டெலிவிஷன் சீரியலில் இணையும் பார்த்திபன் - கவுதம் மேனன்!!

By Shankar

Gautham Menon and Parthiban
நடிகர் பார்த்திபனும் இயக்குநர் கவுதம் மேனனும் சின்னத்திரையில் கலக்க வருகிறார்கள்.

ஒரு விறுவிறுப்பான துப்பறியும் தொடரை தரப்போகிறார்களாம் இருவரும். சின்னத் திரையில் ஒரு பெரிய திரை அனுபவத்தைத் தரும் அளவுக்கு பரபரப்பும் புதுமையும் நிறைந்த கச்சிதமான தொடராக இருக்கும் என இயக்குநர் கவுதம் மேனன் கூறியுள்ளார்.

இதுகுறித்து பார்த்திபன் கூறுகையில், "தொலைக்காட்சித் தொடரில் நடிப்பது உண்மைதான். ஆனால் இந்த முயற்சி மிக வித்தியானமாதாகவும், இதுவரை யாரும் செய்யாத முயற்சியாகவும் இருக்கும். சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடந்த டைரக்டர் 40- நிகழ்ச்சியின்போதுதான் இதுகுறித்த திட்டம் உருவானது. இந்தத் தொடரை தயாரித்து இயக்கவிருப்பவர் கவுதம் மேனன்தான்," என்றார்.

சரி... வித்தகன் என்னாச்சு?

"அது சிறப்பா வந்திருக்கு. பின்னணி இசைப் பணிகள் நடந்துகிட்டிருக்கு. படம் பார்த்தவர்கள் அத்தனைப் பேரும் ரொம்பப் பாராட்டினார்கள். நிச்சயம் புதிய அனுபவத்தைத் தரும் படமா வித்தகன் அமையும். கடைசி ஒரு பாடல் காட்சி இருக்கு. அதை போலந்தில் படமாக்கப் போகிறேன். இதுவரை தமிழ் சினிமா போகாத தேசம் அது," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X