»   »  நூல் விடும் பத்மப்ரியா!

நூல் விடும் பத்மப்ரியா!

Subscribe to Oneindia Tamil

நிறைய நடித்து சாதனை படைத்து டயர்ட் ஆகி விட்ட பத்மப்ரியா அடுத்து, லைட், கேமரா, ஆக்ஷன் எனசொல்லப் போகிறாராம். அதாவது டைரக்ஷனில் குதிக்கப் போகிறாராம்.

சேரனின் கண்டுபிடிப்பான கோபிகா படு வேகமாக முன்னேறி ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம் என படுபிசியாக உள்ளார். அடுத்த கண்டுபிடிப்பான பத்மப்ரியாவும் தமிழில் வேகமாக முன்னேறி வந்தார். ஆனால்அவரது வாய்த்துடுக்கும், கிளாமர் கடலில் ஓவராக குதித்ததும் அவருக்கு விரோதமாக போய் விட்டது.

அலம்பல் அலமேலு என முத்திரை குத்தப்பட்டு விட்டதால் பத்மப்ரியாவுக்கு தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள்வரவில்லை. இதனால் கபால் என மலையாளத்துக்குத் தாவினார். அங்கே அடுத்தடுத்து நிறையப் படங்கள்வந்ததால் அப்படியே மலையாளத்தில் செட்டிலாகி விட்டார்.

அவருக்கும், முன்னணி நடிகையான காவ்யா மாதவனுக்கும்தான் இப்போது யார் நம்பர் ஒன் என்பதில் அங்கேகடும் போட்டியே. கோபிகாவும் கூட மாட போட்டியில் நிற்கிறார்.

இந்த நிலையில் நடிப்புதான் இப்போதைய தொழில் என்றாலும் கூட, இயக்குநராவதுதான் தனது நீண்ட நாளையகனவு என்று கூறி வருகிறார் பத்மா. தான் நடித்து வரும் இயக்குநர்களிடம் டைரக்ஷன் குறித்து நிறைய கேட்டுவைத்துள்ளதாக கூறும் பத்மா,

இப்போது தான் ஏற்கனவே நடித்த இயக்குநர்களிடம் (தமிழ் இயக்குநர்களிடம்), தன்னை அசிஸ்டென்ட் ஆகசேர்த்துக் கொள்ளுமாறு கோரி ஓலை விட்டுள்ளாராம். நடிப்பில் திருப்திகரமாக செய்து விட்டேன். அடுத்துஇயக்குநராகப் போகிறேன். கையில் சில கதைகள் உள்ளன. தொழில் ரீதியாக இயக்குநராவதற்கு முன்பு பிரபலஇயக்குநர் ஒருவரிடம் முறைப்படி அசிஸ்டென்ட் ஆக சேர்ந்து முழுமையாக தெரிந்து கொள்ளஆசைப்படுகிறேன் என்கிறாராம் பத்மா.

சேரன், விஷ்ணுவர்த்தன் ஆகியோரிடம் பத்மாவின் ஓலை போயுள்ளதாம். ஆனால் இருவருமே இதுகுறித்துஎந்தப் பதிலையும் தரவில்லையாம். சேரன், நவ்யாவோடு படு பிசியாக உள்ளார் (மாயக்கண்ணாடிபடத்தில்தான்!). விஷ்ணுவர்த்தனும் அடுத்த படம் குறித்த வேலையில் இறங்கி விட்டார்.

இவர்களிடமிருந்து வரும் பதிலைப் பொறுத்துதான் டைரக்ஷனில் குதிப்பது குறித்து முடிவெடுக்கவுள்ளாராம்பத்மா. அதற்கு முன்பாக வீட்டில் தனியாக இருக்கும்போது லைட், கேமரா, ஆக்ஷன் என்று சொல்லி, சுய பயிற்சிஎடுத்துக் கொள்கிறாராம்.

பத்மாவுக்கு இயக்குநர்கள் இதயத்தில் இடம் கிடைக்காமல் போய் விடுமா என்ன?

Please Wait while comments are loading...