»   »  த ஆஸ்கர் கோஸ் டூ...

த ஆஸ்கர் கோஸ் டூ...

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சலஸ்: 79வது ஆஸ்கர் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகராக பாரஸ் வீடேகரும், நடிகையாக ஹெலன்மிர்ரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறந்த படத்திற்கான விருது தி டிபார்ட்டட் படத்துக்குக் கிடைத்துள்ளது.

லாஸ் ஏஞ்சலெஸின் எழில்மிகு கோடாக் தியேட்டர் அரங்கில் இன்று ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகோலாகலமாக நடந்தது. வண்ணமிகு விழாவில் தி டிபார்ட்டட் படம் 4 விருதுகளை தட்டிச் சென்றது.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தீபா மேத்தாவின் வாட்டர் படத்துக்கு விருது கிடைக்கவில்லை. இதனால்இந்தியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

விருதுகள் விவரம்:

சிறந்த படம்: தி டிபார்ட்டட்.

சிறந்த நடிகர்: பாரஸ்ட் வீடேகர் (படம்: தி லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாண்ட்)

சிறந்த இயக்குநர்: மார்டின் ஸ்கோர்சிஸ் (தி டிபார்ட்டட்)

சிறந்த நடிகை: ஹெலன் மிர்ரன் (தி க்வீன்)

துணை நடிகர்: ஆலன் ஆர்கின் (லிட்டில் மிஸ் சன்ஷைன்)

துணை நடிகை: ஜெனீபர் ஹட்சன் (ட்ரீம் கேர்ள்ஸ்)

விஷூவல் எபக்ட்ஸ்: பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்: டெட் மேன்ஸ் செஸ்ட்

அனிமேட்டட் திரைப்படம்: ஹேப்பி ஃபீட்

குறும்படம்: வெஸ்ட் பேங்க் ஸ்டோரி

குறும்படம் (அனிமேஷன்): தி டேனிஷ் போயட்

ஆடை வடிவமைப்பு: மாரி ஆண்டோனியேட்

மேக்கப்: பான்ஸ் லேபிரிந்த்

டாக்குமென்டரி: தி பிளட் ஆப் யிங்ஷோ டிஸ்ட்ரிக்ட்

டாக்குமென்டரி(பீச்சர் பிலிம்): ஏன் இன்கன்வீனியன்ட் ட்ரூத்

ஆர்ட் டைரக்ஷன்: பான்ஸ் லேபிரிந்த்

இசை: பாபல்

சவுண்ட் மிக்ஸிங்: ட்ரீம் கேர்ள்ஸ்

இசை (பாடல்): ஏன் இன்கன்வீனியன்ட் ட்ரூத்

சவுண்ட் எடிட்டிங்: லெட்டர்ஸ் பிரம் இவோ ஜிமா.

வெளிநாட்டுப் படம்: தி லைவ்ஸ் ஆப் அதர்ஸ் (ஜெர்மனி)

எடிட்டிங்: தி டிபார்ட்டட்

ஒளிப்பதிவு: பான்ஸ் லேபிரிந்த்

திரைக்கதை (அடாப்டட்): தி டிபார்ட்டட்

திரைக்கதை (ஒரிஜினல்): லிட்டில் மிஸ் சன்ஷைன்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil