»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

ஏண்டா நிகிதாவைப் படத்தில் போட்டோம் என்று தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறது சத்ரபதி படத்தின்டீம்.

தமிழ், கன்னடம், தெலுங்கில் ஒதுக்கப்பட்டு சான்சுக்காக அலையோ அலை என்று அலைந்து தான் சத்ரபதி படத்தில் நடிக்க புக்ஆனார் நிகிதா.

தனது வயதையும் சேர்த்து குறைத்துக் காட்டும் வகையில் படத்தில் இளமையாக ஒரு சிக் பிகர் வேண்டும் என்று சரத்குமார் ரவுசுபண்ணியதால் மார்க்கெட் ஏதும் இல்லாத நிகிதாவைப் பிடித்துப் போட்டார் தயாரிப்பாளர்.

படப்பிடிப்பில் எந்த சங்கோஜமும் இல்லாமல் நடிக்கும் திறமை கொண்டவர் என்பதால், படக் குழு சொன்னதைவிடவும் அரைகிலோ கூடவே கவர்ச்சி காட்டி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் நிகிதா.

ஏகப்பட்ட பண விவகாரங்களால் இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்று சூட்டிங் நடந்தது. ஒருவழியாக 90 சதவீத சூட்டிங்முடிவடைந்த நிலையில் மீண்டும் பிரச்சனை ஆரம்பித்தது. இந்த முறை நிகிதாவின் வடிவில் அந்தத் தொல்லை வந்துள்ளது.

இந்தப் படத்தில் மூலம் ரீ-எண்ட்ரி ஆன நிகிதா, இந்தப் படத்தின் ஸ்டில்கள் தந்த பரபரப்பால், வேறு இடங்களிலும் கடும்பிரயசித்தம் செய்து சில வாய்ப்புகளைப் பிடித்துவிட்டார் நிகிதா. இதனால் எல்லா பக்கமும் கால்ஷீட்டுகளைஅள்ளிவிட்டிருக்கிறார்.

இதன் காரணமாக சத்ரபதிக்கு சொன்ன தேதிகளை அவரால் ஒதுக்க முடியவில்லையாம். பெங்களூரில் சும்மா இருக்கிறார் என்றுதான் இவரைக் கொண்டு வந்தோம். வந்த இடத்தில் வாய்ப்புகளைப் பிடித்துவிட்டு இப்படி தொல்லை தருகிறாரே என்று டென்சன்ஆகிவிட்டாராம் தயாரிப்பாளர்.

வீட்டுக்கு போனாலும், ஹோட்டலுக்குப் போனாலும், செல்லுக்கு போன் போட்டாலும் ஆள் சிக்கவே இல்லையாம். தான்எங்கிருக்கிறேன் என்பதைக் கூட சொல்லாமல் நிகிதா கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறாராம்.

ஏற்கனவே இப்படித்தான் இவர் கன்னடத்தில் ஒரு படத்தில் அட்வான்ஸ் வாங்கிவிட்டு டிமிக்கி கொடுத்த, வீடு தேடிதுப்பாக்கியுடன் போனாராம் ஒரு தயாரிப்பாளர்.

படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்ட நிலையில், நிகிதாவால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் தயாரிப்பாளர்கவுன்சிலுக்கு இந்தப் பிரச்சனை போகும் என்கிறார்கள்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil