»   »  போனில் கூட வராத நயனதாரா

போனில் கூட வராத நயனதாரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

நயனதாரா தன்னை விட்டுப் பிரிந்து போனதால் நெருங்கிய நண்பர்களிடம் கேவிக்கேவி அழுது தனது துக்கத்தை பகிர்ந்து கொண்டுள்ளாராம் சிம்பு.

வல்லவன் படத்தில் நடித்தபோது நயனதாராவுக்கும், சிம்புவுக்கும் இடையே ஏற்பட்டஜெட் வேக காதல் ஃபைடர் ஜெட் வேகத்தில் உடைந்துவிட்டது.

சிம்புவும், நானும் பிரிந்து விட்டோம், அவரவர் பாதையில் பயணிக்கப் போகிறோம்என நயனதாரா கூறி விட்டார். நயனதாரா இந்த பிரிவை அறிவித்தபோது, சிம்புஅமெரிக்காவில் இருந்தார். மேலும் இந்தப் பிரிவையொட்டி வந்த தனது பிறந்தநாளை தெலுங்கு புரொடியூசர், டைரக்டருடன் மகிழ்ச்சியாக கொண்டாடினார் நயனா.

இந் நிலையில், நயனதாரவின் தடாலடி பிரிவு சிம்புவை வெகுவாக பாதித்துள்ளதாம்.தனக்கு நெருக்கமானவர்களிடம் நயனதாராவுக்கும், தனக்கும் இடையேயான நட்பைகூறி அவர் கேவிக் கேவி அழுது புலம்பியுள்ளார்.

அவர்களிடம் இதுகுறித்து சிம்பு கூறுகையில், நீ என் பிள்ளை இல்லை என்று எனதுதந்தை திடீரென கூறினால் எப்படி இருக்கும்? அதே உணர்வுதான் இப்போதுநயனதாரா சொல்லியபோதும் எனக்கும் இருந்தது. அவருடன் நான் செல்போனில்பேச முயன்றேன். முடியவில்லை.

இத்தனை நாட்கள் நன்றாகப் பழகி விட்டு இப்போது திடீரென அவர் பிரிந்துபோனதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ஜீரணிக்கவேமுடியவில்லை. என்னால் பல பட வாய்ப்புகள் நழுவிப் போனதாக அவர் குறைகூறியுள்ளார். நானும் பதிலுக்குக் குறை கூறலாம்.

ஆனால் நான் விரும்பவில்லை. அவருக்கு நறையப் பட வாய்ப்புகள் இனி வரட்டும்.அவர் எங்கிருந்தாலும் வாழ்க என்று மட்டுமே இப்போது என்னால் கூற முடியும்.

நீ இல்லாட்டா உயிரை விட்டுவிடுவேன் என தனது கையில் பிளேடால் குத்திக்கிழித்துக் கொண்டு கதறியதையும், என்னைக் கட்டிப் பிடித்து அழுததையும் அவர்எப்படி மறந்தார் என்பது தெரியவில்லை. அதை நான் மறக்கவில்லை, மறக்கவும்மாட்டேன். எனக்கு மட்டும் ஏன்தான் இப்படியெல்லாம் நடக்கிறதோ என்று கூறிகேவிக் கேவி அழுதுள்ளார் சிம்பு.

காலம், காயம் ஆற்றும் சிம்பு..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil