»   »  நிஷா..டீக்கடை நக்மா

நிஷா..டீக்கடை நக்மா

Posted By:
Subscribe to Oneindia Tamil

துள்ளுவதோ இளமையில் துள்ளாட்டம் போட்ட நிஷா, இப்போது புதுச்சேரியில் 2வது நாயகியாக வந்துபுல்லரிக்க வைக்கும் கவர்ச்சியில் துள்ளி விளையாடி வருகிறார்.

புதுச்சேரி என்ற பெயரில் புதுப் படம் கோலிவுட்டில் தயாராகிறது. முழுக்க முழுக்க புதுவையிலேயே படத்தைஎடுக்கவுள்ளனர். இப்படத்தில் டீக்கடை நக்மா என்ற தெனாவட்டான கிளாமர் ரோலில் நடிக்கிறார் நிஷா.

இந்தப் படத்தில் இவருக்கு 2வது நாயகி வேடம்தான். ஆனால் கவர்ச்சியில் ஹீரோயினைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பின்னி எடுக்கிறாராம் நிஷா.

டீக்கடை நக்மா என்ற கேரக்டரின் பெயரிலேயே நிஷாவின் சேவை என்னவாக இருக்கும் என்பது புரியும்.நிஷாவுக்கு இது இரண்டாவது ஹீரோயின் படம் என்றாலும் அவருக்கு இது மிகப் பெரிய வாய்ப்பாம்.

காரணம், துள்ளுவதோ இளமை , ரிமோட் ஆகிய படங்களில் வெறும் குத்தாட்டம் மட்டுமே போட்டவர் நிஷா.ஆட்டத்தில் மட்டும் அட்டகாசம் செய்து வந்த நிஷாவுக்கு படம் முழுக்க ஆட்டமும், ஆட்டமுமாக வர வாய்ப்புகிடைத்தால் சந்தோஷமாக இருக்காதா என்ன?

இந்தப் படத்திற்கு முன்பே ராஜேந்தரின் வீராசாமியிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஒருவேலையாக லண்டனுக்குப் போயிருந்தாராம் நிஷா. இதனால் வீராசாமியுடன் விளையாட முடியாமல் போய்விட்டதாம்.

இருந்தாலும் நிஷாவை விட மனம் இல்லாத ராஜேந்தர், தனது அடுத்த படமான வேலாவில் நிஷாவுக்கு சூப்பர்ஆஃபர் கொடுத்து அசத்தியுள்ளாராம்.

வேலா படத்திற்காக நிஷா கொடுத்துள்ள போஸ்களைப் பார்த்தால் பல்லு விழுந்து போன தாத்தாக்களுக்குக் கூடதத்தளிப்பு ஏற்படும். அவ்ளோ பசுமையாக இருக்கிறது நிஷாவின் நிழல்கள்!

கிளாமர் களத்தில் குதித்தால்தான் கதை நடக்கும் என்பதைப் புரிந்து கொண்டுள்ள நிஷா, வேகமாக முன்னுக்குவந்து விடுவார்.

Read more about: nisha as tea shop nagma

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil