»   »  திட்டு வாங்கி அழுத நடிகை

திட்டு வாங்கி அழுத நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாதாம் கீர் போல ஜில்லென்று இருக்கும் புதுமுகம் நர்கீஸுக்குள், ஒரு எரிமலைகுடியிருக்கும் போல. பார்ட்டி சட்டென டென்ஷன் ஆகி விடுகிறாராம்.

நினைத்தாலே என்ற படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வருகிறார் நர்கீஸ். லேட்டஸ்ட்தமிழ் சினிமா இலக்கணத்திற்கேற்ப குப்பென்று இருக்கிறார்.

கிளாமரில் படு ஸ்டிராங்காக இருந்தாலும், உடல் அளவில் ஆத்தா படு வீக் போல.ஒரு வேளை மெட்ராஸ் வெயில் மேடத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லையோஎன்னவோ.

ஹோட்டலிலிருந்து கிளம்பி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததுமே ரொம்ப களைத்துப்போய் விடுகிறாராம். வந்ததும், கொஞ்சம் போல ஜூஸ், இளநீர் போன்றவற்றைஉள்ளே அனுப்பி திராணியை ஏற்றிக் கொண்டு அப்புறம்தான் டேக்குக்குப்போகிறாராம்.

இப்படித்தான் நர்கீஸை வைத்துக் கொண்டு நினைத்தாலே ஷூட்டிங்கை தள்ளிக்கொண்டிருக்கிறார்களாம்.

சமீபத்தில், ஷூட்டிங்குக்கு வந்த நர்கீஸ், டென்டர் கோகோனெட்டுக்கு தயாரிப்புநிர்வாகியிடம் டெண்டர் கொடுத்துள்ளார். அவரும், ஒருவரை கூப்பிட்டு வாங்கிவருமாறு கூறியுள்ளார்.

இளநீர் வாங்கப் போனவர் கொஞ்சம் லேட்டாக வந்து விட்டார். வந்தவர் நேராகஇளநீரை நர்கீஸிடம் நீட்டியள்ளார். சூடாகிப் போய் பொறுமலுடன் காத்திருந்த நர்கீஸ்,இவ்ளோ லேட்டாகவா வர்றது, இதுல ஐஸ் போடலயா என்று இங்கிலீஷில் திட்டியபடிஇளநீரை தட்டி விட்டுள்ளார்.

இதை எதிர்பாராத இளநீர் கொண்டு வந்த யூனிட் ஊழியர், டென்ஷனாகி நர்கீஸைஒருமையில் திட்டித் தீர்த்து விட்டாராம். அவரது அபிஷேகத்தால் ஆடிப் போனநர்கீஸ், வாய் விட்டு அழ ஆரம்பித்து விட்டாராம்.

அழும் அவரையும், ஆவேசமாக சாமியாடிக் கொண்டிருந்த யூனிட் ஊழியரையும்கட்டுப்படுத்த முடியாமல் யூனிட்டே திணறிப் போய் விட்டதாம்.

இதனால் இப்போதெல்லாம் வரும்போதே ஜூஸ், இளநீர் உள்ளிட்ட ஐட்டங்களைஉள்ளே தள்ளி விட்டு சமர்த்தாக ஸ்பாட்டுக்கு வருகிறாராம் நர்கீஸ்.

ஏம்பா.. ஹீரோயினை இப்படி படுத்துறீங்க..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil