நங்கூரம் பாய்ச்சும் நயனதாரா மலையாளத்து நயனதாரா தமிழ் வழியாக இப்போது ஆந்திராவில் நங்கூரம் பாய்ச்சிநச் சென்று செட்டிலாகப் போகிறார்.ஐயா நாயகி நயனதாரா படு வேகமாக தமிழில் முன்னேறி வந்தார். அவரை தங்களதுபடங்களில் நடிக்க வைக்க ஹீரோக்களிடேயே கடும் போட்டா போட்டியே நடந்தது.ஆனால் ஸ்பீடு பிரேக்கர் கணக்காக சிம்புவுடன் காதலில் சிக்கினார் நயனதாரா.அத்தோடு தமிழில் படங்களைக் குறைத்துக் கொண்டு விட்டார். வல்லவன்,தலைமகன், ஈ என சில படங்களில் மட்டுமே நயனதாரா நடித்து வருகிறார். இந்தமூன்று படங்களுமே ரொம்ப நாட்களாக தயாரிப்பில் இருந்து வருகின்றன.அதே நேரத்தில் தெலுங்கில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் நயன். அங்கும்கதாநாயகர்கள் நயனதாரா கிரேஸ் பிடித்து அலைவதால் அதை அப்படியே துட்டாகமாற்றும் வேலையில் தீவிரமாக இருக்கிறார் இந்த சேச்சி.இதனால் தமிழை விட தெலுங்குப் படங்களுக்கே முக்கியத்துவம் தந்து வருகிறார்.அங்கு நயனின் சம்பளம் அரை கோடியை தொட்டுக் கொண்டிருப்பதாகசொல்கிறார்கள்.இப்போது ரம்யா கிருஷ்ணன் ஆத்துக்காரர் கிருஷ்ணவம்சி இயக்கத்தில் உருவாகும்புதிய படத்தில் ரவிதேஜாவுக்கு ஜோடியாக நடிக்கவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்நயனதாரா.ஏற்கனவே நாகார்ஜூனாவுடன் இணைந்து நயன் நடித்துள்ள பாஸ் என்ற படம்விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இதைத் தொடர்ந்து பிரபாஸ் ஜோடியாக யோஎன்ற படத்திலும் நடிக்கிறார் நயனதாரா. கன்னடத்தில் வெளியான ஜோகி படத்தின்ரீமேக்தான் இது.மேலும் தெலுங்கு ஹீரோ வெங்கடேஷுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்நயன்.இப்படியாக தொடர்ந்து ஏகப்பட்ட படங்களை வாரிப் போட்டுக் கொண்டிருக்கும்நயனதாரா தெலுங்கில் நங்கூரம் பாய்ச்ச ஆரம்பித்துள்ளார்.இதனால் த்ரிஷாக்களும், ஆசின்களும், தமன்னாக்களும், இலியானாக்களும்பேயறைந்து போய்க் கிடக்கின்றனர்.போற வேகத்தைப் பார்த்தால் தமிழுக்கு குட்பை சொல்லி விட்டுஹைதராபாத்திலேயே வாசம் புரிய ஆரம்பித்து விடுவார் போலிருக்கிறது நயனதாரா.

By Staff
மலையாளத்து நயனதாரா தமிழ் வழியாக இப்போது ஆந்திராவில் நங்கூரம் பாய்ச்சிநச் சென்று செட்டிலாகப் போகிறார்.

ஐயா நாயகி நயனதாரா படு வேகமாக தமிழில் முன்னேறி வந்தார். அவரை தங்களதுபடங்களில் நடிக்க வைக்க ஹீரோக்களிடேயே கடும் போட்டா போட்டியே நடந்தது.ஆனால் ஸ்பீடு பிரேக்கர் கணக்காக சிம்புவுடன் காதலில் சிக்கினார் நயனதாரா.

அத்தோடு தமிழில் படங்களைக் குறைத்துக் கொண்டு விட்டார். வல்லவன்,தலைமகன், ஈ என சில படங்களில் மட்டுமே நயனதாரா நடித்து வருகிறார். இந்தமூன்று படங்களுமே ரொம்ப நாட்களாக தயாரிப்பில் இருந்து வருகின்றன.

அதே நேரத்தில் தெலுங்கில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் நயன். அங்கும்கதாநாயகர்கள் நயனதாரா கிரேஸ் பிடித்து அலைவதால் அதை அப்படியே துட்டாகமாற்றும் வேலையில் தீவிரமாக இருக்கிறார் இந்த சேச்சி.


இதனால் தமிழை விட தெலுங்குப் படங்களுக்கே முக்கியத்துவம் தந்து வருகிறார்.அங்கு நயனின் சம்பளம் அரை கோடியை தொட்டுக் கொண்டிருப்பதாகசொல்கிறார்கள்.

இப்போது ரம்யா கிருஷ்ணன் ஆத்துக்காரர் கிருஷ்ணவம்சி இயக்கத்தில் உருவாகும்புதிய படத்தில் ரவிதேஜாவுக்கு ஜோடியாக நடிக்கவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்நயனதாரா.


ஏற்கனவே நாகார்ஜூனாவுடன் இணைந்து நயன் நடித்துள்ள பாஸ் என்ற படம்விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இதைத் தொடர்ந்து பிரபாஸ் ஜோடியாக யோஎன்ற படத்திலும் நடிக்கிறார் நயனதாரா. கன்னடத்தில் வெளியான ஜோகி படத்தின்ரீமேக்தான் இது.

மேலும் தெலுங்கு ஹீரோ வெங்கடேஷுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்நயன்.


இப்படியாக தொடர்ந்து ஏகப்பட்ட படங்களை வாரிப் போட்டுக் கொண்டிருக்கும்நயனதாரா தெலுங்கில் நங்கூரம் பாய்ச்ச ஆரம்பித்துள்ளார்.

இதனால் த்ரிஷாக்களும், ஆசின்களும், தமன்னாக்களும், இலியானாக்களும்பேயறைந்து போய்க் கிடக்கின்றனர்.

போற வேகத்தைப் பார்த்தால் தமிழுக்கு குட்பை சொல்லி விட்டுஹைதராபாத்திலேயே வாசம் புரிய ஆரம்பித்து விடுவார் போலிருக்கிறது நயனதாரா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X