Don't Miss!
- News
"நன்றி அண்ணா.. நாம சேர்ந்துட்டோம்.. அவங்களுக்கு பின்னடைவு ஆரம்பம்" - ஸ்டாலினுக்கு தேஜஸ்வி மெசேஜ்!
- Automobiles
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- Finance
மைக்ரோசாப்ட்: 200 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
- Technology
கொடுக்குற ஒவ்வொரு ரூபாய்க்கும் 'வொர்த்' ஆன Samsung போன் இந்தியாவில் அறிமுகம்!
- Sports
"ஒருமுறை கூட நோ சொல்லல" செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு.. முதல்வரை புகழ்ந்துதள்ளிய செஸ் கூட்டமைப்பு தலைவர்
- Lifestyle
வெஜ் சால்னா
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
எம்.ஜி.ஆரின் பொருள் ஒன்று விஜயகாந்த் கைக்கு வந்த கதை தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமா துறையில் வள்ளல்களாக கருதப்படும் நடிகர்கள் என்றால் அனைவரும் முதலில் எம்ஜிஆர் அவர்களைத்தான் சொல்வார்கள்.
அவருக்குப் பின் கேப்டன் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்தைப் பற்றித்தான் கூறுவார்கள்.
உணவு விஷயத்திலும், தயாரிப்பாளர்களுக்கு சம்பளத்தை விட்டுக் கொடுக்கும் விஷயத்திலும், பிறருக்கு பண உதவி செய்யும் விஷயத்திலும் திரைத்துறையில் அவ்வளவு நபர்களுக்கு உதவி செய்துள்ளாராம் விஜயகாந்த்.
கதை
பிடித்திருந்தும்
பார்த்திபன்
இயக்கத்தில்
நடிக்க
தயங்கிய
விஜயகாந்த்...
காரணம்
சொன்ன
தானு

நடிகர் சங்கம்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நான்கு மொழி திரைப்பட நடிகர்களின் சங்கமாக தென்னிந்திய சங்கம் 1952 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போது அது உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் எம்ஜிஆர். 1952-ல் ஆரம்பிக்கப்பட்ட அந்தச் சங்கத்திற்கு பல தலைவர்கள் வந்து போனாலும் 2000-ம் ஆண்டிலிருந்து 2006-ஆம் ஆண்டு வரை தலைவராக இருந்த விஜயகாந்தின் செயல்பாடுகள் தான் இன்று வரை பேசப்பட்டு வருகிறது. காரணம் சங்கத்திற்கு இரண்டு கோடி கடன் இருந்தபோது தலைவராக வந்தவர், தன்னுடைய நிர்வாகத் திறன் மூலம் அந்தக் கடனையும் அடைத்து சங்கத்திற்கு லாபத்தையும் ஈட்டித் தந்தார்.

அரசியல் பயணம்
அதே திறனை தன்னுடைய அரசியல் பயணத்திலும் செலுத்தலாம் என்று 2006ஆம் வருடம் நடந்த தேர்தலில் எம்.எல்.ஏ ஆன பிறகு நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அரசியலிலும் வந்த உடனேயே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் விஜயகாந்த். அதன் பின் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். பின்னர் உடல் நலக்குறைவால் காலப்போக்கில் அவருடைய அரசியல் செயல்பாடுகள் குறைய தொடங்கின.

எம்.ஜி.ஆர் வாகனம்
எம்ஜிஆருக்கு பல சொத்துக்கள் இருந்தது. தனிப்பட்ட சொத்துக்களை தாண்டி ஆட்சிப் பொறுப்பில் இருந்த மிகப்பெரிய கட்சியும் இருந்தது. கட்சிக்கு தலைமை ஏற்பதில் அவருடைய மனைவி ஜானகி அம்மையாருக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாருக்கும் ஆரம்ப காலகட்டத்தில் போட்டியிருந்து. பின்னர் கட்சியை கைப்பற்றினார் ஜெயலலிதா. அதேபோல அவருடைய தனிப்பட்ட சொத்துக்களை அவரிடம் வேலை பார்த்த பலருக்கு அவர் எழுது கொடுத்ததாகவும் கூறப்படும். இந்நிலையில் அவர் தனது பிரச்சாரத்திற்காக வைத்திருந்த வாகனம் இப்போது விஜயகாந்திடம் இருக்கிறது.

ஜானகி அம்மா தந்த கார்
எம்ஜிஆர் பயன்படுத்திய வாகனத்தை 1994-ஆம் ஆண்டு விஜயகாந்திற்கு கொடுத்துள்ளார் ஜானகி அம்மையார். அப்போது எம்.ஜி.ஆரிடம் நேரடியாக பணிபுரிந்த பல பேர் பதவியில் இருந்தாலும் ஆட்சியில் இருந்தாலும் அந்த வாகனம் தன்னிடம் தான் வந்தது என்று விஜயகாந்த் பெருமையாக கூறியுள்ளார். 94-லிருந்து 2005-ஆம் ஆண்டு வரை அந்த வாகனத்தை பயன்படுத்தவே இல்லையாம். 2005 என்ற எண்ணை கொண்ட அந்த காரை 2005-ல் தன்னுடைய முதல் அரசியல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதுதான் என் தலையில் எழுதியுள்ளது என்று விஜயகாந்த் தன்னுடைய அரசியல் மேடை ஒன்றில் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.