»   »  இவர் நயன கிருஷ்ணா!

இவர் நயன கிருஷ்ணா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காதலை அழகாக காட்ட முடியும். கள்ளக் காதலை எப்படிக் காட்டுவது? அதைத்தான் ரம்பா படத்தில் காட்டியிருக்கிறார்கள். கன்னடத்தில்வெளியான இப்படம் தமிழிலும் அதே பெயரில் வெளியாகிறது.

வசந்த்-சாவந்த் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ராமமூர்த்தி என்பவர் இயக்கியுள்ளார். தனிக்குடித்தனம் வரும் இளம் ஜோடியின்வாழ்க்கையை திருட்டுத்தனமாக ரசித்து மகிழும் 16 வயது பெண்ணின் கதை தான் படம்.

இந்த 16 வயது பாவையாக நடிப்பது நயன கிருஷ்ணா என்ற ரம்ய அழகி. இவர் தான் ரம்பா என்ற கேரக்டரில் அசத்தியுள்ளாராம். கன்னடத்தில்ஐந்து படங்களில் நடித்த அனுபவசாலி நயன கிருஷ்ணா.

பெயருக்கேற்ப படு நயனமாக, நளினமாக இருக்கிறார். படத்தில் இவருக்கு கிளாமர் காட்சிகள் ஏராளம், எக்கச்சக்கமாகவும் நடித்துகிறங்கடித்துள்ளார்.

நயனகிருஷ்ணாவுக்கு குடும்பப் பாங்கான ரோலில் நடிப்பது என்றால் புளிப்பு மிட்டாய் சாப்பிடுவது போலவாம், கிளாமர் ரோல்கள் என்றால்ஜிலேபி சாப்பிடுவது போல தித்திப்பாக இருக்குமாம்.

கிளாமர் காட்சிகளை வைக்க வசதியான, கேரக்டர் என்பதால் நயனகிருஷ்ணாவை ரொம்பவே வேலை வாங்கியுள்ளார் டைரக்டர்.

இவர் தவிர சந்தியா ராணி என்ற இன்னொரு ஹீரோயினும் உண்டு. அதேபோல படத்தில் வில்லன் கிடையாது, வில்லிதான். மலையாள நடிகைபத்மினிதான் வில்லியாக வருகிறார்.

வரம்பு மீறாமல், கலாச்சாரத்தை காவு கொடுக்காமல் எடுக்கப்பட்ட படம் என்று இயக்குநர் கூறினாலும், கிளாமர் காட்சிகளைப் பார்த்தால்எதையெல்லாம் மீறினார்கள் என்பதை பட்டியலிட்டு காட்டலாம் போலத் தெரிகிறது.

இளசுகளை குறி வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால், விசிலடிச்சான் குஞ்சுகளை நம்பி அடுத்த மாதம் திரையிடுகிறார்கள்.

ஏற்கனவே நயனதாரா வந்து தமிழை ஒரு கலக்கு கலக்கி விட்டுப் போனார். இப்போது நயனகிருஷ்ணா வருகிறார், பசங்களா உஷார்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil