»   »  பாயல்-ரிஷா-அபி!

பாயல்-ரிஷா-அபி!

Subscribe to Oneindia Tamil

கிளாமர் குமுறலுடன் ரசிகர்களை மிரட்ட வருகிறது நிறம்.

நிறம் என்ற பெயரை வைத்து விட்டதாலோ என்னவோ படம் பூராவும் கலர்ஃபுல் கன்னியர்களின் கிளாமர் களியாட்டம் குண்டக்க மண்டக்கஇருக்கிறதாம்.

மணி என்பவர்தான் நாயகனாக நடிக்கிறார். ஆனால் நடிகைகள் பட்டாளம்தான் ரொம்பப் பெரிசு. பாய்ஸ் சிந்தூரி, பாயல், ரிஷா என மூன்றுஹீரோயின்கள் படத்தில்.

மூன்று பேருக்கும் முத்து முத்தான குத்துப் பாட்டை போட்டு சமூக சம நீதியை நிலை நாட்டியிருக்கிறார்கள். இவங்க மட்டும் இருந்தா போதாதுஎன்று நினைத்தார்களோ என்னவோ, அல்வா அபிநயஸ்ரீயையும் கூட்டி வந்து ஒரு குத்துப் பாட்டுக்கு கோர்ட்டு விட்டிருக்கிறார்கள்.

ரிஷாவின் கவர்ச்சி ரிச்சான ஒன்று என்றால் பாயலின் கவர்ச்சி படு பாய்ச்சலாக வந்திருக்கிறதாம். சிந்தூரியின் கிளாமர், பால்கோவாவில் மிதக்கும்முந்திரி போல படு ஜில்.

படம் முழுக்க இப்படி கிளாமரை கட்டவிழ்த்து விட்டிருக்கிறீர்களே என்று படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தை கவனித்திருக்கும்புதுமுக இயக்குநர் எஸ்.கே.கிருஷ்ணாவிடம் கேட்டோம்.

இன்றைய இளைஞர்களின் கதைதான் இது. இளைஞர்களைக் குறி வைத்து எடுக்குப்பட்டுள்ள படம் என்பதால் அவர்களுக்கான சமாச்சாரங்களைசேர்க்காமல் விட முடியாதே!

படம் பார்ப்பவர்களுக்கு இது நிச்சயம் போரடிக்காது. நிச்சயம் இளைஞர்களை இந்தப் படம் கவரும் என்று சத்தியம் செய்யாத குறையாகநம்பிக்கையோடு கூறினார் கிருஷ்ணா.

நிறம் ஸ்டில்லைப் பார்த்தால் ரம் அடித்த மங்கி போல மனசு மாறிப் போகிறது!

Read more about: niram ready for release

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil