»   »  மயக்கி கற்பழித்து விட்டனராம்- பத்மா புதுப் புகார்!

மயக்கி கற்பழித்து விட்டனராம்- பத்மா புதுப் புகார்!

Subscribe to Oneindia Tamil

தொழிலதிபர் பிரதீப் கொனேருவும், அவரது நண்பரும் தன்னை மதுவில் மயக்க மருந்தைக் கலந்து கற்பழித்து விட்டதாக பிரதீப்பிடம் ரூ. 10 கோடி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை பத்மா நாராயணன் புதிய புகார் ஒன்றைக் கூறியுள்ளார்.

வீராசாமி படத்தில் நடித்துள்ள பத்மா நாராயணன், தொழிலதிபர் பிரதீப் கொனேரு என்பவருடன் நெருக்கமாக பழகியுள்ளார். அவர் பெரிய பணக்காரர் என்பதை அறிந்ததும், தனது நண்பர்கள் உதவியுடன், பிரதீப்புடன் படு நெருக்கமாக இருந்ததை வீடியோவில் பதிவு செய்து அதைக் காட்டி பிரதீப்பை மிரட்டியுள்ளார்.

ரூ. 10 கோடி பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் இந்த வீடியோவை அம்பலப்படுத்துவேன் என்று மிரட்டியுள்ளார் பத்மா. இதுகுறித்து பிரதீப் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் பத்மா அவரது நண்பர்கள் நடிகர் சஞ்சய், சந்திரன், அமீர்ஜான் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பத்மாவையும் அவரது நண்பர்களையும் ஜாமீனில் எடுக்க பத்மாவின் வழக்கறிஞர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், பத்மா புதுப் புகார் ஒன்றை சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ளார்.

அதில் தன்னை மயக்க மருந்து கொடுத்து பிரதீப்பும் அவரது நண்பரும் கற்பழித்து விட்டதாக கூறியுள்ளார் பத்மா.

அந்தப் புகாரில் பத்மா கூறியிருப்பதாவது

நான் சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரர் நகரில் வசித்து வருகிறேன். என் மீது பிரதீப் என்பவர் கொடுத்த பொய்ப் புகாரின் பேரில் நான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன்.

கடந்த 24ம் தேதி மாலை 5 மணியளவில் பிரதீப் எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினார். பின்னர் போன் செய்தார். எனக்குப் பிறந்த நாள், எனவே விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன், வந்து கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

எனக்கும், அவருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்ததால், நான் அதை ஏற்று அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றேன். வரவேற்பறையில் காத்திருந்த அவர் என்னை அங்கேய அமரச் சொல்லி விட்டு தனது அறைக்குச் சென்றார்.

பின்னர் அரை மணி நேரம் கழித்து வந்தார். விருந்து ஆரம்பமாகி விட்டது, வா போகலாம் என்று அழைத்தார். அறைக்குப் போனபோது அங்கு பிரதீப்பின் நண்பர் நிர்மல் குமாரும் இருந்தார்.

அவர்கள் இருவரும் மது அருந்தினர். பின்னர் எனக்கும் அங்கு ஏற்கனவே கிளாஸில் ஊற்றப்பட்டிருந்த மதுவைக் கொடுத்தனர். நான் அதைக் குடித்தேன். சிறிது நேரத்திலேயே எனக்கு மயக்கமாக வந்தது.

பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து என்னை அனுபவிக்க ஆரம்பித்தனர். ஆனால் சுய நினைவிருந்தும், என்னால் அதைத் தடுக்க முடியவில்லை.

மயக்கம் தெளிந்து பார்த்தபோது எனக்கு உடல் எல்லாம் ஒரே வலி, அசதியாக இருந்தது. என்னை இப்படிக் கெடுத்து விட்டீர்களே என்று அவர்களிடம் கேட்டன். அதற்கு அவர்கள் மன்னித்து விடுமாறு கூறினர்.

அப்படியானால் என்னைக் கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று பிரதீப்பிடம் கூறினேன். அதற்குக் கோபமடைந்த அவர் கொன்று விடுவேன் என்றார். பின்னர் வெளியில் சொன்னால் உன் மீது பொய்ப் புகார் கொடுத்து சிறையில் தள்ளி விடுவேன் என்று மிரட்டினார்.

பின்னர் என்னை நிர்வாணப்படுத்தி படம் எடுத்தார். அதைக் காட்டி மிரட்டினார். அதை சிடியிலும் பதிவு செய்து கொண்டு தனது லேப்டாப் கம்ப்யூட்டரில் போட்டு வைத்தார்.

என் மீது பொய்யான புகார் கூறப்பட்டுள்ளது. உண்மையில் பிரதீப்பும் அவரது நண்பரும்தான் என்னைக் கற்பழித்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது புகாரில் கூறியுள்ளார் பத்மா.

பத்மாவின் இந்தப் புதிய புகார் இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே தனது மகள் பெயர் சந்தி சிரிக்கும்படி ஆகி விட்டதால், அவரது தந்தை நாராயணன் பெரும் கோபமடைந்துள்ளாராம். எல்லாவற்றுக்கும் உனது வளர்ப்புதான் காரணம் என்று கூறி தனது மனைவியை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

பத்மா விவகாரம் தொடர்பாக போலீஸார் விசாரணைக்கு சென்றபோதுதான் இந்த சம்பவம் நடந்தது. விசாரணைக்காக போன போலீஸார் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி விட்டு வந்தனராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil