»   »  2 மம்முட்டி, ரெண்டு ஜோடி!

2 மம்முட்டி, ரெண்டு ஜோடி!

Subscribe to Oneindia Tamil


நீண்ட இடைவெளிக்குப் பிறகு மம்முட்டி இரட்டை வேடம் போடப் போகிறார். அவருக்கு ஜோடியாக கோபிகாவும், நயனதாராவும் நடிக்கவுள்ளனர்.


மம்முட்டி நடிக்க வந்து 25 வருடங்களாகி விட்டது. கிட்டத்தட்ட 300 படங்களில் நடித்துள்ளார். ஆனால் இரட்டை வேடங்களில் அவர் நடித்துள்ளது மிகவும் குறைந்த படங்களில்தான். இரட்டை வேடம், 3 வேடம் என்று தயாரிப்பாளர்கள் கூறினால் வேண்டாம் என்று கூறி விடுவாராம் மம்முட்டி.

சாம்ராஜ்யம், தாதா சாஹேப் உள்ளிட்ட சில படங்களில்தான் அவர் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரட்டை வேடம் போடப் போகிறார்.

மம்முட்டியின் திரைப் படங்களிலேயே மிகப் பெரிய ஹிட்டான ராஜமாணிக்கம் படத்தை இயக்கிய அன்வர் ரஷீத் அடுத்து இயக்கப் போகும் படத்தில்தான் மம்முட்டி இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் அண்ணன், தம்பியாக நடிக்கவிருக்கிறார் மம்முட்டி. இதில் அவருக்கு இரண்டு ஜோடிகள் ஒருவர் கோபிகா, இன்னொருவர் நயனதாரா.

படத்தின் கதை குறித்து இயக்குநர் ரஷீத் கூறுகையில், வழக்கமான கதைதான். ஆனால் திரைக் கதையில் நிறைய வித்தியாசங்களை செய்துள்ளோம். எனவே இது வித்தியாசமான படமாக இருக்கும் என்றார். நவம்பர் இறுதியில் படப்பிடிப்பை ஆரம்பிக்கிறார்களாம்.

நயனதாராவும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கப் போகும் மலையாளப் படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

Read more about: double act
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil