»   »  தங்கரை பாராட்டிய கருணாநிதி-ரஜினி

தங்கரை பாராட்டிய கருணாநிதி-ரஜினி

Subscribe to Oneindia Tamil

உணர்ச்சி இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள பள்ளிக்கூடம் படத்தை முதல்வர் கருணாநிதியும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் பார்த்து விட்டு மனதார பாராட்டியுள்ளனர்.

தங்கர் பச்சான் இயக்கத்தில் கட்டப்பட்டுள்ள பள்ளிக்கூடம் ஸ்னேகா, நரேன், இயக்குநர் சீமான், தங்கர் பச்சான் ஆகியோரது நடிப்பில் எழிலுற உருவாகியுள்ளது.

இப்படத்தின் சிறப்புக் காட்சி முதல்வர் கருணாநிதிக்காக போர் பிரேம்ஸ் பிரிவியூ தியேட்டரில் திரையிடப்பட்டது. துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி ஆகியோருடன் பள்ளிக்கூடம் படத்தைப் பார்த்தார் கருணாநிதி.

கருணாநிதி குடும்பத்தினரை தனது மனைவியுடன் வரவேற்று படம் பார்க்க அழைத்துச் சென்றார் தங்கர் பச்சான். படத்தை ரசித்துப் பார்த்த கருணாநிதி, படம் பார்த்து முடித்தவுடன் தங்கர் பச்சானை வெகுவாகப் பாராட்டினார்.

கதையும், படத்தின் கருவும் ரொம்ப வித்தியாசமா இருக்கு, நல்லா டைரக்ட் பண்ணியிருக்கீங்க.. எல்லோர் நெஞ்சிலும் புதைந்திருக்கும் பள்ளிக் கூட நினைவுகளை, சிதைந்து, சிதிலமாகியுள்ள பல பள்ளிக் கூடங்கள் குறித்த விழிப்புணர்வை படத்தில் தத்ரூபமாக கொண்டு வந்திருக்கீங்க என்று தங்கரை பாராட்டினார் கருணாநிதி.

அதேபோல, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்ததும், இப்படத்தை நேற்றுப் பார்த்தார். படத்தின் தயாரிப்பாளரான விஸ்வாஸ் சுந்தர், ரஜினிக்காக இப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். ரஜினியும் படத்தைப் பார்த்து விட்டு தங்கர் பச்சானின் திறமையைப் பாராட்டினாராம்.

பள்ளிக்கூடம் ஏற்கனவே கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளத் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் படத்தைத் திரையிடாமல் நிராகரித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அது நிச்சயமாக தமிழ் சினிமாவுக்கோ அல்லது பச்சானுக்கோ ஏற்பட்ட அவமரியாதை இல்லை. மாறாக நல்ல தமிழ் சினிமாக்களின் தரத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பை கேன்ஸ் இழந்து விட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சீக்கிரமா பள்ளிக்கூடத்தைத் திறந்து விடுங்க பச்சான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil