For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நாகரீக நீத்தாஸ்ரீ புளியைப் போட்டு நன்கு கழுவி வைத்த வெண்கலச் சொம்பு போல பளிச்சென இருக்கும் கன்னடக் கிளி நீத்தாஸ்ரீ,நாகரீக கோமாளி மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை தழுவ வருகிறார்.மலையாளத்திலிருந்து வந்த நாயகிகளுக்கு மத்தியில் அவ்வப்போது ஆந்திரா, கர்நாடகா என வேறு சிலஊர்களிலிருந்தும் கும் நாயகிகள் கோலிவுடடில் குதிப்பார்கள். அப்படி வந்துள்ளவர்தான் நீத்தாஸ்ரீ.கன்னடத்தில் ஐந்து படங்களில் அசத்தியுள்ள நீத்தா இப்போது தமிழுக்கும் வந்துள்ளார். நாகரீக கோமாளிபடத்திற்காக இயக்குனர் ராம்ஜி எஸ்.பாலன் நல்ல கட்டையாக தேடிக் கொண்டிருந்ததை அறிந்த நீத்தா,பாலனிடம் போய் பிட்டைப் போட்டார்.படு நீட்டாக டிரஸ் செய்து கொண்டு வந்து நின்ற நீத்தாவைப் பார்த்த இயக்குனர், என்னோட கதைக்கு இப்படிஇருந்தா சரிப்படாதே என்று இழுத்துள்ளார். அப்டியா, முதல்ல கதை சொல்லுங்கோ என்று கதையைக்கேட்டுள்ளார் நீத்தா. பாலனும் கதையைக் கூறியுள்ளார். ஓ.கே, கொஞ்சம் பொறுங்கோ என்று திரும்பிப் போனநீத்தா, மேக்கப் இல்லாமல், சாதாரண காட்டன் சேலையில் திரும்பி வந்து பாலனைப் பார்த்துள்ளார்.அசந்து போன பாலன், அடடா, இதைத்தான், இப்படித்தான் நான் எதிர்பார்த்தேன் என்று கூறி நீத்தாவை புக் செய்துவிட்டார். கெட்டப்பிலேயே இயக்குனரை அட்டாக் செய்து விட்ட நீத்தா இப்போது படு சந்தோஷமாக நாகரீககோமாளியில் நடித்து வருகிறார்.கன்னடத்தில் நான் நன்கு அறியப்பட்ட நடிகை. நாகரீக கோமாளியில் எனக்கு நல்ல கேரக்டர். அந்தகேரக்டராகவே மாறி நடிக்கிறேன். இந்தப் படம் வந்ததும் தமிழிலும் நான் நல்ல பெயர் எடுப்பேன், தமிழ்ரசிகர்கள் நல்ல நடிப்பையும், நடிகையையும் கை விட மாட்டார்கள் (ஆமாமாமா!). அதனால் தமிழில் ஒரு ரவுண்டுஅடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று மனசில் கை வைத்து நம்பிக்கையோடு சொல்கிகறார் நீத்தாஸ்ரீ.நீத்தாஸ்ரீயை அசத்திய அந்த கதை இதுதான்: கடும் வறட்சி காரணமாக தஞ்சையைச் சேர்ந்த ஒரு விவசாயக்குடும்பம் எலிக்கறி சாப்பிடும் அளவுக்கு வறுமையில் தள்ளப்படுகிறது. (நம் ஊரில் நடந்த உண்மை தான், ஆனால்அரசாங்கத்திடம் கேட்டால் எலிக்கறி சாப்பிடுவது ஒரு பேஷன் தானே என்பார்கள்).இதனால் குடும்பத்தோடு அவர்கள் தற்கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால், விஷத்தில் கலப்படம்இருப்பதால் (அதிலும் கலப்படம்) தந்தையும்,மகளும் மட்டும் உயிர் பிழைக்கின்றனர். அவர்களுக்கு ஹீரோ உதவிசெய்ய, உயிர் பிழைத்த அந்தப் பெண் ஹீரோ மீது காதல் கொள்கிறார். அதைத் தொடர்ந்து நடக்கும்சம்பவங்கள்தான் நாகரீக கோமாளியின் கதையாம்.மறைந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜனின் பேரன் ஜெய ஷக்தி தான் இதில் ஹீரோவாக நடிக்கிறார். அவரதுநண்பராக மறைந்த என்.எஸ்.கே. அவர்களின் பேரன் ராஜன் நடித்துள்ளார். படம் முழுவதும் மதுரையிலேயேநகர்கிறதாம். மதுரை என்றால் முதலில் ஞாபகத்திற்கு வருவது அங்குள்ள டீக் கடைகள்தான். இப்படத்திலும்முக்கியப் பாத்திரமாக வருகிறதாம் டீக்கடை.இப்படம் மூலம் தமிழ் சமுதாயத்திற்கு நல்ல செய்தியை தந்திருக்கிறோம். படம் வந்த பின் ரொம்பவே பேசப்படும்என்கிறார் ராம்ஜி பாலன். படம் மட்டுமல்ல நீத்தாஸ்ரீயும் சேர்த்து பேசப்படட்டும்!

  By Staff
  |

  புளியைப் போட்டு நன்கு கழுவி வைத்த வெண்கலச் சொம்பு போல பளிச்சென இருக்கும் கன்னடக் கிளி நீத்தாஸ்ரீ,நாகரீக கோமாளி மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை தழுவ வருகிறார்.

  மலையாளத்திலிருந்து வந்த நாயகிகளுக்கு மத்தியில் அவ்வப்போது ஆந்திரா, கர்நாடகா என வேறு சிலஊர்களிலிருந்தும் கும் நாயகிகள் கோலிவுடடில் குதிப்பார்கள். அப்படி வந்துள்ளவர்தான் நீத்தாஸ்ரீ.

  கன்னடத்தில் ஐந்து படங்களில் அசத்தியுள்ள நீத்தா இப்போது தமிழுக்கும் வந்துள்ளார். நாகரீக கோமாளிபடத்திற்காக இயக்குனர் ராம்ஜி எஸ்.பாலன் நல்ல கட்டையாக தேடிக் கொண்டிருந்ததை அறிந்த நீத்தா,பாலனிடம் போய் பிட்டைப் போட்டார்.

  படு நீட்டாக டிரஸ் செய்து கொண்டு வந்து நின்ற நீத்தாவைப் பார்த்த இயக்குனர், என்னோட கதைக்கு இப்படிஇருந்தா சரிப்படாதே என்று இழுத்துள்ளார். அப்டியா, முதல்ல கதை சொல்லுங்கோ என்று கதையைக்கேட்டுள்ளார் நீத்தா. பாலனும் கதையைக் கூறியுள்ளார். ஓ.கே, கொஞ்சம் பொறுங்கோ என்று திரும்பிப் போனநீத்தா, மேக்கப் இல்லாமல், சாதாரண காட்டன் சேலையில் திரும்பி வந்து பாலனைப் பார்த்துள்ளார்.


  அசந்து போன பாலன், அடடா, இதைத்தான், இப்படித்தான் நான் எதிர்பார்த்தேன் என்று கூறி நீத்தாவை புக் செய்துவிட்டார். கெட்டப்பிலேயே இயக்குனரை அட்டாக் செய்து விட்ட நீத்தா இப்போது படு சந்தோஷமாக நாகரீககோமாளியில் நடித்து வருகிறார்.

  கன்னடத்தில் நான் நன்கு அறியப்பட்ட நடிகை. நாகரீக கோமாளியில் எனக்கு நல்ல கேரக்டர். அந்தகேரக்டராகவே மாறி நடிக்கிறேன். இந்தப் படம் வந்ததும் தமிழிலும் நான் நல்ல பெயர் எடுப்பேன், தமிழ்ரசிகர்கள் நல்ல நடிப்பையும், நடிகையையும் கை விட மாட்டார்கள் (ஆமாமாமா!). அதனால் தமிழில் ஒரு ரவுண்டுஅடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று மனசில் கை வைத்து நம்பிக்கையோடு சொல்கிகறார் நீத்தாஸ்ரீ.

  நீத்தாஸ்ரீயை அசத்திய அந்த கதை இதுதான்: கடும் வறட்சி காரணமாக தஞ்சையைச் சேர்ந்த ஒரு விவசாயக்குடும்பம் எலிக்கறி சாப்பிடும் அளவுக்கு வறுமையில் தள்ளப்படுகிறது. (நம் ஊரில் நடந்த உண்மை தான், ஆனால்அரசாங்கத்திடம் கேட்டால் எலிக்கறி சாப்பிடுவது ஒரு பேஷன் தானே என்பார்கள்).

  இதனால் குடும்பத்தோடு அவர்கள் தற்கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால், விஷத்தில் கலப்படம்இருப்பதால் (அதிலும் கலப்படம்) தந்தையும்,மகளும் மட்டும் உயிர் பிழைக்கின்றனர். அவர்களுக்கு ஹீரோ உதவிசெய்ய, உயிர் பிழைத்த அந்தப் பெண் ஹீரோ மீது காதல் கொள்கிறார். அதைத் தொடர்ந்து நடக்கும்சம்பவங்கள்தான் நாகரீக கோமாளியின் கதையாம்.


  மறைந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜனின் பேரன் ஜெய ஷக்தி தான் இதில் ஹீரோவாக நடிக்கிறார். அவரதுநண்பராக மறைந்த என்.எஸ்.கே. அவர்களின் பேரன் ராஜன் நடித்துள்ளார். படம் முழுவதும் மதுரையிலேயேநகர்கிறதாம். மதுரை என்றால் முதலில் ஞாபகத்திற்கு வருவது அங்குள்ள டீக் கடைகள்தான். இப்படத்திலும்முக்கியப் பாத்திரமாக வருகிறதாம் டீக்கடை.

  இப்படம் மூலம் தமிழ் சமுதாயத்திற்கு நல்ல செய்தியை தந்திருக்கிறோம். படம் வந்த பின் ரொம்பவே பேசப்படும்என்கிறார் ராம்ஜி பாலன். படம் மட்டுமல்ல நீத்தாஸ்ரீயும் சேர்த்து பேசப்படட்டும்!

  பறவை முனியம்மாவின் ஒரு காய்கறிப் பாட்டும் உள்ளதாம்.

  இந்தப் படத்துக்கான விளம்ரத்தில் கார்ல் மார்க்ஸ், பெரியார், அம்பேத்கார் எல்லாம் இடம் பெற்றிருந்தார்கள்..ஏதோ மெசேஜ் சொல்லப் போறாங்க என்ற எதிர்பார்ப்பை கோலிவுட்டில் ஏற்படுத்தியிருக்கிறது இந்தப் படம்.

  சொல்றதை சரியா சொன்னா சரி...

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X