அனிமேஷன் பட வரிசையில் புதிய வரவாக வரவிருக்கிறது 'லவகுசா'.

"பொதுவாக இந்தியாவில் தயாராகும் அனிமேஷன் படங்களில் தொழில் நுட்பம் மற்றும் காட்சியமைப்பில் மேற்கத்திய பாணியின் பாதிப்பு இருக்கிறது. ஆனால் இந்தப் படத்தின் திரைக்கதை, வசனம் உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் முழுமையான இந்தியப்படமாக, ஒரு முன்மாதிரியாக இருக்கும்", என்றார், இதன் தொழில் இயக்குனரான ஷ்ராவன் ஷெர்யாலா.
இதற்கு பின்னணி ஓவிய கண்காணிப்பாளராக திரு பணியாற்றியுள்ளார்.
மாணவ-மாணவிகளுக்கு இப்படத்தின் மாதிரி காட்சிகள் திரையிட்டு காட்டப்பட்டன. ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்றோருக்கு ரசிகர்கள் இருப்பது போல அனிமேஷன் படங்களுக்கும் இனி ரசிகர்கள் வருவார்கள் என்றார் திரு.
ராயுடு விஷன் மீடியா நிறுவனத்தினர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
Comments
ஓவிய கண்காணிப்பாளர் திரு தொழில்நுட்பம் லவகுசா அனிமேஷன் படம் lavakusa animation film technology thiru western effect


Click it and Unblock the Notifications