நயன்தாரா ரொம்ப ஒழுக்கமானவர்!- சான்றிதழ் தரும் இயக்குநர்

By Chakra

Nayantara
நயன்தாரா தாமதமாகப் படப்பிடிப்புக்கு வருகிறார், ஓயாமல் செல்போனில் பேசிக் கொண்டே இருக்கிறார் என்பதெல்லாம் உண்மையில்லை. அவர் மிகவும் ஒழுக்கமானவர் என்கிறார், இயக்குநர் ராஜேஷ் எம்.

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்த நயன்தாரா மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. கவர்ச்சியாக நடிக்க மறுக்கிறார். படப்பிடிப்புக்கு தாமதமாக வருகிறார். இயக்குனர்கள் சீன்களை எடுக்கும் போது பிரபுதேவாவுடன் டெலிபோனில் பேசிக்கொண்டே இருக்கிறார் என்றெல்லாம் வதந்திகள் பரவின.

இதனால் புதுப்படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்குவதாக கூறப்பட்டது.

இது குறித்து பாஸ் என்கிற பாஸ்கரன் பட இயக்குனர் ராஜேஷிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:

நயன்தாரா படப்பிடிப்புக்கு தாமதமாக வருகிறார். ஓயாமல் போனில் பேசுகிறார் என்பதெல்லாம் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகள். நயன்தாரா ரொம்ப ஒழுக்கமானவர். படப்பிடிப்புகளுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே மேக்கப்புடன் வருவார். படப்பிடிப்பு நடக்கும் போது அவர் போனில் பேசுவது இல்லை. எங்களுடன் கதை விவாதத்தில் கூட கலந்து கொண்டார். மிகுந்த ஒத்துழைப்பு தரும் நடிகை அவர்.

பாஸ் என்கிற பாஸ்கரன் நடத்தர குடும்பத்தை பற்றிய கதை. யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாரா நடிப்பை பார்த்து இப்படத்துக்கு தேர்ந்தெடுத்தேன்..."என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X