twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கன்னடத்தில் நவ்யா கேரளாக் குட்டிகள் பூராவும் கிளாமரில் கிண்டியெடுக்கிறார்களே என்று எல்லோரும்தன்னிடமே குசலம் விசாரிப்பதாக கோபப்படுகிறார் நவ்யா நாயர்.தமிழ்ப் பட ஹீரோயின்கள் கிளாமர் குளியலுக்கு மாறி ரொம்ப காலமாகிறது.எட்டு முழ புடவையை கட்டிக் கொண்டு, முழங்கை வரை மூடிய பிளவுஸ் போட்டுக்கொண்டு, முகத்தை மட்டும் பளபளவென பவுடரால் சிங்காரித்துக் கொண்டு, பட்டுப்புடவையில் டூயட் பாடிய ஹீரோயின்கள் எல்லாம் இப்போது காலாவதியாகிவிட்டார்கள்.நிக்கட்டுமா, விழட்டுமா என்று கேட்கிற அளவுக்கு துக்கடா துணியுடன்தான்இப்போது ஹீரோயின்களே இருக்கிறார்கள். அவர்களை விட மோசமாக இருக்கிறது குத்தாட்ட ராணிகளின் காஸ்ட்யூம்கள்.இதுகுறித்து நவ்யாவிடம், தமிழுக்கு வந்த அந்த கால கேரள நாயகிகள் எல்லாம் நல்லநடிப்பைக் கொடுத்தார்கள். ஆனால் இப்போது எல்லாம், எல்லாத்தையும் துறந்ததுறவிகள் போல இருக்கிறார்களே என்று கேட்டது தான் தாமதம், ஏன் எல்லோருமே என்கிட்டயே கேக்குறீங்க. (அது யாருப்பா எங்களுக்கு முன்னாடிபேஜார் பண்ணிட்டுப் போனது?) என்னோட நடிப்பு பத்தி என்னிடம் கேளுங்க நான்சொல்றேன்.ஆனால் பொத்தாம் பொதுவா எல்லோரையும் பத்தி என்னிடம் கேட்டால் எப்படிஎன்று ரொம்பவே விசனப்பட்ட நவ்யா, ஒருவழியாக கூல் ஆக தொடர்ந்துகூறுகையில், நான் நடிப்பு பலத்தை மட்டுமே நம்பியுள்ளேன். கிளாமர் எல்லாம் ஊறுகாய் மாதிரிஇருக்க வேண்டும். நானும் லேசுபாசாக கிளாமர் காட்டத்தான் செய்கிறேன். ஆனால்அதுவெல்லாம் அறுவெறுக்கிற மாதிரி இருக்காது.சில பேர் கிளாமர் காட்டுறாங்க. அதற்காக கேரள நடிகைகள் எல்லாருமே கிளாமர்தான்செய்கிறார்கள் என்று கூறி விட முடியாது. மத்தவங்க பத்தி என்னால் இதுக்கு மேலேசொல்ல முடியாது என்று கூறி விட்டு நகர்ந்து விட்டார்.தான் நடிக்கும் தமிழ்ப் படங்களிலும் சொந்தக் குரலில் பேசி அசத்தும் நவ்யா நாயர்இப்போது கன்னடத்திலும் சொந்தக் குரலில் பேசப் போகிறாராம்.இப்போது மாயக்கண்ணாடியிலும் ஆடும் கூத்திலும் சேரனுடன் நடித்து வரும் நவ்யாகன்னடத்துப் போகிறார். தமிழில் சூப்பர் ஹிட் ஆன பிதாமகன் இப்போது கன்னடத்தில் ரெடியாகிக்கொண்டிருக்கிறது. அதில் லைலா நடித்த கேரக்டரில் நவ்யாதான் நடிக்கிறார்.இப்படத்தில் தானே டப்பிங் பேசப்போவதாக கூறியுள்ளாராம் நவ்யா.அதற்காக கன்னடம் கற்றுக் கொள்ளவும் ஆரம்பித்துள்ளாராம்.ஹெளதா?

    By Staff
    |

    கேரளாக் குட்டிகள் பூராவும் கிளாமரில் கிண்டியெடுக்கிறார்களே என்று எல்லோரும்தன்னிடமே குசலம் விசாரிப்பதாக கோபப்படுகிறார் நவ்யா நாயர்.

    தமிழ்ப் பட ஹீரோயின்கள் கிளாமர் குளியலுக்கு மாறி ரொம்ப காலமாகிறது.

    எட்டு முழ புடவையை கட்டிக் கொண்டு, முழங்கை வரை மூடிய பிளவுஸ் போட்டுக்கொண்டு, முகத்தை மட்டும் பளபளவென பவுடரால் சிங்காரித்துக் கொண்டு, பட்டுப்புடவையில் டூயட் பாடிய ஹீரோயின்கள் எல்லாம் இப்போது காலாவதியாகிவிட்டார்கள்.

    நிக்கட்டுமா, விழட்டுமா என்று கேட்கிற அளவுக்கு துக்கடா துணியுடன்தான்இப்போது ஹீரோயின்களே இருக்கிறார்கள்.


    அவர்களை விட மோசமாக இருக்கிறது குத்தாட்ட ராணிகளின் காஸ்ட்யூம்கள்.

    இதுகுறித்து நவ்யாவிடம், தமிழுக்கு வந்த அந்த கால கேரள நாயகிகள் எல்லாம் நல்லநடிப்பைக் கொடுத்தார்கள். ஆனால் இப்போது எல்லாம், எல்லாத்தையும் துறந்ததுறவிகள் போல இருக்கிறார்களே என்று கேட்டது தான் தாமதம்,

    ஏன் எல்லோருமே என்கிட்டயே கேக்குறீங்க. (அது யாருப்பா எங்களுக்கு முன்னாடிபேஜார் பண்ணிட்டுப் போனது?) என்னோட நடிப்பு பத்தி என்னிடம் கேளுங்க நான்சொல்றேன்.

    ஆனால் பொத்தாம் பொதுவா எல்லோரையும் பத்தி என்னிடம் கேட்டால் எப்படிஎன்று ரொம்பவே விசனப்பட்ட நவ்யா, ஒருவழியாக கூல் ஆக தொடர்ந்துகூறுகையில்,


    நான் நடிப்பு பலத்தை மட்டுமே நம்பியுள்ளேன். கிளாமர் எல்லாம் ஊறுகாய் மாதிரிஇருக்க வேண்டும். நானும் லேசுபாசாக கிளாமர் காட்டத்தான் செய்கிறேன். ஆனால்அதுவெல்லாம் அறுவெறுக்கிற மாதிரி இருக்காது.

    சில பேர் கிளாமர் காட்டுறாங்க. அதற்காக கேரள நடிகைகள் எல்லாருமே கிளாமர்தான்செய்கிறார்கள் என்று கூறி விட முடியாது. மத்தவங்க பத்தி என்னால் இதுக்கு மேலேசொல்ல முடியாது என்று கூறி விட்டு நகர்ந்து விட்டார்.

    தான் நடிக்கும் தமிழ்ப் படங்களிலும் சொந்தக் குரலில் பேசி அசத்தும் நவ்யா நாயர்இப்போது கன்னடத்திலும் சொந்தக் குரலில் பேசப் போகிறாராம்.

    இப்போது மாயக்கண்ணாடியிலும் ஆடும் கூத்திலும் சேரனுடன் நடித்து வரும் நவ்யாகன்னடத்துப் போகிறார்.


    தமிழில் சூப்பர் ஹிட் ஆன பிதாமகன் இப்போது கன்னடத்தில் ரெடியாகிக்கொண்டிருக்கிறது. அதில் லைலா நடித்த கேரக்டரில் நவ்யாதான் நடிக்கிறார்.இப்படத்தில் தானே டப்பிங் பேசப்போவதாக கூறியுள்ளாராம் நவ்யா.

    அதற்காக கன்னடம் கற்றுக் கொள்ளவும் ஆரம்பித்துள்ளாராம்.

    ஹெளதா?

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X