சிம்புவை மணப்பதில் சிக்கலில்லை- நயனதாரா சிம்புவை மணப்பதில் எங்களது வீடுகளில் எதிர்ப்பு இருக்காது. ஆனாலும்இப்போதைக்கு கல்யாணம் கிடையாது என்று முதல் முறையாக சிம்பு குறித்துதிருவாய் மலர்ந்துள்ளார் நயனதாரா.நெகு நெகு நாயகி நயனதாராவுக்கும், விரல் வித்தையாளன் சிம்புவுக்கும் இடையேநட்பு அதிகமாகி, கல்யாணம் வரை அவர்கள் போய் விட்டார்கள் என சமீப காலமாகஏகப்பட்ட வதந்திகள்.இருவரும் கேரளாவில் வைத்துக் கல்யாணம் செய்து கொண்டு விட்டார்கள்,சென்னைக்கு அருகே உள்ள ராகவேந்திரா கோவிலில் மாலை மாற்றிக் கொண்டுவிட்டனர் என்றெல்லாம் கூட கோலிவுட்டில் கிளப்பி விட்டு வருகிறார்கள். இந்த செய்திகளை இருவருமே இதுவரை மறுக்கவில்லை. ஆனால் முதல் முறையாகசிம்புவுடனான தனது நட்பு குறித்து வாய் திறந்துள்ளார் நயனதாரா.இதுகுறித்து நயன்ஸ் கூறுகையில், நானும், சிம்புவும் நட்பாக பழகி வருகிறோம். அதுஉண்மைதான். இருவரும் நெருங்கிப் பழகுவது இரு வீட்டாருக்கும் தெரியும். யாரும்அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.கல்யாணம் செய்து கொள்வது என்பது மிகப் பெரிய விஷயம். அதுகுறித்து இருவரும்பேசவில்லை. கல்யாணம் செய்து கொள்வதற்கு நிறைய அவகாசம் தேவை. எனவேஇப்போதைக்கு திருமணம் இல்லை.திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் அதற்கு இரு வீட்டாரும் மறுக்கமாட்டார்கள், தடுக்க மாட்டார்கள் என நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார் நியனதாரா. இருவரும் நெருங்கிப் பழகுவது உண்மைதான், ஆனால் தாலி மட்டும் இன்னும்கட்டவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார் நயனா.நயனா மேலும் கூறுகையில், கல்யாணம் செய்து கொண்டு விட்டால் அதன் பிறகுசினிமாவில் நடிக்க மாட்டேன். குடும்பத்தில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என்றும்கூறியுள்ளார் நயனதாரா.இது குறித்து சிம்பு, நானும், நயனதாராவும் நெருங்கிப் பழகுகிறோம், நட்பாகஇருக்கிறோம், ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுகிறோம், சேர்ந்து வெளியிலும்செல்கிறோம்.இதை நான் மறுக்க மாட்டேன். ஆனால் கல்யாணம் குறித்து இப்போதைக்குயோசிக்கவில்லை, நாங்கள் காதலிக்கிறோமா என்பது கூட எங்களுக்குத்தெரியவில்லை. எது நடந்தாலும் எல்லோரிடமும் சொல்லி விட்டுத்தான் செய்வேன், மறைமுகமாகஎதையும் செய்ய மாட்டேன் என்று பட்டவர்த்தனமாக கூறுகிறார் சிம்பு.எப்படியோ மொசக்குட்டி வெளியே வந்தாச்சு..

By Staff

சிம்புவை மணப்பதில் எங்களது வீடுகளில் எதிர்ப்பு இருக்காது. ஆனாலும்இப்போதைக்கு கல்யாணம் கிடையாது என்று முதல் முறையாக சிம்பு குறித்துதிருவாய் மலர்ந்துள்ளார் நயனதாரா.

நெகு நெகு நாயகி நயனதாராவுக்கும், விரல் வித்தையாளன் சிம்புவுக்கும் இடையேநட்பு அதிகமாகி, கல்யாணம் வரை அவர்கள் போய் விட்டார்கள் என சமீப காலமாகஏகப்பட்ட வதந்திகள்.

இருவரும் கேரளாவில் வைத்துக் கல்யாணம் செய்து கொண்டு விட்டார்கள்,சென்னைக்கு அருகே உள்ள ராகவேந்திரா கோவிலில் மாலை மாற்றிக் கொண்டுவிட்டனர் என்றெல்லாம் கூட கோலிவுட்டில் கிளப்பி விட்டு வருகிறார்கள்.


இந்த செய்திகளை இருவருமே இதுவரை மறுக்கவில்லை. ஆனால் முதல் முறையாகசிம்புவுடனான தனது நட்பு குறித்து வாய் திறந்துள்ளார் நயனதாரா.

இதுகுறித்து நயன்ஸ் கூறுகையில், நானும், சிம்புவும் நட்பாக பழகி வருகிறோம். அதுஉண்மைதான். இருவரும் நெருங்கிப் பழகுவது இரு வீட்டாருக்கும் தெரியும். யாரும்அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

கல்யாணம் செய்து கொள்வது என்பது மிகப் பெரிய விஷயம். அதுகுறித்து இருவரும்பேசவில்லை. கல்யாணம் செய்து கொள்வதற்கு நிறைய அவகாசம் தேவை. எனவேஇப்போதைக்கு திருமணம் இல்லை.

திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் அதற்கு இரு வீட்டாரும் மறுக்கமாட்டார்கள், தடுக்க மாட்டார்கள் என நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார் நியனதாரா.


இருவரும் நெருங்கிப் பழகுவது உண்மைதான், ஆனால் தாலி மட்டும் இன்னும்கட்டவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார் நயனா.

நயனா மேலும் கூறுகையில், கல்யாணம் செய்து கொண்டு விட்டால் அதன் பிறகுசினிமாவில் நடிக்க மாட்டேன். குடும்பத்தில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என்றும்கூறியுள்ளார் நயனதாரா.

இது குறித்து சிம்பு, நானும், நயனதாராவும் நெருங்கிப் பழகுகிறோம், நட்பாகஇருக்கிறோம், ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுகிறோம், சேர்ந்து வெளியிலும்செல்கிறோம்.

இதை நான் மறுக்க மாட்டேன். ஆனால் கல்யாணம் குறித்து இப்போதைக்குயோசிக்கவில்லை, நாங்கள் காதலிக்கிறோமா என்பது கூட எங்களுக்குத்தெரியவில்லை.


எது நடந்தாலும் எல்லோரிடமும் சொல்லி விட்டுத்தான் செய்வேன், மறைமுகமாகஎதையும் செய்ய மாட்டேன் என்று பட்டவர்த்தனமாக கூறுகிறார் சிம்பு.

எப்படியோ மொசக்குட்டி வெளியே வந்தாச்சு..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X