twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏழைகளுக்கு இலவச மருந்து கேட்டு மத்திய அரசு மீது ஜேசுதாஸ் வழக்கு!

    By Staff
    |

    Jesudass
    வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஏழைகளுக்கு உயிர் காக்கும் மருந்துகளை இலவசமாக வழங்கக் கோரி பிரபல பின்னணி பாடகர் கேஜே ஜேசுதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இதை ஏற்றுக் கொண்ட கேரள நீதிமன்றம், மத்திய - மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ஏழைகளுக்கு இலவச மருந்து என்ற திட்டம் நடைமுறையில் இருந்தாலும், அது பெருமளவு மக்களுக்கு பயனளிப்பதாக இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

    இதன் அடிப்படையில், சமீபத்தில் கேரள ஐகோர்ட்டில் பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் ஒரு பொது நல ஒரு பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

    வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் ஏழைகளுக்கு உயிர் காக்கும் மருந்துகளை இலவசமாக வழங்க உத்தரவிட வேண்டும்.

    மற்ற பிரிவினருக்கு, இந்த மருந்துகளை நியாயமான விலையில் அளிக்க வேண்டும். தேசிய மருந்து கொள்கை, தேசிய சுகாதார கொள்கை ஆகியவற்றில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இம்மனுவை, தலைமை நீதிபதி எஸ்.ஆர்.பன்னுர்மத் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

    மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், கேரள அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X