வெறும் 500 ரூபாய் முன்பணமாக வைத்து துவக்கப்பட்ட திரைப்படம்... 175 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது எப்படி?
சென்னை: நான்கு நண்பர்கள் மற்றும் ஒரு இளம் பெண்ணை மையகருவாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் "பாலைவனச் சோலை"
காதல் இல்லாமல் ஆண் நண்பர்கள் இளம்பெண்ணுடன் ஒன்றாக இருக்க முடியும் என்று சொல்லப்பட்ட முதல் தமிழ் திரைப்படம்.
இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் வடிவேலு இந்த திரைப்படத்தை தொடங்கும் போது வெறும் 500 ரூபாயை வைத்து இந்த திரைப்படத்தின் வேலைகளை தொடங்கியதாக கூறப்படுகிறது.

புரொடக்சன் மேனேஜராக இருந்த வடிவேலு
ஆரம்ப காலகட்டத்தில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் வடிவேலு சில திரைப்படங்களில் ப்ரொடக்ஷன் மேனேஜராக வேலை செய்து கொண்டிருந்தார். ரஜினிகாந்த் நடித்த காளி திரைப்படத்தின் பாடல் கம்போசிங் செய்கின்ற சமயத்தில் கண்ணதாசன் சீக்கிரமே வந்திருக்கிறார். அன்று இயக்குநர் மறறும் இசையமைப்பாளர் யாரும் வரவில்லை, அப்பொழுது கவிஞர் கண்ணதாசன் மேனேஜர் வடிவேலிடம் சர்க்கரை இல்லாமல் டீ வாங்கி வர சொல்லி இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ராஜசேகர் சந்திப்பு
அவர் டீ வாங்குவதற்காக ஒரு டீக்கடையில் நின்று கொண்டு இருந்த பொழுது, ஒளிப்பதிவாளர் ராஜசேகரை தயாரிப்பாளர் வடிவேலு தற்செயலாக சந்தித்து பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் நீங்க இன்னும் எத்தனை நாட்களாக இப்படியே ப்ரொடக்சன் மேனேஜராக வேலை செய்து கொண்டிருப்பீர்கள் என்று அறிவுரை கூற, நீங்கள் ஏதாவது ஒரு படத்தை தயாரிக்க முன் வர வேண்டும் என்று கூறியிருக்கிறார். பின்பு அந்த திரைப்படத்தை நானே உங்களுக்கு இயக்கிக் கொடுக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

தயாரிப்பதற்கு உதவி செய்த சாருஹாசன்
அப்பொழுதே தயாரிப்பாளர் வடிவேலு உதவியாளரிடம் இவர் கையில் இருந்த 500 ரூபாய் எடுத்துக் கொடுத்து ஹோட்டல் புக் செய்து கொடுக்குமாறு சொல்லிவிட்டு ராஜசேகரிடம் நீங்க டிஸ்கசன் தொடங்குங்கள் நான் என்னுடைய ப்ரொடக்ஷன் வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு சந்திப்பதாக சொல்லி இருக்கிறார். சாருஹாசனிடம் இந்த திரைப்படத்தை தயாரிப்பதுற்கு பணம் தேவை என்று கேட்டபோது அவர் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவியிருக்கிறார், இந்த பணத்தை வைத்து ஐந்து பாடல்கள் ரீ ரெக்காடிங் முடித்திருக்கிறார் இசையமைப்பாளர்.

பாலைவனச் சோலை
ஒளிப்பதிவாளர் ராபர்ட் இந்த திரைப்படத்தை சென்னை நகர விநியோகஸ்தருக்கு திரைப்படத்தின் உரிமையை விற்று கொடுத்ததன் மூலம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் தயாரிப்பாளர் வடிவேலுக்கு கிடைத்திருக்கிறது. இந்த பணத்தை வைத்து மொத்த தயாரிப்பு செலவையும் செய்திருக்கிறார், இந்த திரைப்படம் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடியதோடு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது என்று எழுத்தாளர் சுறா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











