For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பத்தூ.. பத்தூ... இலியனா, நிலா, அக்ஷிதா, சலோனி என்று கண்டமேனிக்கு பல புதுப் புதுப் பெயர்களில் நடிகைகள்பிளைட்டிலும், ரயிலிலும், தள்ளு வண்டியிலும் கோலிவுட்டுக்குள் வந்திறங்கி கும்மியடித்துக் கொண்டிருக்கும்நிலையில்,அந்த காலப் பேரான பத்மினி என்ற நாமகரணத்துடன் வந்திறங்கியிருக்கிறது ஒரு குஜிலி...பாப்பா.ஏவிஐ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நெஞ்சுக்குள் நீ என்ற படத்தில் கிளாமர் பஞ்சுக்குத் தீ வைக்கவந்திறங்கியிருக்கிறார் பத்தூ.ஆந்திராவைச் சேர்ந்த இந்த பத்மாவுக்கு (எத்தன பேரு..? எல்லாம் செல்லப் பேரு) முதல் படமே இது தானாம்.கலைத் தாகம் அதிகமானதால் படிப்பு மண்டையில் ஏறுவது நின்று போய்விடவே, படிப்பை முடித்துவிட்டு (அப்படியே பாதியில் விட்டுவிட்டு) மாடலிங் செய்யவும், கேட் வாக் செய்யவும் ஆசைப்பட்டவரை கோலிவுட்டின்கோக் மாக் ஆட்கள் கண்டுபிடித்து கொண்டு வந்துவிட்டனர். படத்தில் இரண்டு ஹீரோக்கள் (சதீஷ் ராஜ், ரவிசங்கர்).. ஒரு ஹீரோயின்.. அப்ப கதை என்ன? உங்களுக்குத்தெரியாதா என்ன? ஒரு முக்கோணத்தை (முக்கோண காதலை) போடுங்குறேன்.இதில் ஒரு லவ் டூ-வே லவ்வாம்.. இன்னொன்று ஒன்-வே லவ்வாம். மான் போல துள்ளி விளையாடும்பருவத்தில் (சீயக்காய், ஷாம்பு விளம்பரம் மாதிரி இருக்கா?) இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் இருவரும்(ஒருத்தரு நல்லவரு.. இன்னொருத்தரு கெட்டவரு) புகுந்து விளையாடுவது தான் திரைக் கதையாம்.படத்தை மிக வித்தியாசமாக எடுக்கப் போவதாக கோலிவுட்டில் எல்லா டைரக்டர்களும் சொல்வதையே எந்தவித்தியாசமும் இல்லாமல் சொல்கிறார் இயக்குனர் ரஜ்னீஷ் (பேரு படு வில்லங்கமா இருக்கே).படத்தில் சவீதா ஆனந்த், நிழல்கள் ரவி ஆகிய நல்ல நடிகர்களும் இருக்கிறார்கள். சூட்டிங்கை மாலத்தீவு,ஆஸ்திரேலியா என வித்தியாசமான பல லொக்கேசன்களில் சூட் செய்யப் போகிறார் ஓஷோ... ஸாரி, ரஜ்னீஷ்.பல இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றியுள்ள ரஜ்னீஷ் தான் டைரக்ஷனோடு கதை, திரைக்கதையையும் எழுதி, இசையும் அமைக்கப் போகிறாராம்.அப்ப கோலிவுட்டுக்கு இன்னொரு டி.ஆரு ரெடி..!தட்டிப் பார்த்தேன், கொட்டாங்குச்சி...

    By Staff
    |

    இலியனா, நிலா, அக்ஷிதா, சலோனி என்று கண்டமேனிக்கு பல புதுப் புதுப் பெயர்களில் நடிகைகள்பிளைட்டிலும், ரயிலிலும், தள்ளு வண்டியிலும் கோலிவுட்டுக்குள் வந்திறங்கி கும்மியடித்துக் கொண்டிருக்கும்நிலையில்,

    அந்த காலப் பேரான பத்மினி என்ற நாமகரணத்துடன் வந்திறங்கியிருக்கிறது ஒரு குஜிலி...பாப்பா.

    ஏவிஐ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நெஞ்சுக்குள் நீ என்ற படத்தில் கிளாமர் பஞ்சுக்குத் தீ வைக்கவந்திறங்கியிருக்கிறார் பத்தூ.

    ஆந்திராவைச் சேர்ந்த இந்த பத்மாவுக்கு (எத்தன பேரு..? எல்லாம் செல்லப் பேரு) முதல் படமே இது தானாம்.

    கலைத் தாகம் அதிகமானதால் படிப்பு மண்டையில் ஏறுவது நின்று போய்விடவே, படிப்பை முடித்துவிட்டு (அப்படியே பாதியில் விட்டுவிட்டு) மாடலிங் செய்யவும், கேட் வாக் செய்யவும் ஆசைப்பட்டவரை கோலிவுட்டின்கோக் மாக் ஆட்கள் கண்டுபிடித்து கொண்டு வந்துவிட்டனர்.

    படத்தில் இரண்டு ஹீரோக்கள் (சதீஷ் ராஜ், ரவிசங்கர்).. ஒரு ஹீரோயின்.. அப்ப கதை என்ன? உங்களுக்குத்தெரியாதா என்ன? ஒரு முக்கோணத்தை (முக்கோண காதலை) போடுங்குறேன்.

    இதில் ஒரு லவ் டூ-வே லவ்வாம்.. இன்னொன்று ஒன்-வே லவ்வாம். மான் போல துள்ளி விளையாடும்பருவத்தில் (சீயக்காய், ஷாம்பு விளம்பரம் மாதிரி இருக்கா?) இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் இருவரும்(ஒருத்தரு நல்லவரு.. இன்னொருத்தரு கெட்டவரு) புகுந்து விளையாடுவது தான் திரைக் கதையாம்.

    படத்தை மிக வித்தியாசமாக எடுக்கப் போவதாக கோலிவுட்டில் எல்லா டைரக்டர்களும் சொல்வதையே எந்தவித்தியாசமும் இல்லாமல் சொல்கிறார் இயக்குனர் ரஜ்னீஷ் (பேரு படு வில்லங்கமா இருக்கே).

    படத்தில் சவீதா ஆனந்த், நிழல்கள் ரவி ஆகிய நல்ல நடிகர்களும் இருக்கிறார்கள். சூட்டிங்கை மாலத்தீவு,ஆஸ்திரேலியா என வித்தியாசமான பல லொக்கேசன்களில் சூட் செய்யப் போகிறார் ஓஷோ... ஸாரி, ரஜ்னீஷ்.

    பல இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றியுள்ள ரஜ்னீஷ் தான் டைரக்ஷனோடு கதை, திரைக்

    கதையையும் எழுதி, இசையும் அமைக்கப் போகிறாராம்.அப்ப கோலிவுட்டுக்கு இன்னொரு டி.ஆரு ரெடி..!

    தட்டிப் பார்த்தேன், கொட்டாங்குச்சி...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X