“ஒடுக்கப்பட்ட மக்களின் உந்து சக்தி“... இயக்குனர் பா.ரஞ்சித்தின் பிறந்த நாள் ஸ்பெஷ்ல்!
சென்னை : இயக்குநர் பா. ரஞ்சித் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார்.
அவருக்கு அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளப் பக்கங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ட்விட்டரில் #HBDPaRanjith என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது.

பா ரஞ்சித்
சென்னை 28 திரைப்படத்தில் இயக்குனராக பணியாற்றிய பா. ரஞ்சித், அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே வித்தியாசமான கதையை கொடுத்து மக்கள் மத்தியில் பெயர் எடுத்தார்.

கபாலி,காலா
முதல் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கினார். சுவரில் நடக்கும் அரசியல் சண்டை குறித்து அப்பட்டமாக காட்சிப்படுத்தி பேசி நன்மதிப்பை பெற்று, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்கினார். சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட பா. ரஞ்சித் சமூக கருத்துடைய படங்களை இயக்கினார்.

சார்பட்டா பரம்பரை
பா ரஞ்சித் கடைசியாக, சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கினார். இதில். ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் விஜய் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திலும், பா.ரஞ்சித் தன்னுடைய வழக்கமான அரசியலை துணிச்சலாக பேசி இருப்பார். 1970ம் ஆண்டு சென்னையில் நடந்த பாக்ஸிங்கை கண்முன் கொண்டு வந்து இருப்பார்..குறிப்பாக திமுக அதிமுக, எமர்ஜென்சி காலக்கட்டம் பற்றி பல வசனங்கள் இப்படத்தில் இடம் பெற்றன.

39வது பிறந்த நாள்
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏதோ ஒரு வழியில் ஒரு உந்து சக்தியாக விளங்கும் இயக்குனர் பா.ரஞ்சித் தனது 39வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பா.ரஞ்சித்தின் ரசிகர்கள், #HBDPaRanjith என்ற ஹேஸ்டேக்கை டிரெண்டிங்காக்கி வருகின்றனர்.
Recommended Video

விக்ரமுடன் இணைந்துள்ளார்.
பா.ரஞ்சித் தற்போது, நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். காதல் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இப்படத்தை அடுத்து, விக்ரமுடன் இணைந்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தை ஸ்டூடியோ க்ரீன் சார்பில் கேஇ ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











