twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பகல் நிலவு சத்யராஜ் கதாப்பாத்திரம்தான் நாயகன் வேலு நாயக்கரின் டிரைலர்

    |

    சென்னை: கமல் ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் 1987-ஆம் ஆண்டு வெளிவந்து கல்ட் கிளாசிக் திரைப்படமாக விளங்கக் கூடிய படம் நாயகன். இந்தப் படம் வெளி வந்து முப்பத்தி ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சி நடைபெற்றது

    இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்வில் பல்வேறு சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் மணிரத்னம். வீடியோ வாயிலாக இயக்குநர் வெற்றிமாறனும் அதில் கலந்து கொண்டு கேள்விகள் கேட்டது குறிப்பிடத்தக்கது.

    குறிப்பாக அந்தப் படம் எடுக்கும் முன்னர் தலைமறைவாக இருந்த வரதராஜ முதலியாரை தான் அவரது வீட்டில் வைத்தே சந்தித்தத தருணங்களை மணிரத்னம் அந்த நிகழ்வில் பகிர்ந்து கொண்டார்.

    ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களை இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை பார்த்திபன் வேதனை!ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களை இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை பார்த்திபன் வேதனை!

     வரதராஜ முதலியார்

    வரதராஜ முதலியார்

    1960-களிலிருந்து 80-கள் வரை மும்பையில் ஒரு மாஃபியாவாக இருந்தவர்தான் வரதராஜ முதலியார். மணிரத்னம் மும்பையில் படிக்கும்போதுதான் முதன் முதலில் அவரைப் பற்றி கேள்விப்பட்டுள்ளார். தமிழ் மக்களின் செல்வாக்கோடு அங்கு ஒரு தனி ராஜ்ஜியமே நடத்திக் கொண்டிருந்தது மணிரத்னத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

     பகல் நிலவு சத்யராஜ்

    பகல் நிலவு சத்யராஜ்

    நாயகன் வேலு நாயக்கர் வரதராஜ கதாப்பாத்திரத்தின் திரை வடிவம் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன்னர் நீங்கள் இயக்கியிருந்த பகல் நிலவு படத்தில் இருந்த சத்யராஜ் கதாப்பாத்திரமும் அதே சாயலில் இருந்ததே. அதுவும் அவரை மையப்படுத்தி எழுதப்பட்ட கதாப்பாத்திரமா என்று இயக்குநர் கௌதம் கேட்க, அந்தப் படம் எடுக்கும் சமயத்தில் அவரை நினைத்து எழுதவில்லை, ஆனால் மும்பையில் அவர் தனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, தன்னை அறியாமல் அவரைப் போலவே உருவாக்கியதுதான் சத்யராஜ் கதாப்பாத்திரம் என்று மணிரத்னம் கூறியுள்ளார்.

     வரதராஜ முதலியாரும் தமிழ் சினிமாவும்

    வரதராஜ முதலியாரும் தமிழ் சினிமாவும்

    நாயகன் திரைப்படத்தை தொடர்ந்து வேறு சில தமிழ்ப் படங்களிலும் அவரை இன்ஸ்பிரேஷனாக வைத்து கதாப்பாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. தொட்டால் பூ மலரும் படத்தில் ராஜ் கிரன் நடித்த வரதராஜன் வாண்டையார், தலைவா படத்தில் சத்யராஜ் கதாப்பாத்திரம், யாகாவர் ஆயினும் நா காக்க படத்தில் மிதுன் கதாப்பாத்திரம், காலாவில் ரஜினிகாந்த் கதாப்பாத்திரங்கள் வரதராஜரை அடிப்படையாக வைத்துதான் எழுதப்பட்டவை.

    Recommended Video

    Sathyaraj | சின்னத்திரை Serial-லில் Sathyaraj-ஐ பார்க்க ரசிகர்கள் ஆர்வம்! *TV | Filmibeat Tamil
     ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது

    ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது

    ஃபாரின் திரைப்பட பிரிவில் ஒவ்வொரு நாடும் ஆஸ்கர் விருதுக்கு தங்கள் நாட்டு திரைப்படத்தை அனுப்பும். அந்த வகையில் 1987 ஆண்டிற்காக, இந்தியா தேர்வு செய்தது நாயகன் படத்தைதான். தமிழில் முதல் கமல் படம் என்றாலும், அதற்கு முன்னர் 1985 மற்றும் 1986-ல் அனுப்பப்பட்ட இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களும் கமல் நடித்தவை என்பது கூடுதல் தகவல்.

    English summary
    Nayagan Velu Nayakkar Trailer is Same as Pagal Nilavu Sathyaraj Character Says Maniratinam
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X