நயன்தாரா படத்துக்கு தடை!
நயன்தாரா நடித்துள்ள மலையாள படம் எலக்ட்ரா-வுக்கு கேரள முன்சீப் கோர்ட் தடை விதித்துள்ளது.
நயன்தாராவின் கடைசிப் படம் என்று அறிவிக்கப்பட்டு தயாராகி வரும் படம் எலக்ட்ரா. தேசிய விருது பெற்ற இயக்குநர் ஷ்யாமா பிரசாத் இயக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். அவரது பெற்றோர் வேடத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் மனீஷா கொய்ராலா நடிக்கிறார்கள்.
படப்பிடிப்பு முடிந்து இம்மாதம் படம் ரிலீசாக இருந்தது. இதற்கிடையே திடீரென இப்படத்தை ரிலீஸ் செய்ய தடை விதித்துள்ளது எர்ணாகுளம் முன்சீப் நீதிமன்றம்.
இப்படத்தின் வினியோகஸ்தர் மார்ட்டின் செபாஸ்டீன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "எலக்ட்ரா படத்தை வெளியிடுவது தொடர்பில் பட தயாரிப்பாளர் விந்த்யனுடன் ஒரு ஒப்பந்தம் செய்திருந்தோம். இப்போது அந்த ஒப்பந்தத்தை மீறி படத்தை ரிலீஸ் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும்" என்று கோரியுள்ளார்.
இதையடுத்து எலக்ட்ரா படத்தை ரிலீஸ் செய்ய நீதிமன்றம் தடை விதித்துவிட்டது.
பிரபு தேவாவை திருமணம் செய்வதற்கு முன் இந்தப் படம் வெளிவர வேண்டும் என்ற வேகத்தில் நயன்தாரா நடித்துக் கொடுத்தார். அவரது கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள படம் இது என்பதால், தனக்கு விருதுகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறி வந்தார்.


Click it and Unblock the Notifications











