Nagarjuna: ’மாட்டிக்கிட்ட பங்கு’ மாற்றி மாற்றி பேசிய நாகர்ஜுனா.. வெச்சு செய்யும் இணையவாசிகள்! வீடியோ

ஹைதராபாத்: இணையவாசிகள் எப்போதுமே ரொம்பவும் ஷார்ப். யாராவது ஒரு விஷயம் குறித்து இரு வேறான நேரெதிர் கருத்துக்களை தெரிவித்தால் அவரை கலாய்த்தும் விமர்சித்தும் ஒரு வழி ஆக்கிவிடுவார்கள். அப்படி இம்முறை இணையவாசிகள் மத்தியில் மாட்டிக் கொண்டவர் நடிகர் நாகர்ஜுனா அக்கினேனி. தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உள்ள நாகர்ஜுனா குபேரா படம் குறித்து படத்தின் ரிலீஸ்க்கு முன்னர் ஒரு கருத்தும் ரிலீஸ்க்குப் பின்னர் ஒரு கருத்தும் தெரிவித்துள்ளார்.

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி நேற்று முன் தினம் அதாவது ஜூன் 20ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் குபேரா. பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

படம் ரிலீஸ்க்கு முன்னர் படத்தின் மீது மிகவும் நம்பிக்கையாக இருந்தவர் இயக்குநரைக் கடந்து நடிகர் தனுஷ் தான். இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது கூட உறுதியாகச் சொல்லுகிறேன் நம்பி பார்க்கலாம் என பேசினார். அதே நேரத்தில் நாகர்ஜுனா பேசும்போது இந்த படத்தை, " குபேரா தனுஷ் படம் இல்லை, நகர்ஜுனா படம் இல்லை, ராஷ்மிகா மந்தனா படமில்லை, இது சேகர் கம்முலா படம் என்று பேசியுள்ளார்.

Netizens Trolls Nagarjuna Tells Two Different Opinions About Kuberaa Movie Pre Release And After Release
Photo Credit:

மாத்தி மாத்தி பேசிய நாகர்ஜுனா: படம் நேற்று முன் தினம் ரிலீஸ் ஆகி, நேற்று ஹைதராபாத்தில் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய நாகர்ஜுனா தான் ரிலீஸ்க்கு முன்னர் பேசியதில் இருந்து முற்றிலும் நேரெதிரான கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது நேற்று அவர் பேசுகையில், " நான் படத்தின் கதையைக் கேட்கும்போது இந்த படத்தில் கதாநாயகன் நான் தான் எனத் தோன்றியது. எனது தீபக் கதாபாத்திரத்தைச் சுற்றியே மற்ற கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதையும் தீபக் கதாபாத்திரத்தைச் சுற்றியே நகர்ந்தது" என்று பேசியுள்ளார்.

சினிமா கெட்ட பழக்கம்: நாகர்ஜுனாவின் இருவேறு கருத்துக்களை இணையவாசிகள் தனியாக வெட்டி எடுத்து அதை ஒரு வீடியோவாக சேர்த்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து நாகர்ஜுனாவை மனதார கலாய்த்து வருகிறார்கள். சிலர் நேரடியாக விமர்சிக்கவும் தொடங்கி உள்ளார்கள். அதாவது, சினிமா உலகில் உள்ள கெட்டப் பழக்கங்களில் ஒன்று ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் அதற்கு கதாநாயகனான நான் தான் காரணம், தனது கதாபாத்திரம் தான் காரணம் எனக் கூறுவார்கள். அதுவே தோல்வி அடைந்துவிட்டால் இயக்குநருக்கு படம் இயக்க தெரியவில்லை. படத்தின் தோல்விக்கு இயக்குநர்தான் காரணம் எனக் கூறுவார்கள்.

மாட்டிக்கிட்ட பங்கு: அதனைத்தான் நாகர்ஜுனா மிகவும் பாலிசாக சொல்லி உள்ளார். நாகர்ஜுனா படம் தோல்வி அடைந்துவிடும் என நினைத்துள்ளார். அதனால்தான் ரிலீஸ்க்கு முன்னர் அவ்வாறு கூறியுள்ளார். தற்போது படத்திற்கான நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளதால் படத்தின் வெற்றிக்கு தனது கதாபாத்திரம் தான் காரணம் எனக் கூறியுள்ளார் என காட்டமாக விமர்சித்து வருகிறார்கள். சில இணையவாசிகள், நாகர்ஜுனாவைப் பார்த்து ' மாட்டிக்கிட்ட பங்கு' என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X