»   »  பத்மாவுக்கு ஜாமீன்

பத்மாவுக்கு ஜாமீன்

Subscribe to Oneindia Tamil

ஆந்திர தொழிலதிபர் பிரதீப் கொணேருவுடன் பலான கோலத்தில் இருந்ததைக் காட்டி 10 கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை பத்மாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

வீராசாமி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனவர் பத்மா. இவர் திரையுலகிற்கு வீராசாமி படம் மூலம் அறிமுகமானாலும், பல திரையுலக பிரமுகர்களுக்கு வெகு நாளாக அறிமுகமாம். மாடலிங் செய்து வந்தபோது பலரையும் தனது அழகால் வீழ்த்தியவர் பத்மா.

வயது ஏறியதால் மாடலிங் வாய்ப்பு மங்கியது, சினிமா வாய்ப்புகளும் சிறப்பாக இல்லை. இதனால் தனது காதலர் சஞ்சய்யுடன் சேர்ந்து, தன்னுடன் உல்லாசமாக இருக்க வரும் தொழிலதிபர்களை, ஆபாச கோலத்தில் படம் எடுத்து அதைக் காட்டி பணம் பறிக்க ஆரம்பித்தார் பத்மா.

அப்படித்தான் பிரதீப் கொணேரும் வந்து சிக்கினார். பிரதீப் கொணேருவுடன் தான் ஆபாச கோலத்தில் இருந்ததைப் படம் எடுத்து வைத்து அதைக் காட்டி ரூ. 10 கோடி கொடுத்தால்கதான் ஆச்சு என்று பத்மா கொக்கியைப் போட, பயந்து போன கொணேரு போலீஸில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து பத்மாவையும் அவரது கூட்டாளிகளையும் போலீஸார் பொடி வைத்துப் பிடித்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்ட பத்மா, அத்தனை அசிங்கங்களையும் நினைத்து கண்ணீர் விட்டு அழுதபடி நாட்களைக் கழித்தார்.

ஆரம்பத்தில் பத்மா சார்பில் யாரும் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில், அவரது சார்பில் வழக்கறிஞர் பாலு ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று நீதிபதி ஜெயபால் முன்னிலையில், விசாரணைக்கு வந்தது. அப்போது பாலு வாதிடுகையில், 45 நாட்களாக பத்மாவதி சிறையில் இருக்கிறார். புலன் விசாரணை முடிந்து விட்டது. அதனால் பத்மாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதாடினார்.

இதனைக் கேட்ட நீதிபதி ஜெயபால், நடிகை பத்மாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அதன்படி, ரூ. 5,000க்கு சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு இரண்டு நபர் ஜாமீன் கொடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

ஜாமீன் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து பத்மா விரைவில் விடுதலையாகி வெளியே வருவார் என்று தெரிகிறது.

Read more about: padma narayanan
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil