புலிவேஷம்.... நீத்து சந்திரா இல்லை - பி வாசு!

ஆர் கே நாயகனாக நடிக்கும் புலிவேஷம் படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தப் படத்தில் ஒரு நாயகியாக சதா நடிக்கிறார்.
இன்னொரு நாயகியாக மலையாள புதுமுகம் திவ்யா விஸ்வநாத் நடிக்கிறார். இந்த நிலையில் இந்தப் படத்தில் நீத்து சந்திரா நாயகியாக நடிக்கிறார் என்று இன்னொரு தரப்பில் செய்திகள் வெளியானது.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் பி வாசு கூறுகையில், இந்தப் படத்தில் இரண்டு ஹீரோயின்கள். அவர்கள் சதா மற்றும் திவ்யா விஸ்வநாத். வேறு யாரும் நடிக்கவில்லை" என்றார்.
அப்பாவி இளைஞன் ஒருவன் சந்தர்ப்ப வசத்தால் அதிரடி டானாக மாறுவதுதான் இந்தப் படத்தின் அடிப்படைக் கதை.
Comments


Click it and Unblock the Notifications