»   »  பத்மப்பிரியா - காவ்யா மல்யுத்தம்

பத்மப்பிரியா - காவ்யா மல்யுத்தம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

முண்டா தட்டாத குறையாக மலையாளத்தில் யார் நம்பர் ஒன் என்ற மல்யுத்தப்போட்டியில் களம் இறங்கி களேபரப்படுத்தி வருகிறார்கள் பத்மப்பிரியாவும், காவ்யாமாதவனும்.

தமிழ் சினிமாவை அதகளப்படுத்தி வருவது இப்போதைக்கு மலையாளமகரந்தங்கள்தான். அம்புட்டு பேரும் ஒட்டுமொத்தமாக கேரளாவிலிருந்து கிளம்பிகோலிவுட்டை வாசப்படுத்தி வருகிறார்கள்.

அதற்கு நேர் மாறானவர் காவ்யா மாதவன். யார் எங்கே போனாலும் எனக்குக்கவலையில்லை, நான் எப்போதும் மலையாள சினிமாவில்தான் நடிப்பேன் என்றுஉடும்புப் பிடியாக மலையாளத்தை மட்டுமே மனதில் வைத்து நடித்து வருகிறார்காவ்யா.

மலையாளத்தில ஒரு படத்தில் நடித்தவுடன் அடுத்த படத்திற்கு சென்னைக்கு வந்துஅட்வான்ஸ் வாங்குவதுதான் இப்போதைய மலையாள நடிகைகளின் புது வழக்கம்.அந்த வழக்கத்திற்கு விரோதமானவர் காவ்யா.

கோபிகா, நயனதாரா, மீரா ஜாஸ்மின், அசின், பாவனா என அத்தனை பேரும்சென்னையில் வட்டமடித்துக் கொண்டிருக்க, கொச்சிக்கும், திருவனந்தபுரத்திற்கும்பறந்து பறந்து மலையாளப் படங்களில் நடித்து வருகிறார் காவ்யா.

காவ்யாவும் ஒரிரு தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு அதிர்ஷ்டம்கை கொடுக்கவில்லை. இதனால் மறுபடியும் மலையாளப் படத்துக்கே திரும்பியவர்இனிமேல் வேறு படங்கள் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தார்.

இதையடுத்து மலையாள முன்னணி நடிகர்கள் அத்தனை பேரின் படங்களிலும் நடிக்கஆரம்பித்தார் காவ்யா. அவரது நல்ல நேரமோ என்னவோ, மலையாளத்தில் நேட்டிவ்ஹீரோயின்களுக்கு பெரும் பஞ்சம் ஏற்படவே தனிக்காட்டு ராணியானார் காவ்யா.

ஆனால் இப்போது அவருக்கு கடும் போட்டியாக உருவெடுத்துள்ளாராம்பத்மப்பிரியா. காவ்யாவைப் போலவே இவரும் அத்தனை ஹீரோக்களையும்கவர்ந்திழுத்து விட்டார். கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களுடனும் ஒரு ரவுண்டு கட்டிவிட்ட பத்மப்பிரியா அடுத்த ரவுண்டுக்கும் அதிரடியாக தயாராகி வருகிறாராம்.

கை நிறையப் படங்களுடன் காவ்யாவுக்கு பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கும்பத்மப்பிரியா அடுத்த நம்பர் ஒன் தான்தான் என்ற எண்ணத்துக்கே வந்து விட்டாராம்.

இவர்களின் போட்டி விரைவில் உச்சத்தை அடையப் போகிறது என்கிறார்கள்.இருவரும் நடித்த இரண்டு படங்கள் இந்த மாதம் வெளியாகின்றன.

காவ்யா நடித்த சக்கரமுத்து, வாஸ்தவம் ஆகிய படங்களும், பத்மப்பிரியா நடித்தகருத்தபக்ஷிகள், எஸ் யுவர் ஆனர் ஆகிய படங்களும் ஒரே நாளில்வெளியாகின்றனவாம். இதில் சக்கரமுத்து படத்தில் காவ்யாவுக்கு ஜோடிபோட்டிருப்பவர் அவரது லக்கி ஸ்டார் திலீப். வாஸ்தவம் படத்தில் பிருத்விராஜ்நடித்துள்ளார்.

அதேபோல கருத்தபக்ஷிகள் படத்தில் மம்ட்டியுடன் சேர்ந்து நடித்துள்ளார் பத்மா. எஸ்யுவர் ஆனர் படத்தில் அவருக்கு ஜோடி காமெடியன் சீனிவாசன். இந்த நான்குபடங்களுமே பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளன.

இந்தப் படங்களில் யார் முந்தப் போகிறார்களோ அவர்கள்தான் அடுத்த நம்பர் ஒன்நாயகி என்று மலையாள திரையுலகினர் கூறுகிறார்கள். அந்த அளவுக்குகாவ்யாவுக்கும், பத்மாவுக்கும் போட்டி கடுமையாம்.

சபாஷ் செலம்பலான போட்டி..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil