»   »  ஆஸ்கரில் தீபாவின் வாட்டர்!

ஆஸ்கரில் தீபாவின் வாட்டர்!

Subscribe to Oneindia Tamil

சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஆஸ்கர் விருதைப் பெறும் வாய்ப்பை ரங் தேசபசந்தி இழந்தது. இப்படம் இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாமல்வெளியேறியுள்ளது.

இந்தியில் வெளியாகி மெகா ஹிட் வெற்றி பெற்ற படம் ரங் தே பசந்தி. அமீர்கான்,சொஹைல் கான், அதுல் குல்கர்னி, மாதவன் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவானஇப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்டிருந்தது.

சிறந்த வெளிநாட்டுப் படப் பிரிவில் ரங் தே பசந்தி போட்டியிட்டது. இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும் படங்களைத் தேர்வு செய்யும் பணி நடந்தது. அப்போது ரங்தேச பசந்தி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறியது.

இதன் மீலம் ஆஸ்கர் விருது பெறும் வாய்ப்பை ரங் தே பசந்தி இழந்துவெளியேறியது. இருப்பினும், இந்தியரான தீபா மேத்தா இயக்கிய வாட்டர் படம்,கனடா நாட்டு படமாக இறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

வாட்டர் படத்தில் ஜான் ஆப்ரகாம், லிஸா ரே, பூலன் தேவியாக நடித்த சீமா பிஸ்வாஸ்ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சபானா ஆஸ்மி, நந்திதா தாஸை வைத்து பயர் என்ற அந்த மாதிரியான படத்தை இயக்கி மிரட்டியவர் தான் தீபாமேத்தா.

இப்போது வெளிநாட்டுப் படப் பிரிவில் வாட்டரையும் சேர்த்து மொத்தம் 9 படங்கள்இடம் பெற்றுள்ளன.

ரங் தே பசந்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாவிட்டாலும் கூட, இந்தியரான தீபாமேத்தாவின் வாட்டர் விருதுப் போட்டியில் நிற்பதை நினைத்து ஆறுதல் கொள்ளவேண்டியது தான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil