New Year 2025: மாதவனுடன் புத்தாண்டு கொண்டாடிய நயன்-விக்கி தம்பதி.. போர்வையை போர்த்திட்டு செம ரொமான்ஸ்
துபாய்: நடிகை நயன் - விக்கி தம்பதியர், தமிழ் சினிமா தம்பதியர்களில் பலரது அன்பைப் பெற்ற தம்பதியர்கள். இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள பெரிய ஆர்வமே மக்கள் மத்தியில் உள்ளது. இதுமட்டும் இல்லாமல், இவர்களின் குழந்தைகளான உயிர் மற்றும் உலக் ஆகியோரின் வளர்ச்சி மற்றும் நடவடிக்கைகளைத் தெரிந்துகொள்ளவும் ஆர்வமுள்ள ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில் நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர், நடிகர் மாதவன் மற்றும் அவரது மனைவி, சரிதா பிர்ஜேவுடன் இணைந்து 2025ஐ வரவேற்றுள்ளனர்.
நடிகை நயன்தாரா 2024ஆம் ஆண்டைத் தொடங்கும்போது எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல்தான் தொடங்கினார். ஆனால், தனது திருமண, டாக்குமெண்டரியை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு முன்னர், நடிகை நயன், தனுச்ஷ்க்கு எழுதிய மூன்று பக்க கடிதம் ஒரு நாளில் அவரைச் சுற்றி பரபரப்பை உண்டாக்கியது. அதிலும் குறிப்பாக தனுஷை மிகவும் காட்டமாகவும் மோசமாகவும் விமர்சித்திருந்தார்.

அதேபோல் விக்னேஷ் சிவன் தனுஷ்க்கு எதிராக, ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து காட்டமான பதிவுகளைப் பகிர்ந்து வந்தார். அதனால் அவரை தனுஷ் ரசிகர்களும் இணையவாசிகளும் கடுமையான பதிலடி கொடுக்க, ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறினார். இந்த சம்பவங்களுக்கு மத்தியில், டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரின் திருமணத்தில், தனுஷ் மற்றும் நயன் முன்வரிசை இருக்கைகளில், கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்த புகைப்படம் பெரும் வைரலானது. நயன் - விக்கி தம்பதி மீது தனுஷ் தொடுத்துள்ள வழக்கின் விசாரணை ஜனவரி 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.
துபாய்: நயன் - விக்கி தம்பதியர்களுக்கு அதிகம் பிடித்த, மேலும் அதிகம் சௌகரியமான வெளிநாடு என்றால் அது, துபாய்தான். இங்கு, இவர்கள் தங்களது குழந்தைகளுடன் அடிக்கடி சென்று நேரம் செலவிடுவார்கள். தங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் வந்தபோது கூட இவர்கள் துபாய்க்குத்தான் சென்றார்கள். இதுமட்டும் இல்லாமல், தங்களது குழந்தைகளுடன் இவர்கள் அடிக்கடி வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.
படங்கள்: குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவதாலோ என்னவோ, நயன் அதிகமாக படங்களில் கமிட் ஆகாமல் இருந்தார். இவரது நடிப்பில் இந்த ஆண்டு ஒரு படம்கூட வெளிவரவில்லை. தற்போது ராக்காயி மற்றும் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் மலையாளப்படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். விக்னேஷ் சிவன் எல்.ஐ.கே என்ற படத்தினை இயக்கி வருகின்றார்.
மாதவன் நியூ இயர்: இப்படியான நிலையில், நடிகை நயன் - விக்கி தம்பதியர் 2025ஆம் ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர். இவர்கள், நடிகர் மாதவன் - சரிதா பிர்ஜே தம்பதியுடன் இணைந்து புத்தாண்டை வரவேற்றுள்ளனர். இது தொடர்பான வீடியோக்களை நயன் தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும் அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் நயன், விக்கியை இறுக கட்டிப்பிடித்துக்கொண்டு உள்ளார். ஒரே போர்வையைப் போர்த்திக் கொண்டு இருவரும் அமர்ந்திருப்பதால், ரசிகர்கள் செம ரொமான்ஸ் போல என கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும் அவர்கள், எங்களைச் சுற்றி முழுவதும் அன்புதான் உள்ளது எனவும் கேப்ஷன் இட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











