தங்கர்பச்சான் மீது பாயும் நடிகைகள்! நடிகைகள் குறித்து தாறுமாறாக பேசி வருவதால், இயக்குனர் தங்கர்பச்சான் மீது நடிகர் சங்கம் கடுப்பாகியுள்ளது. தங்கர்பச்சானும், சர்ச்சையும் கூடப் பிறந்தவர்கள். இரண்டு பேரையும் பிரிப்பது ரொம்ப கஷ்டம். சர்ச்சையை எப்படியாவதுகஷ்டப்படடு இழுத்து வந்துவிடுவார் தங்கர். அதற்கு அவருக்கு பெரும் துணை புரிவது அவரது வாய். சமீப காலமாகதங்கர்பச்சான் பல்வேறு சிக்கல்களில் மாட்டி சிக்கி வருகிறார்.முதலில் இயக்குனர் சேரனை கடுமையாக சாடினார். பதிலுக்கு தங்கர் மீது சேரனும் பாய்ந்தார். குருவி கொடஞ்ச கொய்யா பழம்என்று இரட்டை அர்த்த பாடலை படத்தில் வைத்த தங்கர்பச்சான் ரொம்ப யோக்கியம் போல பேசக் கூடாது என்று சேரன் தாக்கோதாக்கு என்று தாக்கினார்.இதையடுத்து திடீரென இரண்டு பேரும் சமாதானமடைந்து, சொல்ல மறந்த கதை படத்தில் சேரனையே நடிக்க வைத்தார்தங்கர்பச்சான் என்பது தனிக்கதை. இப்போதும் இருவரும் நல்ல நண்பர்களாகவே உள்ளனர்.தங்கர் போட்டுக் கொடுத்த பாதையில் இப்போது சேரன் வெற்றிக் கொடி நாட்டி நடந்து கொண்டிருக்கிறார். சேரன் விவகாரம்முடிந்துவிட்டாலும் அதைத் தொடர்ந்து வரிசையாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் தங்கர்.அவரது சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் நடிக்க ஒரு முன்னணி நடிகையும் முன் வரவில்லை என்பதால் நடிகைகள் மீதுகடுமையாக பாய்ந்தார் தங்கர். பிள்ளைக்கு அம்மாவாக நடிக்க விரும்பாத நடிகைகள் என்று சொல்லி வாய்க்கு வந்தபடிவெளுத்து வாங்கினார் தங்கர்.கடைசியில் கிடைத்த நவ்யா நிாயரை வைத்துப் படம் எடுத்தார். அவரும் தங்கரிடமிருந்து தப்பவில்லை. தனது ஹேர்டிரஸ்ஸருக்கு 600 ரூபாய் பணம் மிச்சம் வைத்துவிட்டதாகக் கூறி ஷூட்டிங்கை நிறுத்தியதால் நவ்யா நாயரை பத்திரிக்கைகள்வாயிலாக வெளிப்படையாகவே திட்டித் தீர்த்தார் தங்கர்.இவ்வாறு நடிகைகள் குறித்து தங்கர்பச்சான் தொடர்ந்து மிகக் கடுமையாக பேசி வருவதால் நடிகர் சங்கத்தில் பல்வேறுநடிகர்களும், நடிகைகளும் புகார் கூறியுள்ளனர். தங்கர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள்கோரியுள்ளனர். இதையடுத்து தங்கர்பச்சான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்சம்மேளனம் (ஃபெப்சி) ஆகியவற்றுக்கு நடிகர் சங்கம் பரிந்துரை அனுப்பியுள்ளது.

By Staff

நடிகைகள் குறித்து தாறுமாறாக பேசி வருவதால், இயக்குனர் தங்கர்பச்சான் மீது நடிகர் சங்கம் கடுப்பாகியுள்ளது.

தங்கர்பச்சானும், சர்ச்சையும் கூடப் பிறந்தவர்கள். இரண்டு பேரையும் பிரிப்பது ரொம்ப கஷ்டம். சர்ச்சையை எப்படியாவதுகஷ்டப்படடு இழுத்து வந்துவிடுவார் தங்கர். அதற்கு அவருக்கு பெரும் துணை புரிவது அவரது வாய். சமீப காலமாகதங்கர்பச்சான் பல்வேறு சிக்கல்களில் மாட்டி சிக்கி வருகிறார்.

முதலில் இயக்குனர் சேரனை கடுமையாக சாடினார். பதிலுக்கு தங்கர் மீது சேரனும் பாய்ந்தார். குருவி கொடஞ்ச கொய்யா பழம்என்று இரட்டை அர்த்த பாடலை படத்தில் வைத்த தங்கர்பச்சான் ரொம்ப யோக்கியம் போல பேசக் கூடாது என்று சேரன் தாக்கோதாக்கு என்று தாக்கினார்.


இதையடுத்து திடீரென இரண்டு பேரும் சமாதானமடைந்து, சொல்ல மறந்த கதை படத்தில் சேரனையே நடிக்க வைத்தார்தங்கர்பச்சான் என்பது தனிக்கதை. இப்போதும் இருவரும் நல்ல நண்பர்களாகவே உள்ளனர்.

தங்கர் போட்டுக் கொடுத்த பாதையில் இப்போது சேரன் வெற்றிக் கொடி நாட்டி நடந்து கொண்டிருக்கிறார். சேரன் விவகாரம்முடிந்துவிட்டாலும் அதைத் தொடர்ந்து வரிசையாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் தங்கர்.

அவரது சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் நடிக்க ஒரு முன்னணி நடிகையும் முன் வரவில்லை என்பதால் நடிகைகள் மீதுகடுமையாக பாய்ந்தார் தங்கர். பிள்ளைக்கு அம்மாவாக நடிக்க விரும்பாத நடிகைகள் என்று சொல்லி வாய்க்கு வந்தபடிவெளுத்து வாங்கினார் தங்கர்.


கடைசியில் கிடைத்த நவ்யா நிாயரை வைத்துப் படம் எடுத்தார். அவரும் தங்கரிடமிருந்து தப்பவில்லை. தனது ஹேர்டிரஸ்ஸருக்கு 600 ரூபாய் பணம் மிச்சம் வைத்துவிட்டதாகக் கூறி ஷூட்டிங்கை நிறுத்தியதால் நவ்யா நாயரை பத்திரிக்கைகள்வாயிலாக வெளிப்படையாகவே திட்டித் தீர்த்தார் தங்கர்.

இவ்வாறு நடிகைகள் குறித்து தங்கர்பச்சான் தொடர்ந்து மிகக் கடுமையாக பேசி வருவதால் நடிகர் சங்கத்தில் பல்வேறுநடிகர்களும், நடிகைகளும் புகார் கூறியுள்ளனர். தங்கர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள்கோரியுள்ளனர்.

இதையடுத்து தங்கர்பச்சான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்சம்மேளனம் (ஃபெப்சி) ஆகியவற்றுக்கு நடிகர் சங்கம் பரிந்துரை அனுப்பியுள்ளது.

Read more about: thankar bachan in trouble
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X