»   »  ஒரு நாளைக்கு ரூ. 10,000:பத்மா தந்த சம்பளம்

ஒரு நாளைக்கு ரூ. 10,000:பத்மா தந்த சம்பளம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தொழிலதிபர்களுடன் நெருக்கமாக இருந்ததை வீடியோவில் எடுத்து, பணம் கேட்டு அவரை மிரட்டி, சிறையில் கம்பி எண்ணிக் கொண்டுள்ள நடிகை பத்மா நாராயணனை அவரது பெற்றோர் சந்தித்து கண்ணீர் விட்டு அழுது, பத்மாவுக்கு ஆறுதல் கூறினர்.

நல்ல வசதியான, கெளரவமான குடும்பத்தில் பிறந்து விட்டு அழகுத் திமிராலும், ஆடம்பரமாக வாழ வேண்டும், சுதந்திரமாக உலவ வேண்டும் என்ற வேகத்தாலும் தடம் மாறி, தடுமாறி, இப்போது சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார் நடிகை பத்மா.

அவரது தந்தை ஆரம்பத்திலிருந்தே பத்மாவின் போக்கைக் கண்டித்து வந்ததால், அவருக்கு பத்மா சிறையில் தள்ளப்பட்டது பெரும் அதிர்ச்சியைத் தரவில்லை. இதுதான் நடக்கும் என்று நான் நினைத்தேன். அது நடந்தே விட்டது என்று அவர் கோபத்துடன் பேசி வருகிறார்.

ஆனால் பத்மாவின் தாயார்தான் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார். பத்மாவை அவர் போக்கில் விட்டது அவரது தாயார்தான்.

போலீஸார் விசாரணைக்கு வந்தபோது கூட அவர்கள் கண் முன்பாகவே, இத்தனைக்கும் காரணம் நீதானே என்று மனைவியை அடித்தாராம் பத்மாவின் தந்தை நாராயணன்.

பத்மா சிறையில் அடைக்கப்பட்டு 6 நாட்களாகின்றன. ஆனால் அவரை அவரது பெற்றோரோ அல்லது உறவினர்களோ, நண்பர்களோ பார்க்க வரவில்லை. வக்கீல்கள் மட்டும்தான் சந்தித்து வந்தனர்.

இது பத்மாவை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்க, பத்மாவின் வழக்கறிஞர் செல்வராஜ் உள்ளிட்டோர் பத்மாவின் பெற்றோரை அவர்களை சமாதானப்படுத்தி, அவரை சந்தித்து ஆறுதல் கூறுமாறு கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து பத்மாவின் தந்தையும், தாயும் நேற்று புழல் சிறைக்குச் சென்றனர். அங்கு அடைக்கப்பட்டுள்ள பத்மாவை அவர்கள் சந்தித்தனர். தந்தை, தாயைப் பார்த்ததும் பத்மா கதறி அழுதாராம். பத்மாவின் தாயாரும் அழுதுள்ளார். தந்தை நாராயணனும் கண் கலங்கி நின்றிருக்கிறார்.

இனிமேல் எந்த்த தப்பும் செய்ய மாட்டேன், என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி கதறி அழுத பத்மாவை தந்தை நாராயணன் ஆறுதல் கூறி தேற்றினாராம்.

பத்மாவை சந்தித்து விட்டு வெளியே வந்த நாராயணன், வக்கீல் செல்வராஜிடம் வழக்கு குறித்து பேசியுள்ளார். மேலும், தன்னை தொழிலதிபர் பிரதீப் கொணேரு கற்பழித்து விட்டதாக பத்மா சார்பில் மாநகர காவல்துறை ஆணையரிடம் கொடுக்கப்பட்டுள்ள புகாரை அப்படியே விட்டு விடுமாறும் அது தொடர்பாக மேல் நடவடிக்கை எதையும் எடுக்க வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது பத்மாவை ஜாமீனில் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை அவரது தந்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கிடையே, பத்மா கொடுத்த கற்பழிப்பு புகார் குறித்த உண்மைத் தன்மையை விசாரிக்க அவர் குறிப்பிட்டிருந்த பார்க் ஹோட்டலுக்கு போலீஸ் குழு சென்றது. அங்கு ஹோட்டல் ஊழியர்களிடம் பத்மா, பிரதீப் குறித்து விசாரித்துள்ளனர்.

பத்மாவும், பிரதீப்பும் தங்கியிருந்த 5001ம் எண் அறைக்கு உணவு, மதுபானம் சப்ளை செய்த சப்ளையர்களிடமும் விசாரித்தனர்.

சம்பவ தினத்தன்று அறைக்குள் ஏதோ சத்தம் கேட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்து அறைகளில் தங்கியிருந்தவர்கள் வெளியே வந்தனர். அப்போது பிரதீப்பும், பத்மாவும் ஒன்றுமில்லை என்று கூறியதால் அனைவரும் போய் விட்டனர்.

மற்றபடி உள்ளே நடந்தது என்ன என்று தங்களுக்குத் தெரியாது என ஊழியர்கள் கூறியுள்ளனர்.

அதேசமயம், பிரதீப், பத்மா ஆபாச கோலத்தில் இருந்ததை தான்தான் படம் பிடித்தேன் என்று கைதாகியுள்ள பத்மாவின் கூட்டாளியான சஞ்சய் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மேலும், பத்மா, பிரதீப்பைக் காதலித்தது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் நான் பத்மாவைக் காதலித்தேன். அவரிடம் உதவியாளர் போல இருந்தேன். தினமும் எனக்கு ரூ. 10 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் போல கொடுத்து வந்தார் பத்மா என்று கூறியுள்ளார் சஞ்சய்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil