பத்மப்பிரியாவின் தவம் பல தயாரிப்பாளர்கள் பத்மப்பிரியாவின் கால்ஷீட்டுக்காக தவம் இருந்து வருகிறார்களாம்.சேரனின் தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு இறக்குமதியாகியுள்ளார் இந்த கேரளத்து பட்டர்பிளை. பார்க்கபளிச்சென படு நீட்டாக இருக்கிறார் பத்மப்பிரியா.தவமாய் தவமிருந்து படத்திற்கு முதலில் கோபிகாவைத்தான் அணுகினார் சேரன். ஆட்டோகிராப் மூலம் ஏற்றம் கொடுத்தவர்என்பதால் கோபிகாவின் கால்ஷீட் படாரென கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்தார் சேரன்.ஆனால் சேரனுக்கு அப்செட் கொடுப்பது போல, கால்ஷீட் கைவசம் இல்லை என்று கூறி கையை விரித்து விட்டார் கோபிகா.கடுப்பாகிப் போன சேரன் அடுத்த வண்டியில் ஏறி கேரளாவுக்குப் போனார். அங்கே வலை வீசித் தேடியதில் அகப்பட்டவர்தான்பத்மப்பிரியா என்ற இந்த குல்பி.சேரன் படம் என்பதால் இன்னொரு கோபிகாவாக சட்டுபுட்டென்று மாறி விடலாம் என்ற கனவில் இருக்கும் பத்மப்பிரியாதவமாய் தவமிருந்து பட ரிலீஸை படு ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டுள்ளார்.இதற்கிடையே, தவமாய் தவமிருந்து படத்தில் பத்மப்பிரியாவின் நடிப்பைக் கேள்விப்பட்டு வியந்து போன பல இயக்குனர்கள்பத்மாவைத் தேடி வர ஆரம்பித்துவிட்டனர்.அவர்களைப் பார்த்து பத்மப்பிரியாவும் புளகாங்கிதமடைந்துதான் இருக்கிறார். ஆனால் என்ன புண்ணியம், ஒரு படத்தில் கூடஅவரால் புக் ஆக முடியவில்லை. என்னவாம்?தவமாய் தவமிருந்து படம் முடிந்து, வெளியாகி ஓடும் வரை அடுத்த படத்திலும் புக் ஆகக் கூடாது என்று பத்மாவிடம்காண்டிராக்ட் போட்டு வைத்துள்ளாராம் சேரன்.எல்லாம் கோபிகா மூலம் கிடைத்த பாடம் தான் காரணம் என்கிறார்கள். இதனால் தவமாய் தவமிருந்து வெளியாகும் வரை ஒருபடத்திலும் புக் ஆக முடியாதாம் பத்மாவால்.இருந்தாலும் சேச்சி ரொம்பவும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எப்படியும் தவமாய் தவமிருந்து படு சூப்பராக ஓடும் என்றநம்பிக்கையில் இருக்கும் இவர், அதற்கேற்றவாறு சம்பளத்தையும் ஏத்திவிடலாம் என்ற கேரளத்துக் கணக்கில் இருக்கிறாராம்பத்மா.கேரளா என்றாலே வெவரம் தானே..முன்னதாக சூர்யாவின் தம்பி கார்த்திக் அறிமுகமாகும் பருத்தி வீரன் படத்தில் பத்மாவை நடிக்க வைக்க அமீர் முயன்றதுநினைவிருக்கலாம். ஆனால், தமிழகத்து கிராமத்து முகத்துக்கு இவர் சரிப்பட மாட்டார் என்பதால் ப்ரியாமணியை புக்செய்துவிட்டார்.அந்த வருத்தம் மட்டும் பத்மாவிடம் இருந்து இன்னும் விலகவில்லையாம். என்ன பண்றது??

By Staff

பல தயாரிப்பாளர்கள் பத்மப்பிரியாவின் கால்ஷீட்டுக்காக தவம் இருந்து வருகிறார்களாம்.

சேரனின் தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு இறக்குமதியாகியுள்ளார் இந்த கேரளத்து பட்டர்பிளை. பார்க்கபளிச்சென படு நீட்டாக இருக்கிறார் பத்மப்பிரியா.

தவமாய் தவமிருந்து படத்திற்கு முதலில் கோபிகாவைத்தான் அணுகினார் சேரன். ஆட்டோகிராப் மூலம் ஏற்றம் கொடுத்தவர்என்பதால் கோபிகாவின் கால்ஷீட் படாரென கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்தார் சேரன்.

ஆனால் சேரனுக்கு அப்செட் கொடுப்பது போல, கால்ஷீட் கைவசம் இல்லை என்று கூறி கையை விரித்து விட்டார் கோபிகா.

கடுப்பாகிப் போன சேரன் அடுத்த வண்டியில் ஏறி கேரளாவுக்குப் போனார். அங்கே வலை வீசித் தேடியதில் அகப்பட்டவர்தான்பத்மப்பிரியா என்ற இந்த குல்பி.


சேரன் படம் என்பதால் இன்னொரு கோபிகாவாக சட்டுபுட்டென்று மாறி விடலாம் என்ற கனவில் இருக்கும் பத்மப்பிரியாதவமாய் தவமிருந்து பட ரிலீஸை படு ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டுள்ளார்.

இதற்கிடையே, தவமாய் தவமிருந்து படத்தில் பத்மப்பிரியாவின் நடிப்பைக் கேள்விப்பட்டு வியந்து போன பல இயக்குனர்கள்பத்மாவைத் தேடி வர ஆரம்பித்துவிட்டனர்.

அவர்களைப் பார்த்து பத்மப்பிரியாவும் புளகாங்கிதமடைந்துதான் இருக்கிறார். ஆனால் என்ன புண்ணியம், ஒரு படத்தில் கூடஅவரால் புக் ஆக முடியவில்லை. என்னவாம்?


தவமாய் தவமிருந்து படம் முடிந்து, வெளியாகி ஓடும் வரை அடுத்த படத்திலும் புக் ஆகக் கூடாது என்று பத்மாவிடம்காண்டிராக்ட் போட்டு வைத்துள்ளாராம் சேரன்.

எல்லாம் கோபிகா மூலம் கிடைத்த பாடம் தான் காரணம் என்கிறார்கள். இதனால் தவமாய் தவமிருந்து வெளியாகும் வரை ஒருபடத்திலும் புக் ஆக முடியாதாம் பத்மாவால்.

இருந்தாலும் சேச்சி ரொம்பவும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எப்படியும் தவமாய் தவமிருந்து படு சூப்பராக ஓடும் என்றநம்பிக்கையில் இருக்கும் இவர், அதற்கேற்றவாறு சம்பளத்தையும் ஏத்திவிடலாம் என்ற கேரளத்துக் கணக்கில் இருக்கிறாராம்பத்மா.


கேரளா என்றாலே வெவரம் தானே..

முன்னதாக சூர்யாவின் தம்பி கார்த்திக் அறிமுகமாகும் பருத்தி வீரன் படத்தில் பத்மாவை நடிக்க வைக்க அமீர் முயன்றதுநினைவிருக்கலாம். ஆனால், தமிழகத்து கிராமத்து முகத்துக்கு இவர் சரிப்பட மாட்டார் என்பதால் ப்ரியாமணியை புக்செய்துவிட்டார்.

அந்த வருத்தம் மட்டும் பத்மாவிடம் இருந்து இன்னும் விலகவில்லையாம். என்ன பண்றது??

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X