ஸ்பெஷல்ஸ்

By Staff

பாரதி படத்தை இயக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஞான ராஜசேகரன் அடுத்ததாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்தபடத்தை எடுக்க உள்ளார்.

மோகமுள் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து எல்லோரையும் அட போட வைத்த ராஜசேகரன் பாரதி படத்தின்மூலம் தமிழர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தார்,

அடுத்ததாக நேதாஜியைப் படம் பிடிக்க உள்ள இவர் திரைக்கதையையும் எழுதி முடித்துவிட்டார். படத்தை தமிழில் ரிலீஸ்செய்துவிட்டு அதை தெலுங்கு, இந்தி, பெங்காலி மொழிகளில் டப் செய்ய திட்டமிட்டுள்ளார்.

தமிழர்கள் நல்ல படத்தை நிச்சயம் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு நிறையவே இருப்பதாகக் குறிப்பிடும் ராஜசேகரன்கேரளத்தில் போக்குவரத்துத்துறை செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.பாரதி படத்துக்குப் பிறகு என்னை வைத்துபடம் தயாரிக்க தமிழில் பல முன்னணி தயாரிப்பாளர்களும் முன் வந்துள்ளனர் என்கிறார்.

நேதாஜியின் வரலாற்றை அவரது குழந்தை பருவம் முதல் ஆரம்பித்து தேசிய ராணுவத்தை நிறுவி விடுதலைப் போராட்டம்நடத்தியது, மர்மமாக இறந்தது என அவரது வாழ்வின் அனைத்துப் பகுதிகளையும் தொட்டுவிடத் திட்டமிட்டிருக்கிறார்ராஜசேகரன்.

படப் பிடிப்பு ஒரிஸ்ஸா, ஜெர்மனி, லண்டன், மலேசியா ஆகிய நாடுகளில் நடக்க உள்ளது.

நேதாஜியின் ராணுவத்தில் பணியாற்றியவர்களில் பெரும்பான்மையினர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து தனக்குஒரு பிறவி இருந்தால் தமிழனாகப் பிறக்கவே விரும்புகிறேன் என்று கூறியவர் நேதாஜி.

நேதாஜியோடு சேர்ந்து பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த பல வீரர்களையும் நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார் ராஜசேகரன்.

நேதாஜியின் வேடத்தில் பெங்காலி நடிகரான சாஸ்வதா சாட்டர்ஜி நடிக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X