பழசிராஜா கனிகா, லட்சுமி ராய்

By Staff

மலையாளத் திரையுலகின் முதல் மெகா பட்ஜெட் படமான, பழசிராஜா கிறிஸ்துமஸ் தினத்தன்று ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத் திரையுலகில் பெரிய பட்ஜெட் படங்கள் பெரும்பாலும் எடுக்கப்படுவதில்லை. முடிந்தவரை கேரளாவுக்குள்ளேயே ஷூட்டிங்கை வைத்து படத்தை முடித்து விடுவார்கள். ரொம்ப அரிதாகவே கரை கடந்து பிற ஊர்களுக்குப் படப்பிடிப்பு இடம் பெயரும்.

இந்த நிலையில், பெரும் பொருட்செலவில் மலையாளத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது. படத்திற்குப் பெயர் பழசிராஜா. படத்தின் பட்ஜெட் ரூ.6 கோடி!

இதுவரை இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் மலையாளப் படங்கள் எடுக்கப்பட்டதில்லையாம். இதனால் இந்தப் படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மம்முட்டி நாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிக்கிறார். மம்முட்டிக்கு ஜோடியாக கனிகா நடிக்கிறார். இவர்கள் தவிர, பத்மப்ரியா, லட்சுமி ராய் ஆகியோரும் திறமை காட்டுகிறார்கள்.

லட்சுமி ராய்க்கு இப்படத்தில் படு கிளாமரான ரோலாம். முழுத் திறமையையும் கொட்டி நடித்துள்ளாராம் ராய்.

எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதை அமைக்க, ஹரிஹரன் இயக்கியுள்ளார்.

படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. செப்டம்பருக்குள் படப்பிடிப்பு முடிந்து விடுமாம். அதன் பின்னர் ஒரு மாதம் டப்பிங் உள்ளிட்ட வேலைகள் நடைபெறும். கிறிஸ்துமஸ் தினத்தன்று பழசிராஜா திரைக்கு வரும் என்று ஹரிஹரன் கூறியுள்ளார்.

சரத்குமார் நடித்துள்ள முதல் மலையாளப் படம் என்பதால் இந்தப் படம் தமிழகத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X