மதுரையை மையமாக வைத்து கமல்ஹாசனுக்கு கதை எழுதியுள்ள பா.ரஞ்சித்... தரமான சம்பவம் காத்திருக்கு!

சென்னை: இயக்குனர் பா ரஞ்சித் தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் சமூகத்திற்கு தேவையான முக்கிய கருத்துக்களை ஆழமாக பதிவு செய்து வருகிறார்

கடைசியாக வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகியிருந்தாலும் அதிக பார்வையாளர்கள் பார்க்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் அடுத்ததாக கமல்ஹாசன் ஹீரோவாக வைத்து இயக்கவிருக்கும் பா ரஞ்சித் படத்தின் கதையை மதுரையை மையமாக வைத்து எழுதி உள்ளதாக கூறியுள்ளார்.

மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது

மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது

அட்டகத்தி மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பா ரஞ்சித்துக்கு அந்த திரைப்படம் நல்ல ஒரு அறிமுகத்தை பெற்றுத்தந்தது. பா ரஞ்சித் இயக்கத்தல் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தன்னுடைய ஒவ்வொரு படங்களும் வெரும் படங்களாக மட்டும் சென்றுவிடாமல் சமூக கருத்துக்களை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதில் பா ரஞ்சித் மிகவும் கவனத்துடன் இருந்து வருகிறார்.

கேங்ஸ்டர் டானாக

கேங்ஸ்டர் டானாக

அட்டகத்தி மெட்ராஸ் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து அடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார். இதுவரை ரஜினிகாந்த் நடித்திராத கதாபாத்திரத்தில் கபாலி மற்றும் காலா உள்ளிட்ட படங்களில் கேங்ஸ்டர் டானாக நடித்த கலக்கியிருப்பார்

வடசென்னையை கலக்கிய குத்துச்சண்டை விளையாட்டை

வடசென்னையை கலக்கிய குத்துச்சண்டை விளையாட்டை

வடசென்னை மையமாகக் கொண்ட கதைகளை கையாள்வதில் மிகச் சிறப்பாக திகழ்ந்து கொண்டிருக்கும் பா ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை 1970 மற்றும் 80-களில் வடசென்னையை கலக்கிய குத்துச்சண்டை விளையாட்டை மையமாக கொண்டு உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி அதிக பார்வையாளர்களை பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது

Recommended Video

திரையில் இருந்தாலும் தலைவர் தான்! அரசியலுக்கு நான் சம்பாதிக்க வரவில்லை.. ஓபனாக பேசிய கமல்ஹாசன்!
மதுரை பின்னணியில் உருவாக உள்ளது

மதுரை பின்னணியில் உருவாக உள்ளது

பா ரஞ்சித் இப்பொழுது காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் லீட் ரோலில் நடித்து வரும் நட்சத்திரம் நகர்கிறது என்ற காதல் திரைப்படத்தை இயக்கி வருகிறார். அடுத்ததாக கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க தயாராகி வருகிறார். பா ரஞ்சித் கமல்ஹாசன் முதல் முறையாக இணையும் படத்தின் கதை எந்த மாதிரி இருக்கப்போகிறது என பலரும் யோசித்துக் கொண்டிருக்கையில் அந்த படம் மதுரை பின்னணியில் உருவாக உள்ளதாகவும், கமல்ஹாசனை வைத்து மதுரையில் மிகப் பெரிய சம்பவம் ஒன்றை செய்ய போகிறேன். மதுரை என்றால் வேட்டியை தான் மடித்து கட்ட வேண்டும் என்று அவசியமில்லை கோட் சூட் போட்டும் சம்பவம் செய்யலாம் இவ்வாறு பா ரஞ்சித் கூறியுள்ளதை அடுத்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது ஏற்கனவே கமல் ஹாசன் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தற்போது வெளியாகி உள்ள விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனைகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X