15 தமிழ்ப் படங்களுடன் 5 நாட்கள் நடக்கும் நார்வே தமிழ் திரைப்பட விழா!

By Shankar

Norway Tamil Film Festival 2012
ஆஸ்லோ: நார்வே தமிழ் திரைப்பட விழா வரும் ஏப்ரல் மாதம் 5 நாட்கள் ஆஸ்லோ மற்றும் லோறன்ஸ்கூ நகரில் நடக்கிறது.

சர்வதேச அளவில் நடக்கும் ஒரே தமிழ் திரைப்பட விழா இது. மூன்றாண்டுகளுக்கு முன் நார்வே வாழ் தமிழர் வசீகரன் சிவலிங்கம் இந்த விழாவை தொடங்கினார்.

சிறிய நிகழ்வாக தொடங்கிய இந்த விழா, இன்று சர்வதேச அளவில் தமிழ்ப் படங்களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தரும் மிக முக்கிய நிகழ்வாக மாறியிருக்கிறது. வசீகரனின் விஎன் மியூசிக் ட்ரீம்ஸ் நிறுவனம் மேலும் சிலருடன் சேர்ந்து இந்த விழாவை முன்னெடுக்கிறது.

கடந்த ஆண்டு, 15 தமிழ் சினிமா இயக்குநர்களை நார்வே தலைநகர் ஆஸ்லோவுக்கு வரவழைத்து சிறப்பு செய்தது விழாக்குழு. பொதுவாக இம்மாதிரி விழாக்களில் நடிகர் நடிகைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படும். ஆனால், ஒரு படத்தினை உருவாக்கும் கேப்டனான இயக்குநர்களை கவுரவிக்க வேண்டும் என்ற நோக்கில் இதனைச் செய்திருந்தார்கள் (ஆனால் இந்த அளவு தாங்கு தாங்கென்று தாங்கியும் கூட வெற்றி மாறன் போன்ற சில இயக்குநர்கள் தங்கள் 'வேலையைக்' காட்டிவிட்டது வேறு விஷயம்!!)

இந்த முறை நிகழ்ச்சியை முற்றிலும் மாறுபட்ட முறையில் நடத்துகிறது நார்வே தமிழ் திரைப்பட விழாக் குழு.

இதுகுறித்து விழாவின் இயக்குநரான வசீகரன் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வமான அறிவிப்பில், "சர்வதேச அளவில் தமிழ் திரைப்படங்களுக்காக நடக்கும் ஒரே நிகழ்வான 'நார்வே தமிழ் திரைப்பட விழா' வரும் ஏப்ரல் மாதம் 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நார்வே நாட்டின் தலைநகர் 'ஆஸ்லோ' மற்றும் 'லோறன்ஸ்கூ' நகரங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவு சிறப்பாக நடக்கவிருக்கிறது.

இந்த 5 நாள் விழாவில், கடந்த இரு ஆண்டுகளையும் விட முற்றிலும் வேறுபட்ட பல புதிய நிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன.

இந்த விழாவில் வழங்கப்படும் பெருமைக்குரிய தமிழர் விருது மற்றும் இதர பிரிவுகளுக்கான விருதுகளுக்கு தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.

* நல்ல தரமான தமிழ்த் திரைப்படங்களை நார்வேயில் வாழும் தமிழர்களுக்கும், நார்வே நாட்டு குடிமக்கள் மற்றும் சர்வதேச மக்களின் பார்வைக்கு எடுத்துச் செல்லுதல்.

* உலகம் முழுவதிலும் இருந்து ஒவ்வொரு வருடமும் வெளியாகும், நல்ல தரமுள்ள தமிழ்ப் படங்களிலிருந்து 15 படங்களைத் தேர்வு செய்து 25 பிரிவுகளில் 'தமிழர் விருது' வழங்குதல்.

* தமிழர் வாழ்வியலைப் பேசுகின்ற 10 குறும் படங்களை உலகம் முழுவதிலும் இருந்து தேர்வு செய்து அவற்றில் 5 குறும் படங்களுக்கு தமிழர் விருது வழங்குதல்.

* தமிழ் சினிமாவில் பணியாற்ற ஆர்வமும், திறமையும், ஆற்றலும் உள்ள இளைஞர்களைத் தேர்வு செய்து தமிழ் சினிமா துறைக்கு அறிமுகப்படுத்துதல்.

* நார்வே தமிழ்த் திரைப்படவிழாவில் தமிழர் விருது பெறுகின்ற நல்ல திரைப்படங்களை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வைத்தல். நார்வே நாட்டில் நடைபெறுகின்ற திரைப்படவிழாகளுக்கும் அறிமுகம் செய்தல்.

* திரைப்பட விழாவிற்கு வருகின்ற மக்களின் பொழுதுபோக்கினை கருத்தில் கொண்டு இசைக் கச்சேரி, நடனங்கள், நகைச்சுவை நேரம் போன்ற நிகழ்வுகளோடு, பல இன மக்களின் கலை வடிவங்களை அறிமுகப்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் இந்த விழா நடக்கிறது.

திரைப்படங்களைத் தேர்வு செய்வதற்கான நிபந்தனைகள்:

- தமிழ் மொழியையும், தமிழர்களுடைய கலை, கலாச்சாரத்தை அடையாளப்படுத்துவதாக இருக்கவேண்டும்.

- திரைப்படத்தில் சொல்லப்படுகின்ற கருத்து தமிழ் சமூகத்தை நல்வழிப் படுத்துவதாக அமையவேண்டும்.

- உலகத் தமிழர்களின் இன்ப, துன்பங்களைப் பேசுவதாகவும், தமிழர்களின் நியாயமான விடையங்களுக்கு பாதகமற்ற முறையில் இருக்கவேண்டும்.

- தமிழ் இலக்கியங்கள், தமிழர் வரலாறு சார்ந்த திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

- போட்டிக்கு வரும் திரைப்படங்கள் 01.01.2011 இல் இருந்து 31.12.2011 தேதிக்கு முன் வெளியிடப்பட்டதாக இருக்கவேண்டும்.

- நார்வேயில் உள்ள திரை அரங்கங்களில் வெளியிடப்படாத, குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட படங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

- தேர்வு செய்யப்படும் சில திரைப்படங்கள் "தமிழர் விருதுக்கான" போட்டியில் திரையிடப்படாமல், சிறப்புக் காட்சிகளாகவும் காண்பிக்கப்படும்", என்று அறிவித்துள்ளார்.

குறும்படங்கள்

இந்த விழாவில் குறும்படங்களும் திரையிடப்படுகின்றன. இந்தக் குறும்படங்கள் - தமிழ் மொழி , தமிழர்கள் சார்ந்தவையாகவும், இணைய தளங்களில் ஏற்கெனவே வெளியாகாதவையாகவும் இருக்க வேண்டும்.

நார்வே தமிழ் திரைப்பட விழாவிற்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட குறும்படங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஏற்கனவே வெளியீடு செய்யப்படாத படங்களாகவும், 25 நிமிடங்களுக்கு உட்பட்டதாகவும் இருக்கவேண்டும்.

5.02.2012 தேதிக்குள் இந்த குறும்படங்கள் வெளியாகியிருக்க வேண்டும்.

திரைப்படங்களை 10.01.2012 முன்னதாக பதிவுசெய்து / அனுப்பவேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்கள் (www.ntff.no) இணையத்தளத்திலும், தமிழ் நாட்டிலும், உலகெங்கிலும் உள்ள தமிழ் ஊடகங்களிலும் பிரசுரிக்கப்படும்.

தேர்வு செய்யப்பட்ட திரைப் படங்கள் குறித்த விவரம் ஜனவரி இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படுகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X