ராஜு சுந்தரத்திற்கு ஆப்பு! தனுஷ் நடிக்கும் பரட்டை என்கிற அழகுசுந்தரம் படத்தை இயக்குவதாக இருந்த டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரத்தை நீக்கி விட்டார்கள். அவருக்குப் பதில் ரஜினியின் ஒரு காலத்திய ஃபேவரைட் இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா இயக்கப் போகிறாராம்.கன்னடத்தில் வெளியாகி பெரும் ஹிட் ஆன படம் ஜோகி. சிவராஜ் குமார் நடித்த இப்படத்தைப் பார்த்தரஜினிகாந்த், மாப்பிள்ளை தனுஷை கூப்பிட்டு இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்தால் அதில் நீங்கள்நடியுங்கள் என்று பரிந்துரைத்துள்ளார்.ஜோகி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி வைத்திருந்த இயக்குநர் கேயாரிடம் இதைத் தெரிவித்துள்ளார்.இதையடுத்து தனுஷ், மீரா ஜாஸ்மின் ஜோடியில் ஜோகி படத்தின் ரீமேக்கை அறிவித்தார் கேயார். இப்படத்தின்மூலம் நடிகை அர்ச்சனா மீண்டும் நடிக்க வந்துள்ளார்.படத்தை டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம் இயக்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போதுராஜுவைத் தூக்கி விட்டாராம் கேயார். என்னவென்று விசாரித்தபோது தெரிய வந்தது: படத்திற்கு ராஜுவை புக்செய்தபோதே, இந்தப் படம் முடியும் வரை வேறு படத்தை இயக்கக் கூடாது, வேறு படங்களுக்கு டான்ஸ்அமைக்கக் கூடாது என்ற கண்டிஷனுடன்தான் கேயார் ஒப்பந்தம் செய்துள்ளார்.ஆனால் அதை கண்டுகொள்ளாத ராஜு சுந்தரம், படப்பிடிப்பே தொடங்காத நிலையில் சில தெலுங்குப்பாடல்களுக்கு டான்ஸ் அமைக்க வேண்டியுள்ளது. அதை முடித்து விட்டு பரட்டையை ஆரம்பிக்கலாம் என்றுகேயாரிடம் கூறியுள்ளார்.கடுப்பான கேயார், இந்தப் பஞ்சாயத்தே வேண்டாம், நீங்க தெலுங்குக்குப் போங்க, நான் வேற ஆளை பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி ராஜுவுக்கு கல்தா கொடுத்து விட்டாராம். சூட்டோடு சூடாக சுரேஷ்ேகிருஷ்ணாவையும் இயக்குநராக ஒப்பந்தம் செய்து விட்டாராம்.விஜயதசமி தினத்தன்று தொடங்கியிருக்க வேண்டிய படம் இப்போது தாமதமாக வருகிற 25ம் தேதி பூஜைபோடப்பட்டு அன்றே ஷூட்டிங்கும் ஆரம்பிக்கிறதாம்.ரஜினிக்கு வீரா, அண்ணாமலை, பாட்ஷா என சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர் சுரேஷ் கிருஷ்ணா.துரதிர்ஷ்டவசமாக பாபா மூலம் ரஜினிக்கு அப்செட்டையும் கொடுத்தவர் சுரேஷ்தான். இப்போது மாப்பிள்ளைதனுஷ் பெரும் நம்பிக்கை வைத்திருக்கும் பரட்டையை ஒரு கை பார்க்க வருகிறார் சுரேஷ் கிருஷ்ணா.

By Staff
தனுஷ் நடிக்கும் பரட்டை என்கிற அழகுசுந்தரம் படத்தை இயக்குவதாக இருந்த டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரத்தை நீக்கி விட்டார்கள். அவருக்குப் பதில் ரஜினியின் ஒரு காலத்திய ஃபேவரைட் இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா இயக்கப் போகிறாராம்.

கன்னடத்தில் வெளியாகி பெரும் ஹிட் ஆன படம் ஜோகி. சிவராஜ் குமார் நடித்த இப்படத்தைப் பார்த்தரஜினிகாந்த், மாப்பிள்ளை தனுஷை கூப்பிட்டு இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்தால் அதில் நீங்கள்நடியுங்கள் என்று பரிந்துரைத்துள்ளார்.

ஜோகி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி வைத்திருந்த இயக்குநர் கேயாரிடம் இதைத் தெரிவித்துள்ளார்.இதையடுத்து தனுஷ், மீரா ஜாஸ்மின் ஜோடியில் ஜோகி படத்தின் ரீமேக்கை அறிவித்தார் கேயார். இப்படத்தின்மூலம் நடிகை அர்ச்சனா மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

படத்தை டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம் இயக்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போதுராஜுவைத் தூக்கி விட்டாராம் கேயார். என்னவென்று விசாரித்தபோது தெரிய வந்தது: படத்திற்கு ராஜுவை புக்செய்தபோதே, இந்தப் படம் முடியும் வரை வேறு படத்தை இயக்கக் கூடாது, வேறு படங்களுக்கு டான்ஸ்அமைக்கக் கூடாது என்ற கண்டிஷனுடன்தான் கேயார் ஒப்பந்தம் செய்துள்ளார்.

ஆனால் அதை கண்டுகொள்ளாத ராஜு சுந்தரம், படப்பிடிப்பே தொடங்காத நிலையில் சில தெலுங்குப்பாடல்களுக்கு டான்ஸ் அமைக்க வேண்டியுள்ளது. அதை முடித்து விட்டு பரட்டையை ஆரம்பிக்கலாம் என்றுகேயாரிடம் கூறியுள்ளார்.

கடுப்பான கேயார், இந்தப் பஞ்சாயத்தே வேண்டாம், நீங்க தெலுங்குக்குப் போங்க, நான் வேற ஆளை பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி ராஜுவுக்கு கல்தா கொடுத்து விட்டாராம். சூட்டோடு சூடாக சுரேஷ்ேகிருஷ்ணாவையும் இயக்குநராக ஒப்பந்தம் செய்து விட்டாராம்.

விஜயதசமி தினத்தன்று தொடங்கியிருக்க வேண்டிய படம் இப்போது தாமதமாக வருகிற 25ம் தேதி பூஜைபோடப்பட்டு அன்றே ஷூட்டிங்கும் ஆரம்பிக்கிறதாம்.ரஜினிக்கு வீரா, அண்ணாமலை, பாட்ஷா என சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர் சுரேஷ் கிருஷ்ணா.துரதிர்ஷ்டவசமாக பாபா மூலம் ரஜினிக்கு அப்செட்டையும் கொடுத்தவர் சுரேஷ்தான். இப்போது மாப்பிள்ளைதனுஷ் பெரும் நம்பிக்கை வைத்திருக்கும் பரட்டையை ஒரு கை பார்க்க வருகிறார் சுரேஷ் கிருஷ்ணா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X