கொரிய திரைப்பட விழாவில் பார்த்திபன் படம் மேல் விலாசம்!

இயக்குநர் பார்த்திபன் ஹீரோவாக நடித்துள்ள படம் மேல் விலாசம். மாதவ் ராமதாசன் இயக்கியுள்ளார்.
கொரியாவில் ஆண்டுதோறும் பூசோன் நகரில் சர்வதேச திரைப்பட நடக்கிறது. இந்த விழாவில் சிறப்புத் திரையிடலுக்கு இந்தப் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 'எ விண்டோ ஆன் ஆசியன் சினிமா' என்ற பிரிவில் இந்தப்படம் திரையிடப்படுகிறது.
உலகம் முழுவதுமிருந்து வரும் திரைப்பட கலைஞர்கள் இந்தப் படத்தை பார்வையிடுகின்றனர்.
பூசோன் திரைப்பட விழாவில் ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் படம் தேர்வாகி, திரையிடப்பட்டது. இரண்டு தினங்கள் திரையிடப்பட்ட இந்தப் படத்தைக் காண கூட்டம் குவிந்ததில் டிக்கெட்டுகள் தீர்ந்து போனது நினைவிருக்கலாம்.
இப்போது அடுத்த தமிழ்ப் படமாக மேல் விலாசம் தேர்வாகியுள்ளது.
Comments
film festival பார்த்திபன் மேல் விலாசம் parthiban mel vilasam korean film festival கொரிய திரைப்பட விழா


Click it and Unblock the Notifications