»   »  நயனாவைக் காக்கும் கனபாடிகள்

நயனாவைக் காக்கும் கனபாடிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிம்புவுடன் காதலில் விழுந்து, பின்னர் மோதலில் நுழைந்து, காதல் முறிந்து, தெலுங்கில் அடைக்கலம் புகுந்துள்ளநயனதாரா , அவர் நடித்தும் வரும் படத்தின் தயாரிப்பாளரின் முழுப் பாதுகாப்பில் உள்ளாராம்.

சிம்பு சங்காத்தமே வேண்டாம் என கூறி விட்ட நயனதாரா இப்போது தெலுங்கில் பிரபாஸுடன் ஜோடி போட்டுயோகி என்ற படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத்தில் முகாமிட்டு நடித்து வரும் நயனதாரா பேசாமல்இங்கேயே செட்டிலாகி விடலாமா என்று யோசித்து வருகிறாராம்.

சிம்புவின் டாடியான தாடி தொலைபேசியில் விடுத்த மிரட்டலிலிருந்து இன்னும் நயனதாரா மீளவில்லையாம்.அந்தப் பிரச்சினையயை படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திர ரெட்டி சரி செய்து விட்டாலும் கூட நயனதாரா இன்னும்மிரட்சியில் இருப்பதால், அவருக்கு அன்பாகவும், அரவணைப்பாகவும் ரெட்டி இருக்கிறாராம்.

நயனதாராவின் பாதுகாப்புக்காக 2 செக்யூரிட்டி ஆட்களை நிரந்தரமாகப் போட்டுள்ளார். சபாரி சூட்டில்ஆஜானுபாகுவாக காட்சி தரும் இவர்கள் எப்போதும் நயனதாரா கூடவே இருக்கிறார்களாம். செட்டுகளில்அறிமுகம் இல்லாத யாரும் நயனதாராவை சந்திக்க இந்த கனபாடிகள் அனுமதிப்பதில்லை.

இந்தப் படத்தை முடித்து விட்டு சொந்த ஊருக்குப் போய் அச்சன், அம்மையைப் பார்த்து மனம் விட்டு அழுதுவிட்டு வரலாம் என்றிருக்கிறாராம் நயனதாரா. அப்போதுதான் அடுத்தடுத்து படங்களில் நடிக்க எனர்ஜிகிடைக்கும் என்பது நயனாவின் எண்ணம்.

சிம்புவை வெட்டிவிட்ட பின் தமிழிலும் அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தவண்ணம் தான் உள்ளன. ஆனால்தெலுங்கில் நடித்து வருவதால தமிழ்ப் படங்களை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளாராம் நயனதாரா.

ஒரு காதலால் எவ்வளவு பிரச்சனை...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil