நவ்யாவை விரட்டும் தங்கர்! தனது பள்ளிக்கூடம் படத்தில் நவ்யா நாயரை நடிக்க வைக்க அவரை தொடர்ந்து நச்சுபண்ணி வருகிறாராம் தங்கர்பச்சான்.சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தை தங்கர் உருவாக்கியபோது நவ்யா நாயரால்ஏகப்பட்ட பிரச்சினைகள் வந்தன.நவ்யாவின் மேக்கப் பெண்ணுக்கு சம்பளம் கொடுக்காததால் கோபமடைந்த நவ்யா,அவரது சம்பளப் பாக்கியை செட்டில் செய்தால்தான வருவேன் என்று கூறிஷூட்டிங்குக்கு வராமல் டபாய்த்தார்.இதனால் கோபமடைந்த தங்கர், நடிகைகள் பற்றி குண்டக்க மண்டக்க காமெண்ட்அடித்து கடைசியில் நடிகர் சங்கத்திற்குப் போய் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டியதாயிற்று.இந்தப் பஞ்சாயத்து முடிந்து படம் வெளியாகி ஒரு ஓட்டமும் ஓடி விட்ட நிலையில்இப்போது நவ்யா நாயரை தான் ரொம்ப நொம்பலப்படுத்தி விட்டதாகநெருங்கியவர்களிடம் வருத்தப்படுகிறாராம் தங்கர்.நவ்யாவை நான் ரொம்ப நோக வைத்து விட்டேன். அவர் நல்ல நடிகை, எனக்குதங்கச்சி போல அவர். அவருக்கு செய்த பாவத்திற்குப் பிராயச்சித்தமாக அடுத்தபடத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப் போகிறேன் என்று கூறுகிறாராம் தங்கர்.தான் அடுத்து இயக்கவுள்ள பள்ளிக்கூடம் படத்தில் நீ நிச்சயமாக நடிக்க வேண்டும்என்று நவ்யாவை துரத்தி வருகிறாரம் தங்கர்.ஆனால் தங்கரிடம் முன்பு பட்ட பாட்டை நினைத்துப் பார்த்து, அவருக்கு என்ன பதில்கூறுவது என்று தெரியாமல் அவரிடமிருந்து எஸ் ஆகி வருகிறாராம் நவ்யா.தங்கர் படத்தில் நவ்யா மீண்டும் நடிக்க மாட்டார் என்றே கோலிவுட்டில்சொல்கிறார்கள்.இல்லை இல்லை, நிச்சயம் நவ்யா நடிப்பார். அவர் மறுத்தால் சேரன் மூலமாகமுயற்சித்த்தாவது நிச்சயம் நடிக்க வைப்பேன் என்கிறார் தங்கர்.
சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தை தங்கர் உருவாக்கியபோது நவ்யா நாயரால்ஏகப்பட்ட பிரச்சினைகள் வந்தன.
நவ்யாவின் மேக்கப் பெண்ணுக்கு சம்பளம் கொடுக்காததால் கோபமடைந்த நவ்யா,அவரது சம்பளப் பாக்கியை செட்டில் செய்தால்தான வருவேன் என்று கூறிஷூட்டிங்குக்கு வராமல் டபாய்த்தார்.
இதனால் கோபமடைந்த தங்கர், நடிகைகள் பற்றி குண்டக்க மண்டக்க காமெண்ட்அடித்து கடைசியில் நடிகர் சங்கத்திற்குப் போய் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டியதாயிற்று.
நவ்யாவை நான் ரொம்ப நோக வைத்து விட்டேன். அவர் நல்ல நடிகை, எனக்குதங்கச்சி போல அவர். அவருக்கு செய்த பாவத்திற்குப் பிராயச்சித்தமாக அடுத்தபடத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப் போகிறேன் என்று கூறுகிறாராம் தங்கர்.
தான் அடுத்து இயக்கவுள்ள பள்ளிக்கூடம் படத்தில் நீ நிச்சயமாக நடிக்க வேண்டும்என்று நவ்யாவை துரத்தி வருகிறாரம் தங்கர்.
ஆனால் தங்கரிடம் முன்பு பட்ட பாட்டை நினைத்துப் பார்த்து, அவருக்கு என்ன பதில்கூறுவது என்று தெரியாமல் அவரிடமிருந்து எஸ் ஆகி வருகிறாராம் நவ்யா.
இல்லை இல்லை, நிச்சயம் நவ்யா நடிப்பார். அவர் மறுத்தால் சேரன் மூலமாகமுயற்சித்த்தாவது நிச்சயம் நடிக்க வைப்பேன் என்கிறார் தங்கர்.


Click it and Unblock the Notifications