»   »  விபச்சாரம்.. வீடியோ..மிரட்டல்..:நிஜ வில்லியான பத்மா நாராயணன்!

விபச்சாரம்.. வீடியோ..மிரட்டல்..:நிஜ வில்லியான பத்மா நாராயணன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வீராசாமி படத்தில் 2வது நாயகியாக நடித்திருந்த பத்மா நாராயணன் சினிமாவில் வருவதைப் போல பயங்கர வில்லியாக மாறியுள்ள சம்பவம் காவல்துறையை மட்டுமல்லாது சினிமாத்துறையையும் கலங்கடித்துள்ளது.

சென்னை போலீஸார் நேற்று பத்மாவதி என்ற நடிகை மற்றம் அவரது கூட்டாளிகள் மூன்று பேரைக் கைது செய்தனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டு இதுதான்:

பத்மாவதிக்கும், சென்னையில் வசிக்கும் பிரதீப் கோனேரு என்கிற ஆந்திர தொழிலதிபருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக கிண்டியில் உள்ள சினிமா ஸ்டார்கள் பலரும் அடிக்கடி போகும் பிரபலமான ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு பத்மாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார் பிரதீப்.

உல்லாசத்தின் உச்சத்தில் பிரதீப் இருந்தபோது அவருக்குத் தெரியாமலேயே தன்னுடன் அலங்கோல நிலையில் பிரதீப் இருந்ததை புகைப்படம் எடுத்துள்ளார் பத்மாவதி. இதற்கு அவருடைய நண்பர்களான அமீர்ஜான், சந்திரன், சஞ்சய் ஆகியோர் உதவியுள்ளனர்.

பின்னர் இந்தப் படத்தை பிரதீப்பிடம் காட்டி, ரூ. 10 கோடி பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் இவை எல்லாம் பத்திரிக்கைகளில் வந்து உனது வாழ்க்கையே போய் விடும் என்று துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.

அந்தக் கும்பலிடமிருந்து எப்படியோ தப்பி வந்த பிரதீப் போலீஸுக்குத் தகவல் கொடுக்க போலீஸார் விரைந்து வந்து பத்மா மற்றும் அவரது கும்பலை மடக்கிப் பிடித்துள்ளனர்.

சினிமா வட்டாரத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், பத்மாவதி வேறு யாரும் அல்ல, விஜய டி.ராஜேந்தரால் அவரது வீராசாமி படத்தில் அறிமுகப்படுத்தப் பட்டவர்தான் இந்த பத்மா.

பத்மா நாராயணன் என்ற பெயரில் வீராசாமி படத்தில் 2வது நாயகியாக நடித்திருக்கிறார் இவர். அப்படத்தில் இவரது கேரக்டருக்குப் பெயர் ரவுசு ராணி. இப்படத்தில் பத்மாவின் நடிப்பால் மிரண்ட ராஜேந்தர், தனது அடுத்த படத்தில் மெயின் ஹீரோயினாக உன்னைப் போடுகிறேன் என்று வாக்களித்தாராம்.

இந்தப் படம் தவிர வேறு சில படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார் பத்மா. அதுதவிர டிவி தொடர்கள் சிலவற்றிலும் தலை, உடல் காட்டியுள்ளார். மேலும் மாடலிங்கிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இது எதிலுமே அவருக்கு சரியான வரும்படி வரவில்லை. ஆனால் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பத்மாவுக்கு இது சரிப்பட்டு வரவில்லை. வேறு எந்த வழியிலாவது பெரும் பணக்காரியாக வேண்டும் என்று திட்டமிட்ட அவர் விபச்சாரத்தை கையில் எடுத்தார்.

தனது அழகுத் தோற்றத்தால் பெரும் புள்ளிகளை மடக்கி அவர்களை உற்சாகப்படுத்தி, உல்லாசத்தில் மூழ்கடித்து பணத்தைக் கறந்து வந்துள்ளார். அப்போதுதான் பிரதீப் இவர் வசம் சிக்கியுள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு பெங்களூரில் நடந்த ஒரு பேஷன் ஷோவைக் காண சென்றிருந்தார் பிரதீப். அதில் கலந்து கொண்டு கேட் வாக் போட்ட பத்மாவைப் பார்த்து மெய் மறந்தார். அவரை அணுகி உல்லாசத்திற்கு கேட்டுள்ளார். அவரும் ஒத்துக் கொண்டார். பெங்களூரில் பத்மாவுடன் உல்லாசமாக இருந்த பிரதீப்புக்கு அவரை வெகுவாகப் பிடித்துப் போய் விட்டது.

பத்மாவுடன் சநதோஷமாக இருந்த களிப்பில் ஊர் திரும்பினார். கடந்த 24ம் தனது நண்பர் நிர்மல் என்பவருடன் கிண்டியில் உள்ள ஸ்டார் ஹோட்டலுக்கு வந்தார் பிரதீப். அப்போது அவருக்கு பத்மாவின் நினைவு வந்தது. உடனே போன் போட்டுக் கூப்பிட்டார்.

பத்மாவும் தனது நண்பரும், துணை நடிகருமான சஞ்சய் என்பவருடன் அங்கு வந்தார். பின்னர் நான்கு பேரும் உற்சாகமாக தண்ணி அடித்துள்ளனர். அதன் பிறகு பத்மாவும், பிரதீப்பும் அறைக்குள் போய் ஜாலியை ஆரம்பித்துள்ளனர்.

இந் நிலையில் திடீரென உள்ள நுழைந்த சஞ்சய் வீடியோவில் அப்போது அந்த காட்சியை ஷூட் செய்ய ஆரம்பித்தார். இதைப் பார்த்ததும் பதறிப் போன பிரதீப், என்ன செய்கிறாய் என்று கோபமாக கத்தியுள்ளார். ஆனால் அதைக் கண்டு கொள்ளாத சஞ்சய், காட்சிகளை படம் பிடிப்பதிலேயே குறியாக இருந்துள்ளார்.

அப்போது அரைகுறை ஆடைகளுடன் நின்ற பத்மா, இப்போது பேசாமல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நீ என்னைக் கற்பழித்து விட்டாய் என போலீஸில் புகார் கொடுப்பேன் என்று கோபமாக கூறினார். மேலும் அங்கிருந்த பழம் நறுக்கும் கத்தியால் தனது கையைக் கிழித்துக் கொண்டு நீதான் குத்தி விட்டாய் என்றும் சொல்வேன் என நாடகமாடியுள்ளார்.

இதைப் பார்த்ததும் பிரதீப் பயந்து விட்டார். பின்னர் மறுபடியும் ஜாலியாக இரு, படம் பிடிக்க வேண்டும் என சஞ்சய் கூறியுள்ளார். பிரதீப் மறுக்கவே, இல்லாவிட்டால் போலீஸுக்குப் போவோம் என்று சஞ்சய் மிரட்டியுள்ளார்.

இதனால் பிரதீப், பத்மாவுடன் மறுபடியும் உருண்டுள்ளார். அத்தனைக் காட்சிகளையும் நீக்கமற எடுத்து முடித்த பின்னர் இப்போது ரூ. 10 லட்சம் பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் படத்தை உனது குடும்பத்தினரிடம் போட்டுக் காட்டுவோம் என்று மிரட்டியுள்ளனர் பத்மாவும், சஞ்சய்யும்.

இதையடுத்து தனது மேலாளரை போனில் அழைத்த பிரதீப், அவரிடமிருந்து ரூ. 6 லட்சம் பணத்தை வாங்கி பத்மாவிடம் கொடுத்துள்ளார். அதற்கு பத்மா, மீதப் பணத்தைக் கொடுத்து விட்டு இதை வாங்கிச் செல்லுங்கள் என்று கூறி பிரதீப்பின் லேப்டாப் கம்ப்யூட்டர், 3 செல்போன்கள், 5 கிரெடிட் கார்டுகளைப் பிடுங்கி வைத்துக் கொண்டார்.

பின்னர் தங்களை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இறக்கி விட்டு விடுமாறு பிரதீப்பிடம் அவர்கள் கூறியுள்ளனர். அதன்படி பிரதீப்பும் அவர்களை ஆழ்வார்ப்பேட்டையில் இறக்கி விட்டுள்ளார்.

அங்கு போன பின்னர் பிரதீப்பின் லேப்டாப் கம்ப்யூட்டரை இயக்கியுள்ளார் பத்மா. அப்போதுதான் பிரதீப் பெரும் பணக்காரர் என்றும், அவருக்கு வெளிநாட்டிலிருந்து கோடிக்கணக்கில் பணம் வரவுள்ளதும் தெரிய வந்தது.

இதையடுத்து பிரதீப்புக்குப் போன் போட்டு ரூ. 10 கோடி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இல்லாவிட்டால் படத்தை உனது மனைவி உள்பட அனைவருக்கும் போட்டுக் காட்டுவேன் என்று பத்மா மிரட்டியுள்ளார்.

இதற்கு மேலும் அமைதி காத்தால் பொழப்பு நாறிடும் என்று முடிவு செய்த பிரதீப், உடனடியாக போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்து பத்மாவதி கும்பலை வளைத்துப் பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர்.

இந்த நிலையில்தான் பத்மாவே, பிரதீப்புக்குப் போன் செய்து எனக்கு நகை வாங்கித் தா என்று கூறியுள்ளார். இதை போலீஸாரிடம் தெரிவித்தார் பிரதீப். பத்மா சொல்வது போல செய்யுமாறு போலீஸார் கூறினார். அவரை மாறு வேடத்தில் பின் தொடர்ந்தனர்.

கதீட்ரல் சாலையில் உள்ள நகைக் கடைக்கு பத்மா வரச் சொன்னார். அங்கு பிரதீப்பும் சென்றார். அங்கு வைத்து போலீஸார் பத்மாவை மடக்கிப் பிடித்தனர். அந்த இடத்திற்கு பத்மாவின் கூட்டாளிகளான சஞ்சய், அமீர்ஜான், சந்திரன் ஆகியோரும் வரவே அவர்களும் வசமாக சிக்கிக் கொண்டனர்.

நான்கு பேரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

நடிகையாக மாறிய பத்மா ஏன் இப்படி வில்லத்தனம் செய்தார் என்று சந்திரன் போலீஸாரிடம் கூறுகையில்,

பத்மாவதிக்கு இப்போது 30 வயதாகி விட்டது. அவருக்கு முன்பு போல மாடலிங் வாய்ப்பு சிறப்பாக இல்லை சினிமாவிலும் சரிவர வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால்தான் விபச்சாரத்தில் இறங்கினார்.

எனக்கு பத்மாவை நீண்ட நாட்களாக தெரியும். அவருக்குத் துணையாக நானும் செயல்பட்டு வந்தேன். நான் சில சினிமாக்களில் நடித்துள்ளேன். பல டிவி தொடர்களிலும் நடித்துள்ளேன் என்றார் சந்திரன்.

ஹீரோயினாக நடிக்க வந்து, வில்லியாக மாறி விட்ட பத்மாவின் செயலை கோலிவுட்டில் கதை கதையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil