ஊ ஹுவா பத்மப்பிரியா!

By Staff

கிளாமர் கோதாவில் இறங்கி எடுபடாமல் ஏறக்கட்டப்பட்ட பத்மப்ரியா, ஸ்டண்ட் ராணியாக அவதாரம் எடுத்து களறி கற்று வருகிறாராம்.

மம்முட்டி, சரத்குமார் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் மலையாளப் படம் (தமிழிலும் வருகிறது) பழசிராஜா. மலையாளப் படவுலகிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரமாண்டமாக எடுக்கப்படுகிறது பழசிராஜா.

ஹரிஹரன் இயக்க, எம்.டி.வாசுதேவன் திரைக்கதை அமைக்க உருவாகும் இப்படத்தில் பழசிராஜா என்ற மன்னர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மம்முட்டி. அவருடைய படைத் தளபதியாக வருகிறார் சரத்குமார். மலையாளத்தில் சரத் நடிக்கும் முதல் படம் என்பதால் அவரது நடிப்பு குறித்து கேரளாவில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தில் முதலில் நாயகியாக நடிக்க ஹாலிவுட் நடிகை லிண்டாவைத்தான் தேர்வு செய்தனர். ஆனால் படத்தின் கதையைக் கேட்ட லிண்டா நடிக்க இயலாது எனக் கூறி விட்டாராம்.

கதையில் எந்தக் கோளாறும் இல்லை. ஆனால், ராணியாக நடிக்கும் லிண்டாவுக்கு களறிச் சண்டை போடும் காட்சிகள் உள்ளனவாம். தனக்கு களறி வராது என்பதால்தான் ஏமாற்றத்துடன் இப்படத்தை வேண்டாம் என்று கூறி விட்டாராம் லிண்டா.

இதையடுத்து பத்மப்ரியாவை அணுகி நீங்க நடிக்க முடியுமா என்று கேட்டுள்ளனர். அவருக்கும் களறி தெரியாது என்பதால் அவரும் நிராகரிக்கப்பட்டார். என்னடா இது பழசிக்கு வந்த பஞ்சாயத்து என்று குழம்பிய ஹரிஹரன் இறுதியில் கனிகாவை இப்போது நாயகியாக்கியுள்ளார். கனிகாவுக்கு களரி கொறச்சு, கொறச்சு அறியுமாம்.

அதை ஃபைன் ட்யூன் செய்யும் விதமாக களறிப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளாராம் கனிகா.

ராணி கேரக்டரில் நடிக்க முடியாமல் விலகிய பத்மப்பிரியாவை, விட மனம் இல்லாத ஹரிஹரன், அவரை இப்போது பழங்குடியினப் பெண் வேடத்திற்குப் புக் செய்துள்ளார்.

கனிகா களறி விளையாட்டில் ஈடுபடத்தைப் பார்த்த பத்மாவுக்கு ஆசைப் பற்றிக் கொண்டு விட்டதாம். கனிகாவால் முடிவது ஏன் நம்மால் முடியாது என்று வீறுகொண்டெழுந்த பத்மாவும் இப்போது களறி பயில ஆரம்பித்துள்ளாராம்.

உடனடியாக பூந்துறை என்ற இடத்தில் உள்ள போதி தர்மா தற்காப்புக் கலை பயிற்சி நிலையத்தில் சேர்ந்த பத்மா, அங்கு களறி கற்க ஆரம்பித்துள்ளாராம். சோமன் மாஸ்டர் என்பவர் பத்மாவுக்கு களறி கற்றுக் கொடுத்து வருகிறாராம்.

என்ன பத்மா, விஜயசாந்தியாக மாறப் போறீங்களா என்று பத்மப்ரியாவிடம் கேள்விக் கொக்கியைப் போட்டோம். முத்து முத்தாக முகத்தில் பூத்திருந்த வியர்வைப் பூக்களை பூத்துவாலையால் ஒற்றியெடுத்தபடி பத்மப்ரியா பேசுகையில்,

யாருடனும் சண்டை போடவோ அல்லது போட்டி போடவோ இதைக் கற்வில்லை.

களறி பற்றி எனக்குத் தெரியாது. அதைத் தெரிந்து கொள்ளவே சேர்ந்தேன். எதிர்காலத்தில் இதுபோன்ற கேரக்டர்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் உதவியாக இருக்கும் அல்லவா, அதற்காகத்தான் சேர்ந்தேன்.

அதை விட களறி அருமையான தற்காப்புக் கலை. தனிப்பட்ட முறையிலும் இது நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும். அதனால்தான் ஆர்வத்துடன் இதைக் கற்று வருகிறேன். ரொம்ப ஜாலியாகவும், ஈடுபாட்டோடும் களறியைக் கற்று வருகிறேன் என்று கூறி விட்டு மறுபடியும் மங்கா மங்காவென்று சண்டை போடக் கிளம்பி விட்டார் பத்மா.

அலம்பல் அம்பிகள் இனிமேல் பத்மப்ரியாவிடம் கொஞ்சம் ஜாக்கிரதையுடன்தான் பழக வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X