»   »  சிம்பு-நயன் கிஸ்ஸுக்கு கட்!

சிம்பு-நயன் கிஸ்ஸுக்கு கட்!

Subscribe to Oneindia Tamil

வல்லவன் படத்தில் நயனதாரா, சிம்பு சம்பந்தப்பட்ட குண்டக்க மண்டக்க முத்தக்காட்சிகளுக்கு சென்சார் போர்டு தடை போட்டு விட்டது.

இதனால் பல முத்தக் காட்சிகளை சிம்பு வெட்டி விட்டாராம்.சிம்புவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வல்லவன். இதில் சிம்புவுக்கு ஜோடியாகநயனதாரா, ரீமா சென், சந்தியா ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவடைந்துதீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகிறது.

ஆனால் திடீரென தனக்கு சம்பளப் பாக்கி இருப்பதாக நடிகர் சங்கத்தில் சிம்பு புகார்கொடுத்ததால் படம் வருமா, வராதா என்ற குழப்பம் ஏற்பட்டது. சிம்புவின் புகாரைப்பெற்ற நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், துணைத் தலைவர் விஜயக்குமார்,தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம. நாராயணன், சிம்பு, தந்தை டி.ராஜேந்தர்,தாயார் உஷா, வல்லவன் தயாரிப்பாளர் தேனப்பன் ஆகியோர் நேற்று நடிகர் சங்கத்தில்பேச்சுவார்த்தை நடத்தினர்.

இரவு 9 மணிக்கு ஆரம்பித்த பேச்சுவார்ததை நள்ளிரவு வரை நீண்டது. இந்தப்பேச்சுவார்த்தையில், சிம்பு தனதுசம்பளத்தில் ரூ. 60 லட்சத்தை விட்டுக் கொடுக்க முடிவானது. மேலும்இயக்குநருக்கான சம்பளத்தையும் அவர் விட்டுக்கொடுத்தார். இதையடுத்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.

திட்டமிட்டபடி வல்லவன் தீபாவளிக்கு திரைக்கு வருகிறான். இதற்கிடையேவல்லவன் படத்தை சென்சார் போர்டுக்குதணிக்கைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது சிம்புவும், நயனதாராவும் படத்தில்அடிக்கடி முத்தமிடுவது போலகாட்சிகள் வருவதற்கு தணிக்கைக் குழுவினர் ஆட்சேபனை தெரிவித்தனர்.

முத்தக் காட்சிகளை குறைக்க வேண்டும் என்று சிம்புவிடம் கூற அவரும் சம்மதம்தெரிவித்தார். இதையடுத்து பல முத்தக் காட்சிகளை வெட்டி எடுத்து விட்டனர்.இதைத் தொடர்ந்து படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil