twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெங்களூரு சர்வதேசப் பட விழாவில் பார்த்திபனின் ஒத்த செருப்பு... ஹலிதாவின் சில்லுக்கருப்பட்டி!

    By
    |

    பெங்களூரு: பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் பார்த்திபனின் ஒத்த செருப்பு மற்றும் சில்லுக்கருப்பட்டி படங்கள் திரையிடப்படுகின்றன.

    பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. அங்குள்ள ராஜாஜி நகர் ஓரியன் மாலில் மார்ச் 4-ம் தேதி வரை 7 நாட்களுக்கு இந்தத் திரைப்பட விழா நடைபெறுகிறது.

    பெங்களூரு கண்டீரா அரங்கத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற தொடக்க விழாவில், மாநில முதலமைச்சர் முதல்வர் எடியூரப்பா பங்கேற்றார்.

    ஒவ்வொரு சூரிய நிழலிலும் ஒரு கனவு இருக்கிறது.. மஞ்சிமா மோகனின் கருத்து !ஒவ்வொரு சூரிய நிழலிலும் ஒரு கனவு இருக்கிறது.. மஞ்சிமா மோகனின் கருத்து !

    225 திரைப்படங்கள்

    225 திரைப்படங்கள்

    கே.ஜி.எப் ஹீரோ யஷ், நடிகை ஜெயப்பிரதா, தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்டோரும் இந்த விழாவில் பங்கேற்றனர். இந்தப்பட விழாவில் கன்னடம், தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளின் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. அதோடு 60 நாடுகளைச் சேர்ந்த 225 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

    இந்தியப் பிரிவில்

    இந்தியப் பிரிவில்

    கன்னடம், இந்தியா, வெளிநாடு மற்றும் ஆவணப்படம் உட்பட 7 பிரிவுகளின் கீழ் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்தியப் பிரிவில் பார்த்திபனின் ஒத்த செருப்பு, ஹலிதா ஷமீம் இயக்கி கவனிக்கப்பட்ட சில்லுக்கருப்பட்டி ஆகிய 2 தமிழ்த் திரைப்படங்கள் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    ஒத்தச் செருப்பு

    ஒத்தச் செருப்பு

    ஒத்தச் செருப்பு படத்தை பார்த்திபன் இயக்கி நடித்திருந்தார். படத்துக்கு சந்தோஷ் நாராயணன், சத்யா இசை அமைத்திருந்தனர். தனது பயாஸ்கோப் பிலிம் பிரேமர்ஸ் நிறுவனம் மூலம் ரா.பார்த்திபனே படத்தைத் தயாரித்திருந்தார். கடந்த வருடம் ரிலீஸ் ஆன, இந்தப் படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. முன்னணி இயக்குனர்கள் பலரும் படம் உலக தரத்தில் இருப்பதாகவும் புகழ்ந்தனர். பல்வேறு விழாக்களில் இந்தப் படம் விருதுகளைப் பெற்றது.

    ஆந்தாலஜி வகை

    ஆந்தாலஜி வகை

    சில்லுக்கருப்பட்டி, படத்தை ஹலிதா ஷமிம் இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே பூவரசம் பீப்பி படத்தை இயக்கியவர். சில்லுக்கருப்பட்டி படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. 4 வெவ்வேறு கதைகளை உள்ளடக்கிய ஆந்தாலஜி வகை படம் இது. சமுத்திரக்கனி, சுனேனா, மணிகண்டன், நிவேதிதா சதீஷ், லீலா சாம்சன், பேபி சாரா உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கும் ஏராளமான பாராட்டுகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    வெளிநாட்டுக் கலைஞர்கள்

    வெளிநாட்டுக் கலைஞர்கள்

    திரைப்பட விழாவை முன்னிட்டு கருத்தரங்குகள், பயிலரங்குகளும் நடக்கின்றன. இதில் இந்திய திரைக் கலைஞர்கள் மட்டுமின்றி ஈரான், பிரான்ஸ், இலங்கை, கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர், நடிகைகள். தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்று சினிமா பற்றி பேச உள்ளனர்.

    English summary
    The 12th Bengaluru International Film Festival will be taking place upto March 04. In this festival Tamils films, otha seruppu and sillu karupatti to be screened this Festival
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X