For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  'மத்தவன் எல்லாம் நடிகன் நீ கலைஞன், கவலைப்படாம நடி'..நாகேஷுக்கு எம்.ஆர்.ராதா சொன்ன நம்பிக்கை வார்த்தை

  |

  சினிமா மரபுக்கான தோற்றம் கொண்டவர்களே நடிக்க முடியும் என்றிருந்த காலத்தில் ஒடிசலான உடல், அம்மை விழுந்த முகத்துடன் ஒரு கலைஞன் தமிழ் திரையுலகை கலக்கினார்.

  சாதாரணமாக இல்லை. 1960 கள் தொடங்கி 2008 தசாவதாரம் வரை நடித்தார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தார்.

  எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் என மூண்ரு தலைமுறை முன்னணி நாயகர்களுடன் நடித்த நாகேஷின் பிறந்த நாள் இன்று.

  வாய்தா பட நடிகை தற்கொலை வழக்கு..காதலனிடம் 3 மணி நேரம் விசாரணை..ஒரு தலைக்காதலா?வாய்தா பட நடிகை தற்கொலை வழக்கு..காதலனிடம் 3 மணி நேரம் விசாரணை..ஒரு தலைக்காதலா?

  திரையுலக மரபை உடைத்த நாகேஷ்

  திரையுலக மரபை உடைத்த நாகேஷ்

  தமிழ் திரையுலகில் நடிகனாக இருக்க சுருட்டை முடி, வெள்ளை தோல், நல்ல உடல்வாகு, அழகான தோற்றம் என பல அம்சங்கள் அந்தக்காலத்தில் இருந்தது. கலைக்கு, திறமைக்கு எதுவும் தேவையில்லை என்பதை பல காலக்கட்டங்களில் பலரும் அந்த மரபை உடைத்துள்ளனர். அதில் முக்கியமானவர் நாகேஷ். சினிமாவுக்கான எந்த பொறுத்தமும் இல்லாமல் தனது நடிப்பின் மூலம் கால் பதித்து நின்றவர் நாகேஷ்.

  திருவிளையாடல் தருமி, தில்லானா மோகனாம்பாள் வைத்தி

  திருவிளையாடல் தருமி, தில்லானா மோகனாம்பாள் வைத்தி

  தில்லானா மோகனாம்பால் வைத்தி, திருவிளையாடல் தருமி, காதலிக்க நேரமில்லை செல்லப்பா, அன்பே வா ராமய்யா என பல ரோல்களில் முத்திரை பதித்தவர். பல படங்களில் நாகேஷ் ரோல் இல்லாவிட்டால் படமே இல்லை என்பதுபோல் இருக்கும். அதில் ஒரு படம் சவாலே சமாளி. இதில் சிவாஜி கணேசனை உசுப்பேற்றி உசுப்பேற்றி பண்ணையார் ஜெயலலிதாவின் தந்தையையும் குழப்பி ஒரு வழி பண்ணிவிடுவார். கவுரவம் படத்தில் யாருடாப்பா அது கண்ணனா, உன்னைப்பார்த்தா தான் அண்ணா டென்ஷன் ஆவுறாரோ இல்லையோ எதுக்குடாப்பா வந்தன்னு மகன் சிவாஜியை பார்த்து எக்காளமாக கேட்பார். அதற்கு முதல்வாரம் தான் நாலணா இருந்தால் கொடுன்னு சிவாஜியிடம் கெஞ்சியிருப்பார்.

   நாகேஷின் உற்ற நண்பர்கள்

  நாகேஷின் உற்ற நண்பர்கள்

  நாணல் என்கிற படத்தில் முக்கியமான முடிச்சை அவிழ்க்கும் பாத்திரம் நாகேசுக்கு. சைக்கிளில் லைட் இல்லதாதால் சைக்கிளை போலீஸ் ஸ்டேஷனில் பிடித்து வைத்துக்கொள்ள, அந்தப்பஞ்சாயத்துக்கு அலையும் நேரத்தில் மூன்று முக்கிய கொலையாளிகளை பிடிக்க இவரே காரணமாக அமைவார். நாகேஷுக்கு சரியான இணை என்றால் ஜெய்ஷங்கர், முத்துராமன், ஸ்ரீகாந்த் போன்ற நடிகர்கள் தான். இவர்களுடன் அவர் அடிக்கும் லூட்டி பல படங்களில் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும். பட்டணத்தில் பூதம், பொம்மலாட்டம், எதிர் நீச்சல், பூவா தலையா, காசே தான் கடவுளடா, சோப்பு சீப்பு கண்ணாடி என பல படங்களைச் சொல்லலாம்.

   எம்ஜிஆருடன் அதிக படங்களில் நடித்த நாகேஷ்

  எம்ஜிஆருடன் அதிக படங்களில் நடித்த நாகேஷ்

  நாகேஷ் ஒருவர்தான் எம்ஜிஆருடன் அதிகமான படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர், 45 படங்களில் சேர்ந்து நடித்துள்ளார். அண்ணே அண்ணேன்னு எம்ஜிஆரை அழைப்பதும், எம்ஜிஆர் அவரை தூக்கி சுழற்றும்போது அதற்கு ஏற்ப ஒத்துழைப்பதும் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட காட்சிகள். ஆனால் அதே நாகேஷ் எம்ஜிஆரை வெகுவாக கலாய்த்து போயா வாயான்னு ஒரு படத்தில் பேசியிருப்பார். அதற்கு பின்னும், முன்னும் நாகேஷ் அப்படி நடிக்கவே இல்லை. அந்தப்படம் ஏவிஎம் எடுத்த ஒரே எம்ஜிஆர் படமான அன்பே வா.

  எம்ஜிஆரை வாயா போயான்னு கலாய்த்த நாகேஷ்

  எம்ஜிஆரை வாயா போயான்னு கலாய்த்த நாகேஷ்

  அன்பே வா-படத்தில் நாகேஷ் அடிக்கும் லூட்டிகள், அதற்கு ஏற்ற வசனங்கள், போயா ஒழுங்கா சொல்றேன்ல என எம்ஜிஆரை பங்களாவை விட்டு விரட்டுவதும், ஏன் தள்ளித்தான் விடேன் என்று எம்ஜிஆர் சொல்ல முடியலன்னு தானேய்யா சொல்றேன் போயான்னு கெஞ்சும் காட்சியும் அற்புதமாக இருக்கும். தான் குடியிருக்க வாடகை கொடுத்த எம்ஜிஆர் தான் பங்களாவின் முதலாளி என தெரிந்து அதிர்ந்து போய் நிற்கும் மனோரமாவிடம் ஹாய் கண்ணம்மா என்ன பய்ந்து போய் நிக்கிற, கோட்டையும், சூட்டையும் பார்த்தா? இங்கதான் கண்டவனும் போடுறானே குளிருக்கு என அலட்சியமாக சொல்வதும், மனோரமா மட மாமா என உண்மையை சொல்ல போக எம்ஜிஆர் சத்தியம் இது சத்தியம் என பாட, யோவ் உனக்கு பாடவெல்லாம் தெரியுமா? கண்ணம்மா இந்த ஆளு ஒரு பர்ஸு வச்சிருக்கான் பாரு அடா அடா, சார் அத்த கொஞ்சம் காட்டு சார் கண்ணம்மாவும் பாக்கட்டும் என்று சொல்வார்.

   எம்.ஆர்.ராதா சொன்ன வைர வார்த்தை

  எம்.ஆர்.ராதா சொன்ன வைர வார்த்தை

  நாகேஷ் நடிக்க வருவதற்கு முன் ரயில்வேயில் சிறிய வேலையில் இருந்தார். நாடகத்தின் மேல் கொண்ட காதலில் நாடகம் போட்டு அதைப்பார்த்த முக்தா சீனிவாசன் 1959 ஆம் ஆண்டு தாமரைக்குளம் படத்தில் நாகேஷுக்கு சான்ஸ் கொடுத்தார். முதல் நாள் நாகேஷ் பலமாக சொதப்ப, அவரது உருவத்தை வைத்து உதவி இயக்குநர்கள் கடிந்து பேச நொந்துப்போன நாகேஷ் எம்.ஆர்.ராதாவிடம் சொல்லி புலம்ப எம்.ராதா சொன்ன பதில் கேலி பண்றவன கண்டுக்காத, மத்தவனெல்லாம் நடிகன், நீ கலைஞன் கவலைப்படாம நடி" என்று சொல்லியிருக்கிறார். நாகேஷை ஒரு கலைஞனாக பார்த்தது எம்.ஆர்.ராதாவின் அனுபவம். அதேபோல் நாகேஷை இனங்கண்டு சரியாக பயன்படுத்தியவர் நாகேஷின் அருமை நண்பர் கே.பாலசந்தர்.

   பாலசந்தரில் நாகேஷை பார்க்கலாம், நாகேஷுக்குள் பாலசந்தரை பார்க்கலாம்

  பாலசந்தரில் நாகேஷை பார்க்கலாம், நாகேஷுக்குள் பாலசந்தரை பார்க்கலாம்

  "பாலசந்தர் எங்களுக்கு நடிப்பு சொல்லி கொடுப்பார், சரியா நடிக்கலன்னா திட்டுவார், கோபப்படுவார். அப்ப அவர் சொல்லும் வார்த்தை நாகேஷ பாருங்கடா என்று. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் பாலச்சந்தர் நடித்துக்காட்டுவது நாகேஷ் நடிப்பது போலவே இருக்கும், நாகேஷ் நடிப்பது பாலச்சந்தர் நடித்துக்காட்டுவது போலவே இருக்கும்" இது கமல்ஹாசன் நாகேஷ் பற்றி சொன்னது. அது மட்டுமல்ல உலக நாயகனான கமல் தான் சிவாஜி, நாகேஷ் இருவரிடமிருந்துதான் நடிப்பு, டைமிங் சென்ஸ் கற்றுக்கொண்டேன் என்று சொல்லி இருக்கிறார். டைமிங் சென்ஸ் பட்டுன்னு விட்டு அடிப்பதில் நாகேஷுக்கு நிகர் நாகேஷ் தான்.

  நாகேஷின் ஆகச்சிறந்த டைமிங்க் சென்ஸ்

  நாகேஷின் ஆகச்சிறந்த டைமிங்க் சென்ஸ்

  ஒருதடவை செட்டில் கமல் சிக்கன் பீஸ் ஒன்றை சாப்பிட்டுக் கொண்டிருந்தாராம். முள் கரண்டியால் குத்தி குத்தி பிரித்துக்கொண்டிருக்க எண்டாப்பா கமல் கோழி இன்னும் சாகலையான்னு கேட்டாரம் நாகேஷ். இதுபோன்று ஷூட்டிங்கிலும் வசனத்தை தாண்டி அவர் அடிக்கும் டைமிங் காமெடி ரசிக்கப்பட்டு சேர்க்கப்படுமாம். அதேபோல் சோகக் காட்சியிலும் அவர் தனியாக சாதித்துவிடுவார். நம்மவர் படத்தில் அவர் மகள் தற்கொலை சீன், கூட நடிப்பது கமல். தந்தையின் புலம்பலை ஒரே டேக்காக பல நிமிட காட்சியை நடித்து முடித்திருப்பார். கமல் அவருடன் நடிக்க தடுமாறுவது தெரியும் அவ்வளவு ஆழம் நாகேஷ்.

  நாகேஷ் மீது பிரியம் கொண்ட பாலசந்தர், கமல் ஹாசன்

  நாகேஷ் மீது பிரியம் கொண்ட பாலசந்தர், கமல் ஹாசன்

  கமல், பால சந்தர் இருவர் வாழ்வோடும் ஒன்றாக பயணித்தவர் நாகேஷ். நீர்குமிழி தொடங்கி நாகேஷ் இல்லாமல் பாலச்சந்தர் படமே எடுத்ததில்லை. அதில் பல படங்களில் நாகேஷ் கதாநாயகனாகவே நடித்திருப்பார். கமல்ஹாசனும் தனது பேட்டிகள் அனைத்திலும் நாகேஷ், சிவாஜி பற்றி குறிப்பிட தவறியதே இல்லை. அவர் படத்தில் எல்லாம் நாகேஷை பயன்படுத்தியிருப்பார். அபூர்வ சகோதரர்களில் கொடூர வில்லன் ரோலில் நாகேஷை நடிக்க வைத்தார் கமல். அதே போல் கமலின் சொந்தப்படமான மகளிர் மட்டும் படத்தில் நாகேஷ் பிணமாக நடித்திருப்பார். அதை பல பேட்டிகளில் கமல் சொல்லி சொல்லி ரசித்திருக்கிறார்.

   இப்பக்கூட பிணமாக நடிக்கிறாரோ? நாகேஷ் அஞ்சலியில் கமல்

  இப்பக்கூட பிணமாக நடிக்கிறாரோ? நாகேஷ் அஞ்சலியில் கமல்

  நாகேஷ் இறந்த அன்று அஞ்சலி செலுத்திவிட்டு கமல் வெளியில் வந்து பேட்டி கொடுக்கும்போது சொன்னது, மகளிர் மட்டும் படத்தில் பிணமாக அழகாக நடித்திருப்பார். இப்பக்கூட அவர் நடிக்கிறாரோ என்று ஒரு நிமிடம் நினைக்க தோணுது" என்று சொன்னார். நாகேஷை விரும்பிய கமல்ஹாசனின் கடைசிப்படமும் கமலின் சொந்தப்படமான தசாவதாரம் படம் தான். ஐ ஆம் ஹானர்டுடா கமல் என்று பட ஷூட்டிங் முடிந்தவுடன் நாகேஷ் சொன்னாராம். ஒரு கலைஞனுக்கு அதைவிட வேறு என்ன தேவை.

  English summary
  At a time when only strong-looking people could act, an artist with a lanky body and a freckled face rocked the Tamil film industry. Not normal. He acted from the 1960s till 2008 Dasavatharam. He was a leading comedian for over 20 years. Today is the birthday of Nagesh, who acted with three generations of leading heroes like MGR, Sivaji, Rajini, Kamal, Ajith and Vijay.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X