பாபநாசத்தில் ஒரு நரி!

முதல் படம் சீரியஸ் டைப் என்பதால் இந்தப் படத்தை முழுக்க முழுக்க காமெடிப் படமாக தரவிருக்கிறாராம் ஹரி சரண்.
ஒரு பிராமணப் பையனுக்கும் நரிக்குறவப் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் மோதல் நட்பு, அதைத் தொடர்ந்து வரும் சம்பவங்களே பாபநாசத்தில் ஒரு நரி என்ற படடமாக மலர்கிறது என்கிறார் ஹரி சரண்.
மொத்தம் மூன்று ஹீரோ ஹீரோயின்களாம். அவர்களில் இப்போது உறுதியாகியிருப்பது சம்பத் மற்றும் பியாதானாம்.
இந்தப் படத்தைத் தயாரிப்பவர் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் உமேஷ் மெஹ்ரா. மது அம்பாட் ஒளிப்பதிவு செய்கிறார்.
இசைஞானி இளையராஜாவை இசையமைக்குமாறு கேட்டுக் கொண்டாராம் இயக்குநர். கதையைக் கேட்டுவிட்டு சிரித்துக்கொண்டே அவரும் ஓகே சொன்னாராம்.
Comments


Click it and Unblock the Notifications