துணி கொடுத்தால் கூட போதும்.. நடிக்கிறேன் என்று மும்பையிலிருந்து இறக்குமதியாகும்நடிகைகள் முதலில் ஹீரோயினாக நடிப்பார்கள். படம் ஓடினால் அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினாகநடிப்பார்கள். படம் தோல்வியடைந்து, வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும் கவலைப்பட மாட்டார்கள். செகண்டஹீரோயின் வேடத்தில் தங்களது கவர்ச்சி சேவையைத் தொடர்வார்கள். அதுவும் இல்லையா.. இருக்கவேஇருக்கிறது ஒரு பாட்டுக்கு டான்ஸ்.

அப்படி ஹீரோயினாக அறிமுகமாகி இப்போது ஒரு பாடலுக்கு ஆடும் நிலைக்கு வந்து விட்டார் நந்திதா.ஈரநிலம்படத்தில் மனோஜுக்கு ஜோடி இவர்தான். படம் பெரிய அளவில் ஊத்திக் கொண்டதால், அடுத்து வாய்ப்புகள்இல்லை. கன்னி நிலா படத்தில் இவரை ஹீரோயினாக புக் செய்தார்கள். சில கவர்ச்சி ஸ்டில்களையும் எடுத்தார்கள்.

ஆனால், பிற விஷயங்களில் ஒத்துழைப்பு சரியில்லை என்று கழற்றிவிட்டுவிட்டு விந்தியாவைப்போட்டுவிட்டார்கள். (விந்தியாவுக்கும் பைனான்ஸ் பார்ட்டிக்கும் இடையே ஒசூர் ஹோட்டலில் நடந்தசண்டை-கூத்து தனி கதை)

இந் நிலையில் ஜனனம் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட கதாநாயகிகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்றுகேள்விப்பட்ட நந்தியா கடும் சிரமம்ப்பட்டு அந்த வாய்ப்பைப் பிடித்து விட்டார். அந்தப் பாடலில் செம ஆட்டம்போட்டுள்ளார்.

அதே போல ஹீரோயினாக அறிமுகமாகி பின்னர் கும்பலில் ஒருவராக நடித்துக் கொண்டிருக்கும் சங்கவியுமசிங்கிள் டான்சுக்கு வந்துவிட்டார்.

தனுஷ் நடிக்கும் சுள்ளான் படத்தில் கவர்ச்சி கம்மியாய் இருப்பதால் பீல் செய்த டைரக்டர் உடனே சங்கவிக்குபோன் போட, மைசூரில் இருந்து வந்திறங்கி கொடுத்த கொஞ்சூண்டு டிரஸ்ஸை மாட்டிக் கொண்டு சுள்ளானோடுரவுண்டி கட்டி ஆட்டம் போட்டாராம் சங்கவி.

இனி இதே போல சிங்கிள் டான்ஸ் கிடைத்தாலும் ஆட ரெடி என்று கோடம்பாக்கம் முழுக்க ஆள் வைத்து தகவல்சொல்லி வருகிறார் சங்கவி. சுள்ளானில் தான் போட்ட ஆட்டத்தின் ஸ்டில்ஸ் வெளியே வந்தால் தானாகவேசான்ஸ்களும் வந்து சேரும் என்று நம்புகிறார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil