»   »  டாம் க்ரூஸை முந்தினார் ஷாருக்கான்!

டாம் க்ரூஸை முந்தினார் ஷாருக்கான்!

Subscribe to Oneindia Tamil
Shahrukhan with Deepika padukone
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம், ஹாலிவுட் ஹாட் ஸ்டார் டாம் க்ரூஸின் லயன்ஸ் பார் லேம்ப்ஸ் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளதாம்.

ஷாருக்கான், தீபிகா படுகோண் நடித்து தீபாவளிக்கு வெளியான ஓம் சாந்தி ஓம் புதிய வரலாறு படைத்து வருகிறது. மெகா ஹிட் படமாகியுள்ள ஓம் சாந்தி ஓம், தற்போது ஹாலிவுட் ஸ்டார்களான டாம் க்ரூஸ், ராபர்ட் ரெட்போர்டு இணைந்து நடித்த லயன்ஸ் பார் லேம்ப்ஸ் படத்தின் சாதனையை முறியடித்துள்ளதாம்.

இந்தியா முழுவதும் திரையிடப்பட்டுள்ள ஷாருக்கின் ஓம் சாந்தி ஓம், இதுவரை 17 மில்லியன் டாலரை வசூலித்துள்ளது. அதேபோல அமெரிக்காவில் 114 இடங்களில் திரையிடப்பட்டு 1.5 மில்லியன் டாலரை அறுவடை செய்துள்ளது.

லயன்ஸ் பார் லேம்ப்ஸ் படம் இந்தியாவில் 10.3 மில்லியன் டாலர் வசூலை ஈட்டியது. தற்போது அந்த சாதனையை ஓம் சாந்தி ஓம் முறியடித்துள்ளது.

மேலும் அமெரிக்காவில் ஓம் சாந்தி ஓம் முதல் மூன்று நாட்களில் 17 லட்சத்து 64 ஆயிரத்து 131 டாலர் வசூலை ஈட்டியுள்ளதாம். இது அங்கு மிகப் பெரும் சாதனையாம்.

இதற்கு முன்பு இந்த அளவுக்கு பெரிய வசூலை படைத்த படமாக ஷாருக்கானின் முந்தைய படமான கபி அல்விதா நா கெஹனா விளங்கியது. அந்தப் படம் 13 லட்சத்து 51 ஆயிரத்து 786 டாலரை வசூலித்தது. இப்போது தனது படத்தின் சாதனையை தானே முறியடித்துள்ளார் ஷாருக்.

பாலிவுட்டின் பாதுஷா தான்தான் என்பதை மீண்டும் ஷாருக் நிரூபித்துள்ளதாக பாலிவுட்டில் பலமாக பேசப்படுகிறது.

Read more about: overtakes
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil